தமிழ்நாட்டில்! அரசியல் மக்களுக்காக இல்லாமல், அவர்கள் சொந்த நலனுக்காக அரசியலாக்கி, இருப்பதால் ! இன்று அரசியல் கட்சியினர், கட்சிகளை மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் புரிந்து வாக்களிப் பார்களா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சமீபத்தில் நடந்த தமிழக வெற்றி கழகம் சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு வெற்றியை பெற்றுள்ளது. அது எல்லா நேரத்திலும் நடக்குமா?

மேலும், இன்றைய அரசியல்வாதிகள் என்று சொல்லக்கூடிய கட்சியினர் எந்த பக்கம், எந்த கட்சிக்கு போனால்? நமக்கு பணமும், பதவியும் கிடைக்கும் ?அங்கு போய் ஒட்டிக் கொள்கிறார்கள். மேலும்,

கொள்கை இல்லாமல், மக்களுக்கான சேவை மனப்பான்மை இல்லாமல், அரசியல் கட்சிக்கு வருவது வீண். தவிர,மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நீண்ட காலம் மக்களை ஏமாற்ற முடியாது.

மேலும்,மக்களின் எதிர்பார்ப்புகளை விட, இந்த அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்புகள் அதிகமாகி விட்டது. நேற்று அதிமுகவில், இன்று திமுகவில், இன்று திமுகவில், நாளை தவெகாவில் இருக்கிறார்கள்.

அப்படி என்றால், இந்த அரசியல் வியாபாரத்தில், இந்த கூட்டம் பணத்திற்காக பதவிக்காக அலைந்து கொண்டிருக்கிறதா?. மேலும், இனி யார் மக்களுக்காக சேவை செய்பவர்கள் ?யார் மக்களுக்காக பணியாற்றுபவர்கள் ?என்பதை பார்த்து தான் வாக்களிக்க வேண்டும். 19 65 க்கு முன் இருந்த தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் மக்களுக்காக வாழ்ந்தார்கள் ஆனால் தான் அவர்கள் வறுமையை அனுபவித்தார்கள். அவர்கள் குடும்பம் எவ்வளவு பேர் சொத்துக்களை இழந்தார்கள்.

ஆனால், இப்போது ஒன்றும் இல்லாதவன் , எந்தத் தொழிலும் தெரியாதவன்,கூட கட்சி பெயர் சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றி முட்டாள் ஆக்கிக், கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். இதற்கு தேவை அவனுக்கு உடம்பும், உதாரும், மீசை, இதுவே ஒரு அரசியல் என்று அரசியல் தெரியாதவனிடம் அரசியல் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் படித்த சமுதாயம் சிந்தியுங்கள். இவர்களுடைய ஊடகப் பொய்களை எல்லாம் நம்பாதீர்கள். யார் தகுதியானவர்கள் என்பதை தேர்வு செய்யும் போது தான் அது மக்களுக்கான ஆட்சி. இல்லையென்றால், இவர்கள் கொள்ளையடிக்கும் ஆட்சி!

மேலும் , மக்கள் எப்போது ,ஆயிரம், 500, க்கு, 2000 , மற்றும் இலவச பொருட்களுக்கு வாக்களித்ததன் விளைவு , இன்று தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால ஊழல் ஆட்சியை தான் பார்க்க முடிந்தது. அது மட்டுமல்ல,

ஒரு பக்கம் ஜாதியும், மதமும் உங்களுக்குள் வெறித்தனமாக பேசி, பேசி, அவர்கள் ஜாதிக்கும் செய்யாமல், அவர்கள் செய்து கொள்வதற்கு எதற்கு வாக்களிக்க வேண்டும்?

மேலும்,மக்கள் விஜய்யும் ,இன்னும் ஆறு மாத காலம் பார்ப்பார்கள், சரியில்லை என்றால்! நிச்சயம் மாற்றுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்போதே இவர்களுடைய கட்சி எம்எல்ஏ எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் போன் செய்தால் கூட எடுக்க மறுக்கிறார்கள். தவிர,கட்சிக்காரர்கள் அதற்கு மேல் இருக்கிறார்கள்.

இதையெல்லாம் வைத்துக் கொண்டு நீண்ட கால அரசியலில் விஜய்யால் பயணிக்க முடியுமா? திருவள்ளூர் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ போன் செய்தால் கூட ,எடுக்காமல் போனால் இவர் என்ன இந்த தொகுதி மக்களுக்கு நல்லது செய்து விடப் போகிறார் ?என்பதை விஜய் தான் அவரை கேள்வி கேட்க வேண்டும்.

மேலும், நாங்கள் எல்லாம் விஜய்யை பார்த்து தான் வாக்களித்தோம். இவரைப் பார்த்து வாக்களிக்கவில்லை என்கிறார்கள் பொதுமக்கள். இந்த நிலையில், மக்கள் பணிக்கு வந்து விட்டு, உங்கள் சொந்த வேலையை பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை என்றால் ,அதற்கு சட்டமன்ற வேட்பாளராக இவர் நின்று இருக்கக் கூடாது.

மேலும்,இனிமேல் தகுதியற்றவர்கள் எந்த அரசியல் கட்சியில் நின்றாலும், மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பது மக்களின் முட்டாள்தனம். கட்சி என்பது ஒரு பெயர் தான், கொடி என்பது ஒரு சின்னம்தான் ,ஆனால் ! மக்களுக்கான, அவர்களுடைய உழைப்பை நம்பி தான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

எனவே ,அதை செய்ய தகுதி இல்லாதவர்கள் வெறும் துண்டுகளை போட்டு, கொண்டு ,வேஷ்டிகளைக் கட்டிக் கொண்டு ,நம்மிடம் வேஷம் காட்டுவதற்கு ,அரசியல் கட்சியினர் தேவையில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டால் சரி ‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *