
சமூக நலனை பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் சம்பந்தமாக தலைமைச் செயலகத்தில் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
இது பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. இந்த கோரிக்கையை திமுக அரசு, கார்ப்பரேட் பத்திரிகைகள் மட்டுமே அனுபவித்து வந்த சலுகை, விளம்பரங்களை சமூக நலன் பத்திரிகைகளுக்கும் ,கொடுக்க வேண்டும் என்பதுதான் பத்திரிக்கை துறையில் உள்ள மிகப் பெரிய சமூக நீதிப் பிரச்சனை.

இந்த பிரச்சனை பற்றி, பத்திரிகையின் தகுதியான பத்திரிக்கையாளனுக்கு மட்டுமே (journalist )தெரிந்த உண்மை . மேலும், கணக்குக்கு பத்திரிக்கையில் வேலை செய்பவர்களும் , கனகக்கு பத்திரிக்கை நடத்துபவர்களும்,தன்னை பத்திரிகையாளன் என்று சொல்கிறார்கள்.
ஆனால், சமூக நலனுக்காக தொடர்ந்து போராடிவரும், குறிப்பிட்ட சில பத்திரிகைகள் எது ?என்பது அதனுடைய செய்தியின் தரத்தை ஆய்வு செய்தால், பத்திரிகையாளர்களுக்கும், செய்தித்துறை உயர் அதிகாரிகளுக்கும் இது புரியும்.
மேலும் , கடந்த திமுக அரசு காலத்தில் இந்த பத்திரிகைகள் சில எதிர்த்து சமூக அவலங்களுக்கு குரல் கொடுத்தது . அப்படி குரல் கொடுத்தவர்கள் எத்தனை பேர்? எத்தனை பத்திரிகைகள்? என்பதை செய்தித் துறை அதிகாரிகள் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா? மக்களுக்கு தெரியும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் வாசகர்களுக்கு உண்மை தெரியும்.
இது எவ்வளவு கடினமான போராட்டம் என்பது இந்தத் துறையில் பயணிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரிந்த உண்மை. மேலும், கணக்குக்கு நானும் பத்திரிகைகாரன் ,நானும் RNI வாங்கிவிட்டேன். நானும் அச்சு அடிக்கிறேன் என்று ஆயிரக்கணக்கான பத்திரிகைகள் இருந்தாலும் ,அதில் ஏதாவது ஒரு சில பத்திரிகைகளாக தான் இருக்கும்.
இந்த உண்மை செய்தித் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியும். இதை அவர்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் போதும். மேலும், காலத்திற்கு ஏற்ப ,மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, பத்திரிக்கை துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமான ஒன்று.
அதன் அடிப்படையில் பத்திரிக்கை துறையில் இன்று இணையதள பத்திரிகையின் பார்வையாளர்களும், சந்தாதாரர்களும் ,சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும் என்பது காலத்தின் மிக முக்கியமானது. இது சம்பந்தமாக ,மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக, முதல்வருக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரிடம் இது பிற்றி பேச அதிகாரிகள் நேரம் தந்தால், ,பத்திரிகைகளுக்கான முக்கியத் தீர்வு கிடைக்கும். அது சமூகத்தின் நோக்கமாகவும், மக்களுக்கான தேவையானதாகவும் ,இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை – ஆசிரியர்.
