செய்தித்துறை! மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டிய துறை! மத்திய ,மாநில அரசு இதை முக்கிய கவனத்தில் கொண்டு இனியாவது பத்திரிக்கை துறையில் ,மாற்றம் கொண்டு வருமா? – Makkal adhikaram .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

செய்தித் துறையில் ஒரு வரைமுறை இல்லாத ஒழுங்குபடுத்த படாத துறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதாவது செய்தித் துறை மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? யாருக்கு அது முக்கியத்துவமாக இருக்க வேண்டும் என்று கூட தெரியாமல் செய்தித் துறை செயல்பட்டு வருகிறது.

மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவிக்க கூடிய பத்திரிகைகள் ,மக்களுக்காக இல்லாமல் ஆட்சியாளர்களின் சுயநலங்களுக்காகவும், அவர்களின் கட்சி சுயநலத்திற்காகவும், அரசு செய்தியை முன்னிறுத்தி, இத்தனை உள்ளடி வேலைகளும் பத்திரிகையின் சர்குலேஷன் சட்டங்கள் மூலம் செய்தித்துறை தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல் கொள்கை முடிவாக தங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே அதை கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

மேலும், பத்திரிகையின் செய்தி உண்மைத் தன்மை ,தரம் ,தகுதி இதன் அடிப்படையில் பத்திரிக்கையை பிரித்து எடுக்காமல், தினசரி பத்திரிக்கை மட்டுமே முக்கியத்துவமானது என்று எடுத்து கொண்ட சட்டம் பத்திரிக்கை துறைக்கு எதிரானது. எந்த உண்மைகள் மக்களுக்கு போய் சேர வேண்டும் ?அது தினசரி சொன்னால் என்ன? வாரம் சொன்னால் என்ன? மாதம் சொன்னால் என்ன? அதன் அடிப்படையில் பத்திரிக்கையின் தரம் பிரித்து இருக்க வேண்டும். ஆனால் தினசரி என்று சொல்லி ,தினசரி என்ன செய்திகள் மக்களுக்கு இந்த பத்திரிகைகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது? என்பதை செய்தித்துறை விளக்க முடியுமா? அரசியல் கட்சியினரை மக்களிடம் விளம்பரப் படுத்துவது தான் பத்திரிகையின் நோக்கமா? அல்லது அதுதான் செய்தித்துறையின் நோக்கமா? அது மட்டுமல்ல,

கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் தான் பத்திரிக்கை என்று முடிவு செய்தது மிகப்பெரிய செய்தி துறையின் தவறு. தகுதியை வரையறுத்து கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்கள் சர்குலேஷனை வரையறுத்து தினசரி பத்திரிக்கை மட்டுமே செய்தித்தாளாக செய்தித்துறை கணக்கில் எடுத்துக் கொண்டது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது.மேலும்,

இது 50 ஆண்டுகளுக்கு முன் இந்த கணக்கு சரியானது தானா? அப்போது நாலு பத்திரிக்கை .இப்போது லட்ச கணக்கில் பத்திரிகை. அப்போது போட்டியில்லை. இப்போது பத்திரிக்கை துறை! போட்டி உலகம்.அதற்கு தகுதியற்ற பத்திரிகைகளும் போட்டி ,அதேபோல் தகுதியற்ற செய்தியாளர்களும் போட்டி. இதுதான் இன்றைய பத்திரிக்கை துறையின் போட்டி..

மேலும், மக்கள் அப்போது அச்சு ஊடகத்தை தான் ,நம்பி இருந்தார்கள். இப்போது இணையதளம் ,செல்போன், சமூக ஊடகம் இதை நம்பி இருக்கிறார்கள். அதனால் தான் மக்கள் அதிகாரம், தொடர்ந்து பத்திரிக்கையின் இணையதளத்தின் பார்வையாளர்களை மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை சர்குலேஷனில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.தவிர, அந்த காலத்தில் அச்சு ஊடகம் தான் இருந்தது. மக்கள் அதைத் தவிர, வேறு எதுவும் அவர்கள் படிக்கவில்லை. அந்த காலத்திற்கு அது பொருந்தும்.

தற்போது பத்திரிகைகளை வாங்கி படிக்கும் ஆர்வம் மக்களிடம் இல்லை. மேலும், எங்கே பத்திரிகைகள் விற்பனையாகிறது? பத்திரிகைகளின் வால்போஸ்டர் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது . அது மட்டுமல்ல வால் போஸ்டர் தொங்காத பத்திரிகைகளுக்கும் ,சலுகை, விளம்பரங்கள் பஸ் பாஸ் ,உள்ளிட்டவை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாரத்துக்கு ஒரு தடவை அடிப்பது ,மாசத்திற்கு ஒரு தடவை அடிப்பது ,அதுவும் கணக்கு காட்டி ,அதுவும் தினசரி பத்திரிகை என்று சலுகை, விளம்பரங்களை இந்த செய்தி துறை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்படி செய்தித் துறை தகுதியற்ற ஒரு துறையாக பத்திரிக்கை துறையில் செயல்படுவது பத்திரிக்கை துறைக்கே கேவலம். ஆண்டுக்கு சுமார் 100 கோடி முதல் 500 கோடி செலவு செய்யக்கூடிய துறையாக இது உள்ளது. மேலும்,இதனால், மக்களுக்கான பயன்கள்? என்று பார்த்தால் ஜீரோ. இது யாருக்கு பயன்கள் ?கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தான் அதிக பயன்கள்.

மேலும், இந்தத் துறையில் அதைவிட கேவலம் , மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் ,(PRO) இவர்கள் கரை வேஷ்டி கட்டாத கட்சிக்காரர்கள். எந்த ஆட்சி வருகிறதோ, அந்த ஆட்சியின் கட்சிக்காரர்களாகவே மாறி விடுவார்கள். அப்போதுதான் இவர்கள் இந்தத் துறையில் பிழைப்பு நடத்த முடியும். கட்சிக்காரர்களுக்கு பத்திரிக்கை பற்றி என்ன தெரியும் ? அதனால், பத்திரிகை என்றால் என்ன ?அதன் நோக்கம் என்ன? இதற்கெல்லாம் இந்த செய்தி துறை அதிகாரிகள் பதில் சொல்ல முடியுமா? மேலும்,

இந்த துறையில் அதிகம் அவர்களுக்கு வேலை இல்லை. இந்த லட்சணத்தில் அதற்கும் பத்து பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் .அது என்ன வேலை செய்கிறார்கள் ?அதனால் மக்களுக்கு என்ன பயன்? ஒன்றும் புரியவில்லை. ரெண்டு பேர் செய்யக்கூடிய வேலையை எத்தனை பேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.? இதில் எல்லாம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படவில்லையா? மேலும் ,

இந்த செய்தி துறை சர்குலேஷன் சட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை கொடுப்பதாக சொல்வது நியாயமற்றது .அர்த்தமற்றது. உண்மையை எடுத்துச் சொல்லும் போது பல பொய்கள் விமர்சனங்களாக சேற்றை வாரி இறைத்தாலும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், உண்மை உண்மைதான்! பொய் தான் .அதனால்தான்,

மக்கள் அதிகாரம் தொடர்ந்து இந்த சட்டங்களை காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என்று செய்தித் துறைக்கு பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இப்போது அது புரியுமோ ,என்னவோ தெரியவில்லை. ஏனென்றால்

அங்கே என்னுடைய சுயநலத்திற்கு !அதாவது அரசியல் அதிகாரத்திற்கு ,யாரெல்லாம் பத்திரிகை நடத்துகிறார்களோ, அவர்களுக்கு மட்டும் தான் அரசியல் அதிகாரத்தின் சலுகை ,விளம்பரங்கள் என்றால்,அங்கே பத்திரிகை சுதந்திரம் எதுவுமே கிடையாது .எல்லாம் அடிபட்டு போய்விட்டது.மேலும்,

இதற்கு அடுத்தது இந்த சலுகை விளம்பரங்கள் கொடுப்பதனால், அரசு அடையாள அட்டை கொடுப்பதனால், இது அங்கீகாரம் உள்ள பத்திரிக்கையாகவும், பத்திரிகையாளர்களாகவும் ,அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதன் அடிப்படையில் அங்கீகரித்திருக்கிறீர்கள்? எதன் அடிப்படையில் இதற்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கிறார்கள்? என்ற கேள்விக்கு செய்தி துறையில் பதில் சொல்ல முடியாது.மேலும்,

மக்களின் வரிப்பணத்தை குறிப்பிட்ட பத்திரிகைகளுக்கு கொடுப்பதால் ,அவர்கள் பத்தாயிரம் பிரிதிகளை அச்சடிக்கிறார்கள். அந்த பத்தாயிரம் பிரதிகளும் விற்பனையாகுகிறதா ?இல்லையா? என்பது இவர்களுக்கு தெரியாது. இவர்களுடைய கணக்கு பத்தாயிரம் அச்சடிக்க வேண்டும். அந்த 10,000 எந்த அச்சகத்தில் அடிக்கப்பட்டது? பேப்பர் எங்கிருந்து வாங்கப்பட்டது? இவ்வளவுதான் அவர்களுடைய ஆடிட் . தவிர,ஆடிட்டர் சைன் பண்ணி 10,000 பிரதிகள் தினசரி, வாரம்,மாதம், தோறும் அடிக்கிறார்கள். எவ்வளவு விற்றது ரிட்டன்,வந்தது எவ்வளவு ? அதுவும் சர்குலேஷன் கணக்கா?

இவர்களுடைய எத்தனை ஏஜென்ட்கள்? ஒரு நாளைக்கு எவ்வளவு பத்திரிக்கை விற்றது ?இவர்களுடைய வங்கி கணக்குக்கு எவ்வளவு பணம் போடுகிறார்கள்?என்பதை செய்தி துறை ஆய்வு செய்ததுண்டா? மேலும்,

.பத்திரிக்கை விற்றால் தானே மக்களிடம் செய்தி போய் சேரும் .அது ரிட்டன் வந்தால் வெறும் வேஸ்ட் பேப்பர் தானே, வேஸ்ட் பேப்பர் வாங்குபவர்கள் இடம், இந்த கணக்கு கேட்டால், ஒரு நாளைக்கு எந்தெந்த பத்திரிக்கை எவ்வளவு ரிட்டன் வாங்குகிறார்கள்? என்பதை அவர்கள் துல்லியமாக சொல்லி விடுவார்கள்.மேலும்,

எனக்குத் தெரிந்த ஒரு சாமியார் இந்து,, தினமணி ,தினத்தந்தி ,தினமலர் ,இந்த தினசரி நாளேடுகள் அத்தனையுமே இன்று அதிகப்படியான பேப்பர்கள் ரிட்டன் வருகிறது என்கிறார். அவர் பத்திரிகைகளை ரிட்டன் எடுப்பவர்.

மேலும்,செய்தித்துறை இது உண்மையா? பொய்யா ?என்பதை ஆய்வு செய்து பார்த்து கொள்ளட்டும். பிறகு சர்குலேஷன் சட்டம் எதை வைத்து இவர்கள் செய்து துறையில் இந்த பத்திரிகைகளுக்கெல்லாம் சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்? அது மட்டுமல்ல,

செய்தியாளர்களின் அரசு அடையாள அட்டை , இருந்தால் மட்டுமே, பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில், உறுப்பினர்களாக சேர முடியும். அப்படி என்றால் ஒரு பத்திரிக்கையாளனின் தகுதி அரசின் அடையாள அட்டை தீர்மானிக்கிறதா ? அல்லது ஒருவனுடைய எழுத்தாற்றல், திறமை, தகுதி, தீர்மானிக்கிறதா? எது தீர்மானிக்கிறது? என்பதை செய்தித்துறை பத்திரிக்கை உலகிற்கு சொல்ல முடியுமா? மேலும்,

இந்த நல வாரியம் ஸ்டாலினுடைய சொந்த ஊடகங்களும், அவருக்கு வேண்டிய பத்திரிகைகளும், மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றக்கூடிய செய்தியாளர்களுக்கு மட்டும்தான் நல வாரியத்தில் உறுப்பினராக சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது . அவர்கள் தான் அதில் முக்கிய நிர்வாகிகளாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி தகுதியான பத்திரிக்கையாளர்களை நல வாரியத்தில் சேர்ப்பார்கள்? இது இப்போது மக்கள் பஸ்ஸிலும் ,ரயிலிலும் ஓடிப் போய் சீட்டைப் பிடித்துக் கொண்டு ,எனது என்று உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களே, அதுபோல் இருக்கிறது.மேலும்,

அதாவது திமுக ஊடகங்களும் , அதை சார்ந்த ஊடகங்களும் ,தமிழ் நாட்டில் சுமார் 15 திற்கும் மேல் இருக்கிறது. அதற்கு மட்டுமே இந்த அரசு அடையாள அட்டை கொடுத்து நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்கப்படுகிறார்கள்.மேலும்,

நாட்டில் உண்மையை எழுதக்கூடிய பத்திரிகைகளுக்கு ஜர்னலிஸ்ட் என்று போட்டுக் கொள்ளக்கூடிய தகுதி உள்ள பத்திரிகையாளர்களுக்கு கூட செய்தித்துறை, இந்த பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதில்லை. பத்திரிக்கை துறைக்கு இது ஒரு மிகப்பெரிய கேவலம்.மேலும், அரசியல் கட்சிகளுக்கு எந்த தகுதியும் தேவையில்லை அதில் உறுப்பினராகவோ அல்லது பொறுப்புகளை கொடுக்கவோ தகுதி தேவையில்லை.

ஆனால், தகுதி, திறமை ,எழுத்தாற்றல் இவை இருந்தால் மட்டும் தான் ஒருவன் செய்தியாளராகவோ அல்லது பத்திரிக்கையாளனாகவோ வர முடியும். அப்படி என்றால் எதை வைத்து செய்தித் துறையில் இதை எல்லாம் தீர்மானிக்கிறார்கள்? எல்லோருக்கும் அரசியல் பின்புலமா? அது கட்சியாகி விடுமே? அப்படி என்றால் ,இது பத்திரிக்கை துறையா? இல்லை அரசியல் கட்சித் துறையா? இல்லை செய்தித் துறையா? எது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்குமா?

மேலும் செய்தித் துறை!எதை வைத்து நீங்கள் அவர்களை பத்திரிக்கையாளர்கள் என்று முடிவு செய்கிறீர்கள்? செய்தியைக் கொடுப்பவன் எல்லாம் பத்திரிக்கையாளன் ஆகி விட முடியாது .அவர்கள் செய்தியாளர்களாகத்தான், இருக்க முடியும்.

ஒரு பத்திரிக்கையாளன் என்றால் !ஒரு துறை சார்ந்த அவலங்களை வெளிப்படுத்தக்கூடிய தகுதி இருக்க வேண்டும். அவர்கள் தான் ஜர்னலிஸ்ட். என்று போட்டுக் கொள்ளக் கூடிய தகுதி உடையவர்கள். அரசு அடையாள அட்டையும், பத்திரிகைகளின் அடையாள அட்டையும், ஜர்னலிஸ்ட்( journalists) அதாவது ஒரு பத்திரிக்கையாளனை தீர்மானிக்க கூடியது அல்ல .

மேலும்,செய்தியாளர்கள் அடையாள அட்டையை வைத்துக் கொண்டு ,நானும் ஜோர்னலிஸ்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதைவிட கொடுமை செய்தி ,எழுத தெரியாமல் செய்தியாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள் .எவனோ ஒருவன் போட்ட செய்தியை காப்பி அடித்து ,அதை போட்டுக்கொண்டு காலத்தை தள்ளக்கூடியவர்கள் ,எல்லாம் செய்தியாளர்கள் என்கிறார்கள். இப்படி செய்தியாளர்களின் அவலம் ஒருபுறம் இருக்க,

இதைவிட கொடுமை இந்த அடையாள அட்டையை 3000 ,5000 க்கு ,10 ஆயிரத்துக்கு சிறிய பத்திரிகைகளில் வாங்கிக்கொண்டு, நானும் பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்பவர்கள் ஒரு பக்கம் அதைவிட கொடுமை,.மேலும்,

வாட்ஸ் அப்பில் குரூப் ஆரம்பித்து விட்டு, நானும் பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்பவன் இருக்கிறார்கள். இப்படி இந்த செய்தித் துறை எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ?என்பதை இப்போதாவது செய்தி துறைக்கு தெரியுமா ? மேலும்,

நாட்டின் நான்காவது முக்கிய தூண் என்று சொல்லப்படும் , பத்திரிக்கை துறை, நாட்டின் பாதுகாப்புக்கும் ,மக்களின் பாதுகாப்புக்கும், மக்களின் நலனுக்கும், அரசு ,அரசியல் நிர்வாகத்திற்கும் ,உண்மையை வெளிப்படுத்தக்கூடிய இந்த பத்திரிகைத்துறை எவ்வளவு கேவலமான துறையாக இந்த செய்தி துறை ஆகியிருக்கிறது ?என்பதை தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் இது உண்மையா? பொய்யா ?என்பதை ஆய்வு செய்து பார்த்து கொள்ளட்டும்.

மேலும்,இவ்வளவு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் அரசியல் தலையீடு . இவன் பாதிப்பு யாருக்கு ?என்றால்! தகுதியான சமூக நலன் பத்திரிகைகள் ,தகுதியான பத்திரிகையாளர்கள், அவர்களுக்கு தான். இந்த செய்தியை பார்க்கும் நீதித்துறை நீதிபதிகள் !இதை சுமோட்டா வழக்காக கூட எடுத்து விசாரிக்கலாம். இது தேசநலனுக்கும், மக்கள் நலனுக்கும், முக்கியத்துவமான வழக்காக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *