
நாட்டில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சமூக ஊடகவியலாளர்களின் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு சென்று நிறைவேற்றுவேன் உறுதி .
இதுதான் ஒரு அரசியல் கட்சித் தலைவர்களுக்கு தகுதி. அது மட்டுமல்ல இதுதான் அரசியல் பொது நலம். இந்த பொதுநல சேவைக்கு தான் அரசியல் கட்சிகள் தேவை. ஆனால், அதை வாயிலே கார்ப்பரேட் மைக்குகளில் பேசி விட்டு போவதால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. சொல்வது சுலபம், செய்வதுதான் மிக கடினமானது.
மேலும்,பிஜேபி மற்றும் அதிமுக கட்சிகளில் தலைவர்களை தேட வேண்டி இருக்கிறது. இதுவே கருணாநிதியாக இருந்தால், எப்போதோ இந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் நிச்சயம் ஒரு தீர்வு கிடைத்திருக்கும். பத்திரிகைகளின் பிரச்சனைகளையும், பத்திரிகையாளர்கள் பிரச்சனையும், தீர்க்க முடியாத ஒரு அரசு! மக்களின் பிரச்சனையை எப்படி தீர்க்கும்?

மேலும்,அரசியல் சுயநலமாகிவிட்டால் ,அரசியல் கட்சியினரை விளம்பரப் படுத்துவது வீண். அப்படிப்பட்ட பத்திரிகை, தொலைக்காட்சிகள் அவர்களுடைய சொந்த சுயநலத்திற்காக தான் அவர்களை விளம்பரப்படுத்துகிறார்கள். இதுதான் ,இன்றைய பல கார்ப்பரேட் பத்திரிகைகளின் நிலைமை.
மேலும்,இதை அரசியல் கட்சியினரும், கட்சித் தலைவர்களும், மாற்றிக் கொள்ள வேண்டும். காரணம், தவறு இவர்களிடம் ஒரு பங்கு என்றால் ,கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் பங்கு, இதில் 100% காரணம்! இவர்கள்தான் இந்த போலி அரசியலை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். இதனால்,

தகுதியற்ற அரசியல் கட்சி தலைவர்களையும், தகுதியற்ற அரசியல் கட்சியினரையும், சமூக மக்களிடம் நல்லவர்களாக காட்டிக் கொண்டிருப்பதால், அரசியல் தெரியாதவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதை இன்று இந்த சமூக ஊடகங்கள் மக்களிடம் உண்மையை போட்டு, உடைத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.மேலும்,
மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் சார்பில் பத்திரிக்கை சம்பந்தமான செய்திகளை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இந்த சமூக ஊடகவியலாளர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்தது. மேலும்,தொடர்ந்து இது சம்பந்தமாக செய்தி துறை அதிகாரிகளுக்கு உண்மையான விளக்கங்களை கொடுத்து, செய்திகளை வெளியிட்டு வந்துள்ளேன்.அது சமூக ஊடகவியலாளர்களுக்கும் தெரியும்.தவிர,
சில மாதங்களுக்கு முன்பு கூட, நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கிறது. ஆனால், இந்த சமூக ஊடகவியளாளர்கள் பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு ஒரு அரசியல் கட்சி தலைவர்களுக்கு கூட தகுதி இல்லையா? என்று கேள்வி கேட்டு? தான் எழுதி இருந்தேன். அந்த அளவிற்கு அலட்சியப்படுத்த இதில் உள்ள அரசியலா? மேலும்,
சமீபத்தில் அகில இந்திய பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது ,எங்களுக்கு எல்லாம் ஒரு ஆறுதலும், மகழ்ச்சியும் அளிக்கிறது. ஏனென்றால், இது எங்களுடைய உரிமை பிரச்சனை. இதற்காக எத்தனை விண்ணப்பங்கள்? எத்தனை புகார் மனுக்கள் ? எத்தனை ஆர். டி .ஐ மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது ?என்பது செய்தி துறை இயக்குனர் வைத்தியநாதனுக்கு தெரியும்.மேலும்,

நேற்று கூட அவரை சந்தித்து புத்தகம் கொடுத்து, இது சம்பந்தமாக பேசி விட்டு தான் வந்தேன். அவரும் செய்வோம் என்று தான் சொல்லி இருக்கிறார். நான் பலமுறை இது சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருவதற்கு முக்கிய காரணமே, இவர்களுக்கு சொன்னால் இந்த விஷயத்தை உள்வாங்கி எப்படி செய்ய வேண்டும்? இவர்களுக்கு தெரியும்.
இதை அரசியல் கட்சிக்காரர்கள் இடமும் அல்லது மந்திரிகள் இடமும் சொன்னால் ,அவர்களுக்கு புரிய வைக்க முடியாது. மேலும் ,திருமாவளவன் ஒரு பத்திரிக்கையை நடத்தக்கூடிய ஊடகவியலாளராக இருப்பதால், இந்த பிரச்சனைகள் அனைத்தும் அவருக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.

மேலும், அவர் மீது நமக்கு எந்த விதமான தனிப்பட்ட முறையில் வெறுப்பு ,வெறுப்பு கிடையாது. ஆனால் ,அவருடைய அரசியல் !அதில் எனக்கு கருத்து, வேற்றுமை உண்டு. தவிர,அரசியல் கட்சிகளில் தவறுகளை அங்கீகரிக்க என்னை போன்றுவார்கள், ஏற்றுக்கொள்ள மாட்டோம். அது அரசியல் கட்சி மட்டுமல்ல, பத்திரிக்கை துறையிலும் அப்படி தான். எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கையோ, அந்த நோக்கத்திற்காக அது இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் இருக்க வேண்டுமோ, அந்த நோக்கத்திற்காக அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும்.
அதனதன் பாதையில் அது விலகிச் செல்லும் போது தான், அங்கே முரண்பாடுகள் ஏற்படுகிறது. தவிர, திருமாவளவன் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், ஊடகவியளாளராகவும், இந்த விஷயத்தை கையில் எடுத்து, அங்கு வந்துள்ள பல ஊடகவியளாளர்கள் மத்தியில் பேசி இருந்தது, மிகவும் பாராட்டுக்குரியது.

ஏனென்றால்! அங்கே திமுக ஆட்சியை குறை சொல்லி தான் ஊடகவியலாளர்கள் பேசியிருக்கிறார்கள். காரணம் ஒரு பத்திரிக்கை எதற்காக நடத்துகிறோம் ?என்பது கூட தெரியாமல் செய்தித் துறை அதிகாரிகள், அலட்சியம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு பத்திரிக்கையை பற்றிய உண்மை தெரிகிறதா? இல்லையா ?என்பது தெரியவில்லை.
மேலும், தினசரி பேப்பரில் வரக்கூடிய செய்திகளை கட்டிங் போட்டு, அதை ஒட்டி போஸ்ட் ஆபீஸ் வேலை செய்யக்கூடிய பி.ஆர்.ஓ களுக்கு பத்திரிகையின் தகுதி, தரம், தெரியாது. இது எல்லாம் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைமை. இப்போது பத்திரிக்கை துறை பல பரிணாம வளர்ச்சிகளை பெற்றுள்ளது. இது பற்றி பத்திரிக்கை துறையில் ஆய்வு செய்துதான் என்னுடைய கட்டுரைகள் ஒவ்வொன்றையும் கொடுத்திருக்கிறேன். இது செய்தி துறை இயக்குனருக்கு நன்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.மேலும்,

பத்தாயிரம் பிரிதிகள் அடித்தால் தான் உங்களுக்கு அரசு அடையாள அட்டை கொடுப்போம், அடிக்காதவர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்ற ஒரு கண்டிஷனை திமுக ஆட்சியில் தான் போட்டார்கள். சமூக நலன் பத்திரிகைகளும், கார்ப்பரேட் பத்திரிகைகளும் ஒன்றா? மேலும்,பத்தாயிரம் பிரதிகள் அடித்தால், எவ்வளவு விளம்பரங்கள் கொடுப்பீர்கள்! அந்த கேள்விக்கு செய்தி துறையில் இருந்து பதில் வராது.தவிர,அதிமுக ஆட்சியில், இந்த கண்டிஷன் எல்லாம் இல்லை. ஆனால், அப்போதும் தனக்கு வேண்டியவர்களுக்கும் ,வேண்டாதவர்களுக்கும் ,இந்த பத்திரிகைகளுக்கு கொடு ,அந்த பத்திரிகைகளுக்கு கொடுக்காதே ,என்ற அரசியல் அப்போது இருந்தது.

மேலும், ஒரு அரசியல் கட்சி நடத்துவது, பத்திரிக்கை நடத்துவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் சாமானிய மக்கள் நடத்தக்கூடிய பத்திரிக்கை அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பிரசவ வலி தான். அரசியல் பின்பலம் இல்லாமல் பத்திரிக்கையில் ஜெய்ப்பது மிகவும் போராட்டமானதாக இருக்கிறது.
மேலும், சமூக நலன் பத்திரிகைகளில் இருப்பவர்கள், என்னுடைய பேஸ்புக், வாட்ஸ் அப் ,போன்றவற்றில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இருப்பார்கள். இப்போதுதான் இவர்களுக்கெல்லாம் இந்த சலுகை, விளம்பரங்களை பெற்றாக வேண்டும் என்ற ஒரு உத்வேகம் பிறந்திருக்கிறது.
இதற்கு காரணம் மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து கார்ப்பரேட் பத்திரிகைகளை பற்றி எழுதிய உண்மைகள் ஊடக வியளாளர்களுக்கு போய் சேர்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் சில நேரங்களில் இதை காப்பி அடித்துக் கூட ஒரு 10 பேர் போட மாட்டார்களா? என்று தான் நினைத்தேன். இப்போது திருமாவளவன் மூலம் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றால், அவருடைய சமூக பங்களிப்பு காலத்தால் பேசப்படும் அளவில்,இதில் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும்,

திருமாவளவனை பற்றி அரசியல் ரீதியாக கருத்து விமர்சனங்கள் எழுதியது உண்டு. அப்படி எழுதவில்லை என்றால் ,நான் பத்திரிக்கைக்கு தகுதி இல்லாதவன். மேலும், இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், சமூக நலன் பத்திரிகைகளுக்கும் ,உள்ள வேறுபாடு தெரியாமல், செய்தித் துறை இவ்வளவு நாள் பத்திரிக்கை துறையை ஏமாற்றியது மிகப்பெரிய கொடுமை.
அதற்கு என்ன காரணம்? அந்த காலத்தில், தினத்தந்தி, தினமணி, தினமலர், தினகரன், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இவ்வளவுதான் பத்திரிக்கை! இப்போது தமிழ்நாட்டில் மட்டுமே, லட்சக்கணக்கில் பத்திரிகைகள் இருக்கிறது.
இதில் எந்தெந்த பத்திரிகைகள் தொடர்ந்து வெளி வருகிறது ?என்னென்ன செய்திகள்? எப்படி கொடுக்கிறார்கள்? சமூகத்திற்கு அதனால், என்ன நன்மை ?போன்ற பல விஷயங்களை உள்ளடக்கி, தேர்வு செய்து இந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய முக்கிய கோரிக்கை. அது மட்டுமல்ல, அப்போது இவ்வளவு போட்டிகள் பத்திரிகை உலகில் இல்லை.

அதனால், இந்த கார்ப்பரேட் பத்திரிகைகள் ,சர்குலேஷன் என்பதை காட்டி ,இவர்களே கோடிக்கணக்கில், இந்த நான்கைந்து பத்திரிகைகளே அரசியல் பின்புலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.
மேலும், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு எதையும் கொடுக்கக் கூடாது என்பதில் இவர்கள் செய்த அரசியல்! சாதாரண அரசியல் அல்ல, யாரோ ஒரு பத்திரிக்கை தவறு செய்தான் என்றால், உடனே மஞ்சள் பத்திரிகை என்று எழுதி விடுவார்கள். இப்படி பல போட்டிகளுக்கு மத்தியில் அதுவும் கார்ப்பரேட் பத்திரிகைகளோடு போட்டி என்றால்! மிக, மிக கடுமையானது தான்.
காரணம் எல்லா மாவட்டத்திலும், நிருபர்கள் போட்டு , வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடுத்தர வர்க்கம் ,அதுபோல் நடத்த முடியுமா? பிளாக் மணியை வைத்து அதாவது கருப்பு பணத்த்தில் பத்திரிகை நடத்துபவர்கள், நடத்தலாம். எங்களைப் போன்ற சாதாரண நடுத்தர குடும்பத்தில், எங்களால் எந்த அளவுக்கு போராட முடியுமோ, அந்த அளவுக்கு தான் போராட முடியும்.மேலும், சர்குலேஷன் என்பது பணம் இருந்தால்! எத்தனை லட்சம் வேண்டுமானாலும், அடிக்கலாம் .அது ஒன்றும் பெரிய காரியமல்ல. அதை அரசு பணத்தில் காட்டிவிட்டு, திறமை என்கிறார்கள்.

தவிர, தற்போது இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுக்க வேண்டிய சலுகை ,விளம்பரங்கள் காலத்திற்கு ஏற்ப தேவையான ஒன்று. அந்த காலத்தில் இணையதளங்கள் இல்லை ,வாட்ஸ் அப் இல்லை, facebook இல்லை, ட்விட்டர் இல்லை, ஆனால், இப்போது எல்லாம் இருக்கிறது. செய்திகள் மக்களிடம் இந்த பத்திரிகைகள் கொண்டு செல்கிறது. அதனால்தான் இவர்களுடைய சர்குலேஷன் சுத்தமாக அடிபட்டு போய்விட்டது. போலியான சர்குலேஷன் கணக்குகளை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய நண்பர் ஒருவர் கோவையில் அவரும் பத்திரிக்கை நடத்துபவர் தான், சமீபத்தில் சொன்னார் தினத்தந்தி பேப்பர் டன்னு கணக்கில் ரிட்டன் ஆகிறது என்றார். அதேபோல் குறிப்பிட்ட இடங்களில் தினமணி பேப்பர் வருவதே கிடையாது என்கிறார்கள். இன்று தினமலர் ரயில்வே பயணிகளிடம் உணவு கொடுக்கும் போது, அதையும் சேர்த்துக் கொடுப்பதாக கேள்விப்பட்டேன். அதற்கு ஏதாவது ரயில்வே நிர்வாகம் குறைந்த கட்டணத்தை ரயில் பயணிகளிடம் வசூல் செய்கிறார்களா? என்பது தெரியவில்லை.மேலும்,

ஒரு காலத்தில் ஜாம்பவான்களாக இருந்த இந்த பத்திரிகைகள், தற்போது தள்ளாடுகிறது. இதற்கு காரணம் இதன் சமூக நலன் பத்திரிகைகள் தான். அதனால் தான், இந்த பத்திரிகைகளுக்கு எல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது. கொடுத்தால் இவர்கள் நமக்கு போட்டியாக வந்து விடுவார்கள். இன்னும் போட்டி பத்திரிக்கை துறையில் அதிகரிக்கும் .இப்படியெல்லாம் இவர்கள் அரசியல் செய்தார்கள். இப்போதும் அரசியல் செய்து பார்த்தார்கள். ஆனால், இந்த சமூக ஊடகங்களின் போட்டி கடுமையாக இருக்கிறது. இப்போது சர்குலேஷன் காட்ட முடியவில்லை.மேலும்,

இவர்களும் தற்போது இணையதளத்தில் தான் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இணையதளத்தை படிப்பவர்கள் ,ஓரளவுக்கு விஷயம் தெரிந்தவர்கள் தான். விஷயம் தெரியாதவர்கள் இணையதளத்தில் பத்திரிகையை படிக்க மாட்டார்கள். ஒரு செய்தியை தவறானதாக இருந்தாலும், அதற்கு வேல்யூ இல்லாத செய்திகளை ,அவர்கள் ஓபன் பண்ணி கூட பார்க்க மாட்டார்கள். இதுதான் நான் இணையதளத்தில் கண்ட உண்மை. இங்கே போலிகள் நீண்ட நாள் தாக்கி பிடிக்க முடியாது.

எனவே, முதல்வர் ஸ்டாலின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம். மேலும், நேற்று கூட துணை ஜனாதிபதி சி.பி .ராதாகிருஷ்ணனுக்கு, இது சம்பந்தமாக மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், சமூக ஊடகவியலாளர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஏனென்றால், பிஜேபியில் இரண்டு முறை மத்திய செய்தித் துறை இணை அமைச்சராக தமிழ்நாட்டுக்கு எல். முருகன் இருந்தும், அவர் ஒரு வேஸ்ட் என்ற நிலைமை தான் எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு அவருடைய செயல்பாடு.மேலும், இது பற்றி,அவருக்கும், பல செய்திகள் ,கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதையெல்லாம் காது கொடுத்து கேட்பதோ, பார்ப்பதோ ,எதுவுமே இல்லை. அதே நிலைமைதான் அண்ணாமலை. தமிழிசை சௌந்தர்ராஜன், பிஜேபியில் வந்த தலைவர்கள் அத்தனை பேருமே, இது பற்றிய கோரிக்கைகள் கொடுத்தாலும் ,அதை அலட்சியப்படுத்தி விட்டார்கள்.
இப்போது நாயனார் நாகேந்திரன் மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில், கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை, மத்திய செய்தி துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் .ஆனால், அங்கிருந்து இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. யாரும் இதற்கு ஒரு முக்கியத்துவம் எடுத்து செயல்படவில்லை .அதுதான் எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு இது வேதனை அளிக்க கூடிய விஷயமாக இருக்கிறது.

மேலும்,இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், இருக்கக்கூடிய திருமாவளவன், இந்த பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைகளும் நிச்சயம் உங்களுடைய கோரிக்கையை முதல்வரிடம் சொல்லி நிறைவேற்றுவேன் என்று உறுதி அளித்துள்ளார் என்று நினைக்கும் போது ,உண்மையிலே இது பாராட்டப்பட வேண்டியது.

இதற்காக மீண்டும் ஒரு முறை திருமாவளவனுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் நன்றி தெரிவித்து, எமது மனமார்ந்த பாராட்டுக்கள்.