
மக்களை ஏமாற்ற பல வழிகள் இருக்கிறது. அந்த வழிகளில் ஊடகங்கள், youtube கள், வாட்ஸ் அப் குழுக்கள், டீக்கடை விவாதங்கள், இது அத்தனையும் அரைகுறை அரசியலில், அரசியல் தெரியாத அப்பாவிகளிடம், அரசியலை ஏமாற்றும் கூட்டமாக உருவெடுத்து இருக்கிறது.

இதே தேர்தல் ஆணையத்தால் எதிர் கட்சிகள் ஜெயித்து அரசியலில் ஆட்சி செய்த போது, இந்த தேர்தல் ஆணையத்தின் மெஷின்களில் தான் ஜெயித்தார்கள். இதே மக்கள்தான் அதில் வாக்களித்தார்கள். அப்போது இந்த தேர்தல் ஆணையம் மோசடி செய்யவில்லையா ?

இப்போது எதிர்க்கட்சியான பிறகு, இவர்களை மோசடி செய்து விட்டதா தேர்தல் ஆணையம்? மக்கள் எதை சொன்னாலும் நம்புவார்கள். அதை ஏமாற்றக்கூடிய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ,வைத்து மக்களை அரசியல் செய்து ஏமாற்றலாம் .

இப்படி எல்லாம் காங்கிரஸ் கட்சி ராகுல், மம்தா பானர்ஜி, போன்ற அரசியல் கட்சி கூட்டணிகள், செய்தியாளர்களை சந்திப்பதும், அவர்களுக்கான யூடியூப் பேச்சாளர்களை வைத்து ,அரசியல் செய்வதும் ,இது மக்களை ஏமாற்றும் அரசியல்.
இது பற்றி மக்கள் அதிகாரம் சில தினங்களுக்கு முன் ,இதை செய்தியாகவும் வெளியிட்டது. இப்போது மம்தா பானர்ஜி தலைமையில், டெல்லியில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக கோரியும் ,எஸ் ஐ ஆர் (SIR ) நீக்க கோரியும், போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி , காக்ரோச் ஜனதா கட்சி முக்கிய இடம்பெறும் என்று தெரிய வருகிறது. மேலும், மக்களை முட்டாளாக்குவதற்கு அரசியல் கட்சிகள் இருக்கக் கூடாது. பத்திரிகை, தொலைக்காட்சிகள் இருக்கக் கூடாது .சமூக ஊடகங்கள் இருக்கக்கூடாது. அப்படி என்றால், இவையெல்லாம் பல சுயநலத்திற்கு ஆகிவிட்டதா? மேலும்,

தேர்தல் ஆணையம் தவறு செய்திருந்தால், ஆதாரத்துடன் நிருபியுங்கள். சட்டபடி நடவடிக்கை எடுங்கள். தவறில்லையே! அதை பற்றி பேசாமல், குற்றத்தை சொல்லிக் கொண்டு, குறைகளை சொல்லிக்கொண்டு, ஊடகங்களை வைத்து,மக்களை ஏமாற்றுவது ,பொதுமக்களை முட்டாளாக்கும் வேலை.

மேலும்,எஸ். ஐ ஆர் நீக்கினால்,பங்களாதேஷ் முஸ்லிம்களை எல்லாம் ஓட்டு போட வைக்கலாம். இறந்தவர்களின் பெயர் வைத்து, கள்ள ஓட்டு போடலாம் . அதன் மூலம் பதவி அதிகாரத்தை பெறலாம். இதற்கு தேர்தல் ஆணையம் இவர்களுக்கு துணை போக வேண்டுமா?

மேலும்,இது மக்களுக்கு இந்த உண்மை தெரியாமல் மறைத்து, தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு சுமத்தி, நாங்கள் தேர்தல் ஆணையத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளவர்கள் அல்ல, என்று எப்படியும் பேசுவது எதிர்க்கட்சிகளின் திறமை ஆகிவிட்டதா?

இப்படிப்பட்ட அரசியல் கட்சியினரிடம் வாக்காளர்கள் ,முட்டாள்களாக இருந்தால், அது தேசத்திற்கு ஆபத்து, மக்களுக்கும் ஆபத்து. தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டு மக்களுக்காக பணியாற்றுவதுதான் அரசியல்