ஒரு கோடி பனை விதைகள் நடும் முன்னேற்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம்.

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

செப்டம்பர் 04, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் மாவட்டம். காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா,அவர்கள் அழைப்பு.

விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். எனவே, இப்பணி சிறப்பாக நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் ச.கலாநிதி., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இராமசந்திரன், முதன்மை கல்வி அலுவலர் .ப.மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பொ. பேபிகலா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (நாமக்கல்)  ரகுநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *