சாதியை வைத்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொண்டு, சாதியை ஒழிப்போம் என்றால்! அது உண்மையான சமூக நீதியா? -அமைச்சர் வன்னிய அரசு.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சாதியை வைத்து அரசியல் அதிகாரம் தேடிக்கொண்டு ,சாதியை ஒழிப்போம் என்று சொல்வது அது முரண்பாடான அரசியல்!

சாதி ஒழிப்பு உண்மையாக வேண்டுமென்றால்,அரசியலில் சாதி அடையாளத்தை ஒழிக்க வேண்டும். மேலும்,சாதி அடிப்படையிலான ரிசர்வேஷன் , இட ஒதுக்கீடுகள், இசிஆர் ஆக்ட், (PCR act),தனித் தொகுதியில் நின்று வெற்றி பெற்று சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், இதை எப்படி விஷயம் தெரிந்தவர்கள், அதாவது அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? மேலும்,மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும்?

சலுகை ,இட ஒதுக்கீடு, ரிசர்வேஷன் கோட்டா, இது எல்லாமே அனுபவித்துக் கொண்டு சாதியை ஒழிப்போம் என்றால், முதலில் இதையெல்லாம் ஒழித்து விட வேண்டும் என்கிறார்கள் மற்ற சமூகத்தினர். எல்லா சமூகத்திலும் ஏழைகள், பணக்காரர்கள் இருக்கிறார்கள் .ஆனால், அவர்களுக்கு கிடைக்காத இந்த சலுகைகள், இட ஒதுக்கீடு, எஸ் சி/எஸ் டி பிரிவினருக்கு கிடைக்கிறது.

இப்படி எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு, ரிசர்வேஷன் தனித் தொகுதியில் நின்று ஜெயித்து விட்டு, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இது யாரை முட்டாளாக்கும் வேலை? மற்ற சமூகங்களையா? அல்லது சட்டத்தையா? சமூக நீதி என்றால் !எதில் சமூக நீதி? எல்லா சமூகத்திலும் , பொருளாதார ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகமே இல்லை.

மேலும்,சாதியைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்ற திருமாவளவனும் சரி, வன்னியரசும் சரி, நீங்கள் இன்னும் இதில் நிறைய படிக்க வேண்டும். ஒரே சாதிதான்!SC/ST இந்த சாதிக்குள் அதாவது நீங்கள் பேசிக் கொண்டிருக்கின்ற சாதிக்குள் ஒரு பணக்கார பெண்ணை ஏழையாக இருக்கின்ற ஒருவனுக்கு மணமுடித்துக் கொடுப்பார்களா? மேலும், இதற்குள்ளே பள்ளர் ,பறையர் என்ற வேற்றுமைகள் இருக்கிறது. அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் இருக்கிறதா?

இதற்கு எல்லாம் சரியான பதில் உங்களால் கொடுக்க முடியுமா? இங்கே எங்கே சமூக நீதிப் போனது? ஒரே சாதி தானே! கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.

மேலும், எந்த சாதியிலும் பிறந்தது தவறல்ல ஆனால், அதில் மற்ற சமூகங்களிடையே வேற்றுமையின்றி, ஒற்றுமையுடன் வாழ்வது, வெறுப்பின்றி பேசுவது, நியாயத்தின் அடிப்படையில் சமூக நீதியை நிலைநாட்டுவது இதுதான் அரசியல்! இது தவிர, எந்த தப்பு செய்தாலும், ஜாதியை முன்னிறுத்தி பேசிக் கொண்டிருப்பது, ஜாதியை ஒழிப்பதல்ல! மேலும், அது மற்ற ஜாதிகளிடம் ஏமாற்றும் வேலை.

எனவே,அந்த அரசியலை விட்டுவிட்டு, ஜாதி அரசியலை கையில் வைத்துக்கொண்டு, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் ,எந்த ஜாதியும் இதை ஏற்றுக் கொள்ளாது. இது பொதுவான கருத்து.

இதை யாரையும் குறை சொல்லி கொடுக்கப்பட்டது அல்ல, உண்மை எதுவோ ,அதுதான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை புரியாமல் பேசிக்கொண்டு இருக்கும் அரசியல் தான் இவர்களுடைய அரசியல் !என்பதை அனைத்து சமூகத்திற்கும் செல்லும் பதில்.

மேலும், சமூக நல துறை அமைச்சர் அனைத்து சமூகத்திற்கும் ,சமூக நீதியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *