
தமிழக முதல்வர் விஜய் என்று திடீர் ஆய்வாக புழல் சிறைச்சாலை ஆய்வு செய்துள்ளார்.
அதேபோல், பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தையும் பார்வையிட்டு, பொதுமக்கள் புகார் மற்றும் தீர்வுக்கான நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளார்.
இப்படி திடீர் ,திடீரென்று ஆய்வு மேற்கொண்டால், தவறு செய்யும்,அதிகாரிகளுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும்.
மேலும்,மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
முக்கியமாக காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூக பிரச்சனை, சமூக நீதிப் பிரச்சனை ,இத்தனையும் காவல்துறைக்குள் அடங்கி இருக்கிறது. அதனால்தான் ,இவருடைய திடீர் ஆய்வு மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இது சினிமா பாணியில் அரசியலாக இருக்குமா?

சினிமாவில் நட்சத்திரமாக இருந்தவர், இந்த அளவுக்கு கீழே இறங்கி அரசியல் செய்வாரா? இது எனக்கே கூட இருந்தது. இவர் எம்ஜிஆர் பாணியில் அரசியல் செய்ய முடிவெடுத்து விட்டார் என்று தெரிகிறது.
