கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் தொழிலில் மட்டும் தான் போலிகளா ? இன்று பல துறைகளில் போலிகள் உருவாவதற்கு காரணம் வியாபார நோக்கமா?

அரசியல் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் கல்வி வியாபாரமாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் கல்வித் துறையில் வந்த வண்ணம் இருக்கிறது .

இதில் மாணவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் பிரச்சனை அதிலும் தற்போது சுமார் 10,000 போலி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும் இருப்பதாக தகவல். இது மட்டுமல்ல, படிக்காமலே வழக்கறிஞர்களாக பல லட்சம் பேர் இன்று உருவாகி இருக்கிறார்கள். அவர்களும் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு நீதி மாற்றத்திற்கு வருவதும், போவதும் பந்தா காட்டுவதும் ஆக இருக்கிறார்கள்.

இப்படி எல்லாம் கல்வி என்பது பணம் கொடுத்து கடையில் வாங்கும் சரக்கு அல்ல . அப்படித் தான் தற்போது பத்திரிக்கை துறையில் கூட பத்திரிக்கை அடையாள அட்டையை காசு கொடுத்து வாங்கி கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் ஒரு செய்தி கூட சரியான முறையில் கொடுக்க முடியாது அப்படிப்பட்டவர்களும் பத்திரிகை என்று சொல்லி பொதுமக்களையும், அரசு அதிகாரிகளையும் ஏமாற்றி வருகிறார்கள்.

அதற்கெல்லாம் மத்திய அரசு தற்போது சரியான செக் வைத்திருப்பதாக தகவல் . அதாவது எத்தனையோ தினசரி பத்திரிகைகள் போலியான ஆடிட்டர் ரிப்போர்ட் கொடுத்து சலுகை, விளம்பரங்களை வாங்கி வந்தவர்கள் இனி மாட்டிக் கொள்வார்கள் என்கிறார்கள். இவர்கள் தப்பித்தாலும், ஆடிட்டர் இனி தப்பிக்க முடியாது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் போலிகள் அதிகரித்து இருப்பது சமூக நலனுக்கு எதிரான ஒன்று. பணத்திற்காக போலிகள் கூட்டம் எப்படி வேண்டுமானாலும், வேஷம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது .அது அரசியலிலும் அப்படி தான் இருக்கிறது.அரசியல் தவறானால் நாட்டில் எல்லாமே அதை ஒட்டி போலிகள் உருவாகிறது .அப்படி என்றால் போலிகளின் ஆரம்பம் அரசியல் . அரசியல் நாட்டில் சரியானதாக இருந்தால், போலிகளை ஒழிக்க முடியும். இதனால் தகுதியான பத்திரிக்கையாளர்கள், சமூக நலன் பத்திரிகையாளர்கள், இவர்களுக்கு எல்லாம் ஒரு போராட்டத்தை இவர்களோடு சேர்ந்து உருவாக்கிக் கொண்டு இருக்க வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது .

இது பத்திரிக்கை துறை மட்டுமல்ல ,கல்வித்துறை நாட்டில் மாணவர்களின் எதிர்காலமே கல்வியில் தான் உள்ளது.இங்கு போய் போலி ஆசிரியர்கள் என்றால் ,அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? மேலும், அரசு வேலை கிடைப்பது மிகவும் அரிதான நிலையாக இருக்கிறது. கிடைத்த அரசு வேலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் , தனக்கு பதிலாக வேறு ஒரு ஆசிரியரை நியமித்தும் இருப்பதும் இவர்கள் பார்த்து அவர்களுக்கு சம்பளம் தருகின்ற நிலைமை இருப்பது ஏன்?

ஒரு வேலை அவர்கள் படிக்காமல் பட்டம் வாங்கினார்களா? அதைப் பற்றி தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். மேலும் இந்த போலி ஆசிரியர்கள் எப்படி பணியமற்தப்பட்டார்கள் ? மேலும் ,ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிகளை ஆய்வு செய்வதில்லையா? அரசு பள்ளி என்றால் கேட்பதற்கு ஆள் இல்லாத பள்ளிகளாக ஆசிரியர்கள் வேலை செய்வதால் போலி ஆசிரியர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். அந்த மாணவர்களின் ஒழுக்கம், கல்வி எப்படி இருக்கும் ? தரமற்ற கல்வி தான் அந்த மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் ,அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *