சமூக ஊடகங்களின் நோக்கமென்ன? எதை நோக்கி இது பயணிக்கிறது? – இதை வைத்து ஆடும் அரசியல் என்ன?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

நாட்டில் இன்றைய இளைஞர்கள் செல்போன் என்பது அவர்களுடைய வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்று. மேலும்,ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ,ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள் .அந்த அளவுக்கு செல்போன் உபயோகம், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள், அதனுடன் இணைந்து விட்டார்கள்.

இதை வைத்து வட மாநிலங்களில் பிரிவினைவாத அரசியல், செய்கிறார்கள் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கிறார். அந்த அளவுக்கு புரிதல் இல்லாமல், வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள் மத்தியில், பொய்கள் வேகமாக பரவுகிறது. உண்மை எது? பொய் எது? என்று தெரியாமல் செல்போனை பார்த்து முடிவு செய்யும் இளைஞர்கள், எதிர்காலத்தில் அவர்களுக்குத்தான் அது பின்னடைவு என்பது காலமே அவர்களுக்கு பதில் சொல்லும்.

மேலும்,நாடு, சமூகம், இதற்குள் பிரிவினை சக்திகள், இளைஞர்களை மூளை செலவு செய்ய பார்க்கிறார்கள். அதனால், இளைய சமுதாயமும், மாணவ சமுதாயமும், செல்போன் பார்ப்பது தவறல்ல .ஆனால், தேச நலனும், சமூக நலனும் உங்கள் வாழ்க்கையில், நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து, வாழ்வதுதான் எதிர்கால இந்தியாவின் வலிமை. மேலும்,

இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாத வெளிநாட்டு தேசவிரோத சக்திகள் ,உள்நாட்டில் உள்ள எதிர்க் கட்சியினருடன், கைகோர்த்துக் கொண்டு, இந்தியாவை பிளவுபடுத்தவும், மக்களிடம் கலகங்களை ஏற்படுத்தவும், சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொண்டு வெளிநாட்டு நிதியை பயன்படுத்தி மதமாற்றம் செய்வது, போராட்டங்களை தூண்டுவது ,தேசத்திற்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுப்பது, இவை அத்தனையும் இன்றைய செல்போன்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும்,

இன்றைய இளைஞர்கள் புத்தகம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டது. பேப்பர் வாங்கி படிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. இந்த செல்போனுடனும், இணையதளத்துடனும், இணைந்து பார்க்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள், மூன்று தரமாக பிரிக்கலாம்.

முதல் தரம்! அறிவு சம்பந்தமான விஷயங்களில் ஆய்வு செய்து படிக்கிறார்கள். இரண்டாவது தரம் சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகள், உண்மையை தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

மூன்றாவது தரம் தான் சினிமா ரிலீஸ்களை பார்ப்பது, அரசியல்வாதிகளின் பொய்யான பிரபகண்டா செய்திகளை பார்த்துக் கொண்டு, அதை பரப்பிக் கொண்டு, கல்லூரி கலாட்டா, ரீல்ஸ்களை பார்ப்பது, யூடியூப் பார்ப்பது, உண்மை, பொய் தெரியாமல், பேசிக்கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கும், இவர்களிடம் தான் சமூக ஊடக பொய்கள், பரிமாறிக் கொண்டு, பேசிக் கொண்டு வருகிறார்கள்.

இவர்களை வைத்துதான் மதப்பிரிவினை, மத வாத சக்திகளும், ஜாதிப் பிரிவினைவாத சக்திகளும், ஒவ்வொரு அரசியல் கட்சி சமூக ஊடகப் பிரிவுகள் ,நாட்டுக்கு எதிராக, சமூகத்திற்கு எதிராக, அரசியல் செய்கிறது. இது புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றை வெளிப்படையாக உண்மையை சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. யார் மதவாத சக்தி? என்று தெரியாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் பிஜேபியை மதவாத சக்தி என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், உண்மை என்ன?இவர்கள் தான் மத வாத சக்தியின் அங்கமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, திமுக எம்பி வில்சன் பிஜேபி மதவாத சக்தி என்று சொல்லக்கூடிய இவர், இன்று எப் சி ஆர் ஏ (FCRA ) foreign currency regulation act சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஏன்? இங்கிருந்து கொண்டு போகும் கருப்பு பணத்தை, வெளிநாட்டிலிருந்து இனி கொண்டு வர முடியாது. 90 சதவீதம் இங்கிருந்து போகக்கூடிய பணம்தான் தொண்டு நிறுவன பெயரில் கொண்டு வருகிறார்கள்.

இப்போதுதான், இந்த எதிர்க்கட்சிகள் அலறுகிறார்கள். பிஜேபி சரியாக நமக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்என்று துடிக்கிறார்கள். இப்போது கூட பிஜேபி கையை தலையை சுற்றி தான் தொடுகிறது. நேரடியாக அந்த பணத்தை எடுங்கள் என்று பலமுறை சொல்லி இருக்கிறோம். சட்டங்களின் ஓட்டையை வைத்து, இந்தியாவை ஓட்டை போட பார்க்கிறார்கள். அந்த ஓட்டையை அடைக்கும் போது கதறுகிறார்கள்.

மேலும்,இந்த உண்மையை எல்லாம் தெரியாத மாணவ சமுதாயமும், இளைய சமுதாயமும், செல்போனில் இவர்களுக்கு வரக்கூடிய செய்திகளைப் பற்றி உண்மை எது பொய் எத என்று தெரியாமல் தீர்மானிக்கும் இளைஞர்கள் இப்படிப்பட்ட அரசியல் கட்சிகள் ,மத அமைப்புகள், பிஜேபிக்கு எதிராகவும் இந்த தேசத்திற்கு எதிராகவும், காக்ரோச் போன்ற தேசவிரோத சக்திகளை, நீட் தேர்வு மூலமாகவும், வினாத்தாள் கசிவு மூலமாகவும், மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்திலும், இந்த தேசத்தை பிளவுபடுத்தும் நோக்கத்திலும் ,செயல்படுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று எதை வேண்டுமானாலும் அரசியல் கட்சியினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள் . அதில் இவர்களுக்கு சுயநலம் இருக்க வேண்டும். பதவி என்பது இவர்களுக்கு சுயநலத்திற்காக ஆக்கிவிட்டார்கள். அரசியல் என்பது ஊழல் என்று ஆகிவிட்டார்கள். அதனால் தான் எப்படியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், அதிமுகவில் உள்ள சிவி சண்முகம் திருமாவளவனை முதலமைச்சராக ஆக்க நினைத்தோம். நீங்கள் யார் நினைப்பதற்கு ?ஆக்குவதற்கு? மக்கள் ஆக்க வேண்டிய விஷயத்தை, நாங்களாக்கி விடுகிறோம். திருமாவளவன் முதலமைச்சர் ஆக்குவதற்கு தான் மக்கள் வாக்களித்தார்களா? இதை கொஞ்சமாவது சிந்தித்து பேசி இருக்க வேண்டும் சி.வி. சண்முகம்.

மேலும் திருமாவளவனை தலித் சமுதாயமே ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வளவு பேர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அந்த கணக்கு சி.வி. சண்முகம் சொல்ல முடியுமா? அதேபோல் ராமதாசை எவ்வளவு பேர் வன்னியர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்? அந்த கணக்கு சி.வி. சண்முகம் சொல்ல முடியுமா?

இப்படி அரசியலில் பட்டம் பெற்று அதுவும் சட்டம் படித்தவர் எந்த அளவுக்கு பேசுகிறார்? தவிர,விஜய்க்கு ஓட்டு போட்டு முதலமைச்சராக வரவேண்டும் என்று தான், மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டது .அதிமுக, எடப்பாடி பழனிசாமி ,உங்களை பார்த்து தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள்.

ஆனால், இதில் திருமாவளவனுக்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? வாக்களித்த மக்கள் முட்டாள்களா? அந்த அளவுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் நீங்கள் மக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது தவறானது. இப்படிப்பட்ட சுயநல அரசியலை ஒழிக்க தான், மக்கள் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் திருந்த வேண்டும். இல்லையென்றால்,மக்கள் இனி உங்களை திருத்துவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *