
1962 அரசியலுக்கு முன் தமிழ்நாட்டை இருந்த அரசியல் வேறு ! திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் வேறு ! அதிலும் இந்த கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு எதிராகவே கலகம் செய்து கொண்டு திரிபவர்கள்.
அது இப்போது அல்ல, சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அதை தான் இந்த கட்சியினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அது இந்தியாவில் எடுபடவில்லை.
மேலும், இவர்கள் வைக்கும் ஒரு செக் என்னவென்றால், அதிமுக! விஜய் ஆட்சிக்குள் உள்ளே வரக் கூடாது . அப்படி உள்ளே வந்தால் தவெக விற்கு பலம் வந்து விடும். அவர்கள் ஐந்து வருடம் ஆட்சி நடத்தி விடுவார்கள்.

மேலும், அதிமுகவில் பல மந்திரிகள் உருவாகிவிடுவார்கள். இந்த கணக்கு போட்டு, எதிர்க்கட்சி போல இருந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் இரண்டு பேரும் அதிமுக உள்ளே வந்தால், நாங்கள் எங்களுடைய ஆதரவை பரிசீலிப்போம் என்கின்றனர்.

ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, இன்னொரு பக்கம் ஸ்டாலின், இன்னொரு பக்கம் திருமாவளவன், கம்யூனிஸ்டுகள், இவர்கள் அத்தனை பேரும் ,வடிவேல் காமெடியில் சொல்வது போல, விஜய்க்கு திரும்பனு பக்கம் எல்லாம் கன்னி வெடிகளை வைக்கிறார்களே .

இவர்களைப் பற்றி தெரிந்துதான் மக்கள் அதிகாரம் எமது இணையதளத்தில் விஜய், ஸ்டாலின் குடும்பத்திற்கு சென்று சால்வை அணிவித்து, மரியாதை நிமித்தமாக பார்க்க சென்றபோதே, இது ஒரு தவறான முன் உதாரணம் என்று குறிப்பிட்டிருந்தோம். அதுவே தான் நடந்தது.
மேலும்,இதற்கு யாரோ இவரை தவறான வழியில் ,அரசியல் ஆலோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அது மட்டுமல்ல,எப்போதும் ஸ்டாலின் உங்களுக்கு ,எள்ளளவும், நல்லது செய்வார் என்று எதிர்பார்க்கக் கூடாது.

நீங்கள் சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வந்தால், அவர்கள் நிஜத்திலே அரசியலில் நடித்துக் கொண்டிருப்பவர்கள். எனவே,முதல்வர் விஜய் ,மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மேலும்,நல்ல அரசியல் ஆலோசகரை நியமித்துக் கொள்ள வேண்டும். அதேபோல்நல்லத்த நிர்வாக திறன் கொண்ட அரசு உயர் அதிகாரிகளை நம்பிக்கை கூறியவர்களாக நியமித்துக் கொள்ள வேண்டும்.
மேலும்,இந்த ஆட்சியை எப்படி எல்லாம் கவுழ்கலாம் என்று தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், கட்சி நடத்தவில்லை.

இவர்களுடைய ஆட்சி ,அதிகாரத்திற்காகத் தான் அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு சுயநல அரசியல். இவர்களும் இவர்கள் கட்சி சார்ந்தவர்களும் , மட்டுமே அரசியலில் கொள்ளை யடிப்பதற்கு அரசியல் நடத்திக் கொண்டிருப்பார்கள் .
மேலும் சட்டம் என்பது இவர்கள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பார்கள். இதுதான் திமுக, அதிமுக ஆட்சியில் நடந்த அரசியல் வரலாறு.

மேலும் ,எடப்பாடி பழனிசாமி எப்போது அதிமுகவில் முதல்வராக வந்தாரோ அப்போதே, அதிமுகவை திமுக நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார். தவிர ,அவரது ஆட்சியில்,ஒவ்வொரு மந்திரிகளும் போட்டி, போட்டு கொள்ளையடித்தார்கள். அதன் விளைவு இன்று திமுக ,அதிமுக அமைச்சர்கள் மீது, ஊழல் வழக்கு இல்லாதவர்கள் ஒருவர் கூட இல்லை.
மேலும்,இப்படிப்பட்ட ஆட்சி நடத்திய இவர்கள் விஜயை எந்த விதத்திலாவது இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்யக்கூடாது.
கவுண்டமணி ஒரு காமெடியில் சொல்வான் எங்க தொகுதிக்கு எதுவும் செய்ய நல்லது செய்ய மாட்டீங்களா? எதுக்குடா நல்லது செய்யணும்? சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து யார் நல்லது செய்திருக்கிறான்? ஜெயிச்சவன் எல்லாம் வந்து எங்க வீட்டு மேல கல் எடுத்து எறிஞ்சா? நீ வந்து காப்பாற்றுவியா? இப்படி இருக்க வேண்டும். இவர்களுடைய அரசியல்.

ஆனால், விஜய் மக்களுக்கான அரசியலை நடத்த வேண்டும் என்று அவருடைய அடிப்படை அரசியல் இவர்களுக்கு தெரிந்து விட்டது. அதனால் தான், இவர்களுடைய கார்ப்பரேட் மீடியாக்கள் ,சோசியல் மீடியாக்கள், உதவாத ஒரு சிறிய விஷயம் என்றாலும், அதை அப்படியே மக்களிடம் இவர்கள் பாணியில் பொய்யை கலந்து அடித்துக் கொண்டிருப்பார்கள்.
மேலும்,இவர்களுடைய போலி பத்திரிக்கை பிம்பம், இனி மக்களிடம் எடுபடாது. மக்களும் அதை புரிந்து கொண்டார்கள். எப்போது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வெற்றி நடை போடுகிறது தமிழகமே என்று நீங்கள் அரசு விளம்பரம் வாங்கி, மக்களை ஏமாற்றினீர்களோ ,அப்போதே மக்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்த ஊடகங்கள் உண்மையை சொல்வதற்கு ஊடகங்கள் இல்லை. அரசியல் கட்சியினரின் லாபத்திற்காக ,இவர்களின் லாபத்திற்காக ,பத்திரிக்கை நடத்துபவர்கள். அதனால், எந்தெந்த ஊடகங்கள் உண்மையை மக்களிடம் சொல்கிறது? என்பதை தேர்வு செய்து வைத்துக் கொண்டார்கள்.
எனவே,இனி மக்களை அப்படிப்பட்ட பொய்களை சொல்லி ஏமாற்ற முடியாது. ஆட்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், யார் நல்லாட்சி கொடுப்பார்கள் ?என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை அதிமுக ,திமுக தமிழ்நாட்டில் தோல்வி அடைந்து விட்டது.

அதனால், தோற்றவர்கள் அத்தனை பேரும் விஜய்யை எதிர்ப்பவர்கள் ஆக தான் தமிழ்நாட்டில் இருப்பார்கள் என்பதை விஜய் புரிந்து கொண்டால் சரி .
