எடப்பாடி பழனிசாமியால், அதிமுக, அழிவு நிலைக்கு சென்றுள்ளது என புலம்பும்! அதிமுகவினர்! அதிருப்தியும், வேதனையும் தெரிவிப்பது ஏன்?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

முதல்வர் விஜய் இடமிருந்து ,எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கேட்டு தூது அனுப்பி இருக்கிறார்கள்.

இவர் ஒரே பிடிவாதமாக தான், தான் முதலமைச்சர் என்று முதலில் சொல்லியிருக்கிறார். அது முடியாது இன்னும் இரண்டு அமைச்சர்களை கூட கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று விஜய் தரப்பில் இருந்து பதில் போயிருக்கிறது.

மேலும்,அதற்கு பழனிசாமி என்ன சொல்லி இருக்கிறார் என்றால்?, நீ 2. 1/2 வருடம், நான் 2.1/2 வருடம் முதலமைச்சர் என்று பங்கு கேட்டிருக்கிறார். அதற்கு ஒத்துவராதவராக விஜய், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அணுகி இருக்கிறார். இதில் என்ன தவறு?

இதன்பிறகு, கட்சியில் உள்ள எஸ்.பி .வேலு மணி ,சி வி. சண்முகம், விஜயபாஸ்கர் ,இந்த 25 எம்எல்ஏக்கள் கூட்டம் ,எடப்பாடி பழனிசாமி இடம் எவ்வளவோ பேசி பார்த்திருக்கிறார்கள்.

மேலும், அவர்கள்,கட்சியை காப்பாற்றலாம். மக்களிடம் செல்வாக்கை ,மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று யோசனை சொல்லியும், யாருடைய கருத்தையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொள்வதாக இல்லை.

மேலும்,ஜெயலலிதாவாவது சூழ்நிலைக்கு தக்கவாறு ,எது நல்லது ?எது கெட்டது? என்று முடிவு எடுத்து ,அதன்படி வளைந்து கொடுக்கும் தன்மையோடு போய்விடுவார்.

ஆனால், இவர் எதற்கும் வளையாமல் தான் மட்டுமே கட்சி,தான் மட்டுமே முதலமைச்சர் ,என்ற ஒரே கொள்கையில் இவர் இருந்து கொண்டிருக்கிறார். அதன் விளைவு தான் இன்று அதிமுகவுக்கு மிகப்பெரிய மைனஸ் என்று அக் கட்சியினர் புலம்புகின்றனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமியால் ஒரு பக்கம் தோல்விகள் தொடர்ந்து கட்சிக்கு போய்க் கொண்டிருந்தாலும்,மறு பக்கம் கட்சியை வழிநடத்தி செல்லக்கூடிய அளவுக்கு அவரிடம் ராஜதந்திரமோ, அல்லது அதற்கான தகுதியோ இல்லை என்று தான் அதிமுக வட்டார தகவல்.

தவிர, இதையெல்லாம் எதிர்த்து கேட்பவர்கள் உடனே கட்சியில் இருந்தும் , அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்தும்,நீக்கிவிடுகிறார்.அதனால், இன்று அதிமுக இரண்டாக பிளவு படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மேலும்,இப்படி எல்லாரையும் கட்சியிலிருந்து நீக்கும்போது, அதிமுக உடைந்து, காணாமல் தான் போகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அக் கட்சியினர் புலம்புகின்றனர். அதனால், அதிமுக கட்சியினர் மத்தியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக வெறுப்புக்கு ஆளாகியுள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

மேலும்,இதற்கிடையே வேலுமணி, சி.வி .சண்முகம் இந்த குரூப் பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளது. இது எடப்பாடி தரப்புக்கு மிகுந்த கவலையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது என்று அதிமுக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும்,இந்த இரண்டு பிரிவுகளில் அதிமுக பலவீனமும் , அதன் வலிமையும் இழந்து விட்டது. இதற்கிடையில் இந்த இரு பிரிவுகளில் யார் வலிமையானவர்கள்? எந்த பக்கம் சேர்ந்து கொள்ளலாம்? இப்படி கட்சியினருக்குள் ஒரு குழப்பம். இது ஒரு புறம் என்றால்!

தவெக விஜய் பக்கம் சேர்ந்துள்ள 25 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்திற்கு செல்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆக கூடி கட்சி எடப்பாடி பழனிசாமியால், அழிவு நிலைக்கு சென்று விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *