செந்தில் பாலாஜியின் விளக்க அறிக்கை என்ன என்றால்! திமுகவின் சாதனைகள்! தவெகவின் வெள்ளை அறிக்கை – ஊழலை நியாயப்படுத்தும் ஊழல்வாதிகள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

செந்தில் பாலாஜி சொன்னதை பார்த்து, தகுதியான பத்திரிக்கையாளர்கள் இவருடைய திறமையை என்ன என்று பாராட்டுவது?

மேலும்,செந்தில் பாலாஜி தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை, திமுகவின் சாதனை! உண்மையிலேயே இவர் மறைமுகமாக ஊழல் சாதனையை சொல்கிறார? என்ற கேள்வி தான் ,எனக்குள் எழுந்தது.

நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், இது போன்ற கார்ப்பரேட் அரசியல்வாதிகளின் பின்னால் கை கோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி ?மக்களிடம் நல்லவர்களாக, மக்களுக்காக உழைப்பவர்களாக ,தியாகிகளாக, பேசிக் கொண்டிருக்கிறார்களோ ,அதே போல் தான், இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும், மக்களிடம் உள்ளடி வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த உண்மைகள், பத்திரிக்கை துறையில், எவ்வளவு பேருக்கு தெரியும்? என்பது தெரியவில்லை. ஏனென்றால் இது ஒரு கடல் !இந்த கடலிலே நீந்தக் கூடிய தகுதிகள் இருப்பவர்களுக்கு தான் ,இந்த உண்மைகள் புரியும்.

மேலும்,குளம் ,குட்டைகளில் நீந்த தெரியாதவர்கள் எல்லாம், பத்திரிகையாளர்களாக ஆகி விடுகிறார்கள். இவர்கள் எப்படி கார்ப்பரேட் பத்திரிகைகளை எதிர்த்து போராடி வெற்றி பெற முடியும்? வந்த வரைக்கும் பத்திரிகை என்று கணக்குக்கு பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கஇள். ஆனால்,

இதற்காக எவ்வளவு போராட்டங்கள்? இந்த செய்தி துறையில் !மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, போராடி வருகிறது? என்பது பத்திரிக்கை துறைக்கு தெரியும். அது மட்டுமல்ல,இது பொய் என்றால், என்னால் நிரூபிக்கவும் முடியும். அதை விளக்கத்துடன் முடிந்த அளவுக்கு செய்திகளாகவே எமது பத்திரிகையில் வெளியிட்டு வருகிறேன்.

தற்போது செந்தில் பாலாஜி, திமுகவின் சாதனை என்று சொல்லிவிட்டால்! அது சாதனை ஆகிவிடுமா? ஊழலை மறைப்பதற்கு சாதனை விளக்கமா? எந்த ஒரு பத்திரிக்கையாவது இதைப்பற்றி ஒரு விமர்சனம் எழுதியிருக்கிறார்களா? அல்லது தொலைக்காட்சியாவது அதை விமர்சித்து பேசி இருக்கிறார்களா?

மேலும்,விவாத மேடை என்று விதண்டாவாத மேடையாக ஆக்கி அதைப் பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், மக்களின் வரிப்பணம் இவர்களுக்கு தான் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் சொல்கிறார்கள், இந்த பத்திரிகைகளுக்கெல்லாம் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு பைனான்ஸ் டிபார்ட்மெண்ட் செய்தித் துறையில், அனுப்புகிற ஒரு பைலை திருப்பி அனுப்புகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். இதற்கெல்லாம் நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியுமா?

மேலும், செந்தில் பாலாஜி எதை சாதனை என்று தெரிவிக்கிறார்? அப்படி திமுகவின் சாதனை என்ன? அந்த சாதனைகள் ஒவ்வொன்றும் சொன்னால், விளக்கமாக மக்களுக்கும் புரியும் அல்லவா?மேலும், எந்தத் துறையில் இவர் சாதனை செய்து இருக்கிறார்? மின்சாரத் துறையிலா? அதுதான் ஆயிரம் கோடி அளவுக்கு இன்று வழக்கு அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் கொண்டு போயிருக்கிறது.

அதுவும் இவருடைய சாதனை தான். அதேபோல், சேகர்பாபு 2000 கோடி மதிப்புள்ள ரிசர்வ் பாரஸ்ட் நிலமான சதுப்பு நிலத்தை பட்டா போட்டு, அடுக்குமாடி குடியிருப்பு கட்ட போட்ட திட்டம் , அதுவும் ,ஒரு திமுகவின் சாதனை தான், அதேபோல், இவர்களுடைய கருப்பு பணத்தை வெளிநாடுகளில் ,முதலீடு செய்வதும் சாதனை தான்.

அதேபோல், ஆயிரம் கோடிக்கு மேல் இந்து சமய அறநிலையத்துறையில் ஊழல் கணக்குகள் எழுதி எடுத்திருப்பதும் ,அதுவும் சாதனைதான். இந்துக்களின் காணிக்கையை வைத்து ,அவர்களுக்கு எதிராக வழக்கு கொடுத்திருப்பது ,அதுவும் சாதனை தான், அதேபோல் டாஸ்மாக் ஆயிரம் கோடி ஊழல், மணல் கொள்ளை ஊழல், மருத்துவம் மற்றும் கல்வி போன்ற அனைத்திலும் ஊழல், அற்ற துறையை திமுக ஆட்சியில் இல்லை என்பது மிகப்பெரிய சாதனை தான். அதுதான் தவெக வின்,வெள்ளை அறிக்கை .மேலும்,

மக்கள் முட்டாளாக இருந்தால், திமுகவினர் எந்த எல்லைக்கும் பேசுவார்கள், மேலும்,இந்த அளவுக்கு ஊழலை நியாயப்படுத்தும், இவர்களுடைய ஒரு பேக்ரவுண்ட் (background) என்னவென்றால், கார்ப்பரேட் ஊடகங்கள் தான். இந்த பேக்ரவுண்டில் தான் இவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் ‌.

ஏனென்றால், மக்களை முட்டாளாக்க ஒரு செய்தியை சொல்வதற்கு கூட ,அதற்கு ஒரு மியூசிக் போட்டு காண்பித்தால்! பரபரப்பாக மக்கள் பார்ப்பார்கள் அல்லவா? அதேபோல்,இந்த ஊழல்வாதிகள் ,ஊழலை எந்த அளவுக்கு நியாயப் படுத்துகிறார்கள் ?என்பதற்கு செந்தில் பாலாஜியின் ஒரு விளக்க அறிக்கை . மக்களை முட்டாளாக்கும் அறிக்கையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *