
கரூரில் விஜயின் அரசியல் பேரணியில் நடந்த உயிரிழப்பு சம்பவம் தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்கள் ஒரு சம்பவம் நடந்த பிறகு தான், அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள், சிந்திப்பார்கள். அதுவரை நம் தமிழ் மக்கள் அலட்சியமாக இருப்பார்கள். ஆசாதாரணமாக இருப்பார்கள்.

விஜய் ஒரு விதத்தில் மனசாட்சியோடு ,மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கூட அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவருக்கு அரசியல் அனுபவம் மிக, மிக, குறைவு .அவரை சுற்றி இருப்பவர்கள், அதற்கான தகுதி மிகவும் குறைவு.
தற்போதைய அரசியலில், கொள்ளையடிப்பவர்களும், அரசியல் வியாபாரிகளும், கிரிமினல்களும், வெத்து வெட்டுகளும், பட்டா போட்டு வைத்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து அரசியல் செய்யக்கூடிய அளவுக்கு தகுதியும், திறமையும் வேண்டும். மேலும்,

விஜய்யிடம் பணம் இருக்கிறது. அதே சமயத்தில் மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. ஆனால், இந்த ரசிகர்கள் கூட்டம், இப்படி தாறுமாறாக வண்டியிலே விழுவது, கூட்ட நெரிசலில் சிக்குவது, இது எல்லாம் மக்களின் அலட்சியம்.

கூட்டத்தில் இவ்வளவு நெரிசல்கள் இருக்கும்போது, எப்படி அங்கே மக்கள் இருக்கலாம்? மக்கள் வெளியேறி இருக்க வேண்டும். விஜயைப் பார்த்து அல்லது விஜயின் பேச்சைக் கேட்டு, என்ன சாதித்து விட்டீர்கள்?. உயிரை விடுவதற்கு விஜய் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறீர்களா?

உங்களுடைய உயிரை, நீங்களே அலட்சியமாக, கேவலமாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே, அது தான் வேதனை. இறைவன் கொடுத்த உயிர்! வாழ்வதற்கே அன்றி, சாவதற்கு அல்ல.

ஆனால் இந்த இறப்பை வைத்து, இந்த அரசியல் கட்சிகள் அரசியல் செய்யும் பொழுது, அதைவிட வேதனையான கொடுமை, வேறு எதுவும் கிடையாது .ஏனென்றால், அரசியல் தெரியாதவனிடம் ,அவனை வைத்து பிழைப்பு நடத்துவது, கேவலமான வேலை.

அரசியல் கட்சிகளின் பொய்களை நம்பி, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். அவர்கள் வாக்குறுதிகள், உங்களுடைய வாழ்க்கைக்கு எதுவும் வழிகாட்டியாக உதவாது. அவர்களுக்கு தான் அது உதவும். போலி அரசியலில் உழைப்பவர்கள் முன்னேற முடியாது .ஊரை ஏமாற்றும் கூட்டம், மேலும், வெத்து பந்தா, அரசியல் பேச்சு, இருக்கிற கூட்டம் இதுதான் முன்னேறிக் கொண்டிருக்கும். அவர்கள் பேசிய உங்களை கழுத்தறுப்பார்கள்.

அதனால், இனிமேலாவது திருந்தவில்லை என்றால் ,உங்களை கடவுள் கூட காப்பாற்ற முடியாது. மேலும், இந்த சம்பவத்தை வைத்து விஜய்யின் அரசியலை திமுக முடக்க பார்க்கும். அதற்கு என்னென்ன வழிகள் இருக்கிறது? என்பதை சட்டப்படி ஆய்வு செய்வார்கள்.

அந்த ஆய்வில் ஒன்றுதான் இன்றைய விசாரணை ஆணையம். அந்த விசாரணை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் என்பவரை நியமித்தார்கள். அதற்கு பாஜக மாநில தலைவர் நாயனார் நாகேந்திரன் விசாரணை ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. அதனால், இன்றைய உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேபோல், விஜயும் இதற்கு சிபிஐ விசாரணை, அல்லது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அது மட்டுமல்ல, இது பற்றி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார் .சம்பவத்திற்கு நீதி விசாரணை வேண்டுமென்று சட்டத்தை அணுகியுள்ளார்.

இதில் யார் தவறு? என்பது சட்டத்தின் பிடியில் கிடைக்காது. மனசாட்சியின் பிடியில் தான் அது கிடைக்கும். ஏனென்றால், ஒரே வார்த்தை சொல்லிவிடுவார்கள். இவர்கள் பத்தாயிரம் பேர் தான் கேட்டார்கள். பாதுகாப்புக்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் கூடிவிட்டனர். அந்த இடம் நெருக்கடியான இடம் ,அதனால் ,அது தெரிந்தும் விஜய் இந்த அளவுக்கு கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் ,அவர்தான் குற்றவாளி என்று சொல்லிவிடுவார்கள். மேலும்,

இங்கே விஜய்யின் அரசியல் மீது திமுக ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருந்தது, அது எப்போது மாட்டும் என்று? இப்போது விஜயன் கூட்டத்திற்கு அவ்வளவு எளிதில் இனி காவல்துறை அனுமதி கொடுக்காது. நீதிமன்றமும் கொடுக்காது. மக்களின் சந்திப்பு விஜய்க்கு நிச்சயம் கேள்விக்குறியாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இது விஜயின் அரசியலில் பின்னடைவு தான்.
ஏனென்றால், தேர்தல் இன்னும் பல மாதங்கள் இருக்கிறது .அதுவரை மக்கள் ஞாபகத்தில் வைப்பார்களா? நம் தமிழ்நாட்டு மக்கள் ,இரண்டு நாளைக்கு முன் ,அவர்கள் சாப்பிட்டது அவர்களுக்கே ஞாபகம் இருக்காது. அதனால், விஜய் உண்மையிலே அவருடைய முகத்தைப் பார்த்தால் நல்ல மனசு, இதயம் உள்ளவராக தான் தெரிகிறது.

ஆனால், சினிமாவில் நடிப்புக்கும், அரசியலுக்கும், சம்பந்தமில்லையே. சினிவாவில் வசனம் சொல்லிக் கொடுத்து, நடிக்க வைக்கிறார்கள். இன்று சத்யராஜ் ஒரு வசனத்தில் அறிக்கை விட்டிருக்கிறார். இப்படி இவர்களுடைய அரசியல் எப்படி இருக்கிறது? என்றால், சினிமா ஒட்டியே இருக்கிறது. அதாவது தவறு சிரிசா இருக்கையில் திருத்திக்கோ, ஏன்யா, சத்யராஜ் கொஞ்சமாவது அறிவு வேண்டாமா? விஜய் போன இடத்தில் இந்த சம்பவம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.

மக்களிடமும் தவறு இருக்கிறது. விஜய் இடமும் தவறு இருக்கிறது. அதை யார் பேசுகிறார்கள்? என்றால், அரசியல் எதிர்கட்சியினர் பேசுகிறார்கள் .விஜய் 12 மணிக்கு சொல்லிவிட்டு, ஏன் 5 மணிக்கு வந்தார்? ஏன் தண்ணி கொடுக்கவில்லை? சோறு போட வில்லை? அதனால் ,தான் மயங்கி விழுந்தார்கள். இதற்கு விஜய் தான் பொறுப்பு என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.இது தவிர,
விஜய்க்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு அரசியல் ஆரம்பித்துவிட்டது? என்பது இனி தான் தெரியும். இப்பவே கொலை குற்றவாளி வெளியே, வாடா என்று ஒரு கும்பல், விஜயின் வீட்டுக்கு முன் கோஷம் போட்டது . அது,சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது.
ஒரு பக்கம் சோசியல் மீடியா ,இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் ,இதை எல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறார்? விஜய் ?இதற்கிடையில் விசாரணை என்ற பெயரில் அவரை தூக்கி உள்ள வைக்க முடியுமா? என்ற கோணத்திலும், திமுக சட்ட ஆலோசனைகள் செய்வதாக தகவல்.

ஆனால், விஜய்க்கு மறைமுக மத்திய அரசின் ஆதரவு உள்ளது என்பது மட்டும் தெரிய வந்துள்ளது .அதனால் தான் ,துணை ராணுவம் அவர் வீட்டிற்கு முன் குவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜயின் அரசியல் மூவ் ஒவ்வொன்றும் மிகவும் ஜாக்கிரதையாக அடியெடுத்து வைக்க வேண்டும். இல்லையென்றால், இத்துடன் உங்களுடைய அரசியலை முடித்து விடுவார்கள். இந்த சம்பவம் விஜயின் அரசியல் பின்னடைவு தான்.