மக்களை முட்டாளாக அரசியல் கட்சிகள் இன்று பயன்படுத்தும் ஒரே தளம்! சமூக ஊடகங்கள்! சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள் – சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு அரசியல் பதிவையும் உண்மை என்று நம்பாதீர்கள். திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட காணொளிகள், தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்கலாம்.


செய்தியை நம்புவதற்கு முன் சரிபாருங்கள்.
பிரச்சாரத்தை அல்ல — உண்மையை நம்புங்கள்.
“சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள்!”
— சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு

சமூக ஊடகங்கள் பத்திரிகைகள் போல் காட்டிக்கொண்டு பேசிக்கொண்டு ரீல்ஸ் போட்டுக் கொண்டு, ஒரு சுயநலக் கொள்கையில் செயல்படும் சமூக ஊடகங்களை நம்பி மக்கள் ஏமாறாதீர்கள். இது மக்களுக்கு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கும் உண்மை .

பல பொய்களில் ஒரு உண்மை இருக்கும் அந்த உண்மையும் எத்தனை சதவீதம் என்று அதில் தெரிந்து கொள்ள முடியாது இதுதான் இன்றைய சமூக ஊடகங்களின் உண்மை நிலை.

மேலும்,இன்று மீடியா என்ற பெயரில் மைகளை நீட்டி கருத்து கேட்பது, சில பேரை சொல்ல வைத்து அக்கருத்தை பதிவு செய்து மக்களை முட்டாள் ஆக்குவது, சொல்பவர்களின் தகுதி என்ன என்று கேட்பவர்கள் பார்க்க வேண்டும். அந்தக் கருத்தை சொல்வதற்கு அவர்களுக்கு தகுதி இருக்கிறதா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் .

இது தெரியாமல், யூடியூபில் சேனல் என்று சொல்லி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள். அதுமட்டுமல்ல, இன்று இவர்களுக்கு பத்திரிக்கை பற்றி தெரியாமலே, தங்களைப் பத்திரிக்கையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . அதுதான் இன்றைய

சமூக ஊடகங்கள் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு இணையதளம்! இந்த இணையதளத்தில் எது நல்லது? எது கெட்டது ?என்பதை எல்லாம் அவர்கள் பார்ப்பதுமில்லை.

மேலும்,இதனால் சமூகத்திற்கு மக்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பு வரும்? என்பதை பற்றியும் யோசிக்க மாட்டார்கள். கருத்து சொல்வதற்கு சுதந்திரம் நாட்டில் இருக்கிறது. அதனால், எப்படிப்பட்ட கருத்தையும் சுதந்திரமாக சொல்லிவிடலாம். அது அரசியல் கட்சி சார்ந்தும் இருக்கலாம்.தவிர,

அதன் மூலம் தனக்கு என்ன ஆதாயம்? அதை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? பார்ப்பார்கள்? அதன் மூலம் நமக்கு வருமானம் வருமா? இதுதான் பத்திரிக்கை துறையா? மேலும்,உண்மை எது ? பொய் எது? மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவது தான் பத்திரிக்கை. அதிலும் நடுநிலையான பத்திரிகைகள் தான் மக்களிடம் உண்மையை தெரிவிக்கும் பத்திரிக்கைகள்.

மற்றவைகள் ஒரு பக்கம் அரசியல் கட்சியைச் சார்ந்ததாக இருந்தால், அந்த கட்சிக்கு ஆதரவாகவும், மற்ற கட்சிக்கு அது எதிராகவும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் தினசரி, மாதம், வாரம், மாதம் இருமுறை என்று பிரிவுகளை ஏற்படுத்தி, இதற்குள் சர்குலேஷன் சட்டத்தினால், மக்களுடைய வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல், வியாபார நோக்கம் கொண்ட பத்திரிகைகளும், அது உண்மையாக இருந்தாலும் ,பொய்யாக இருந்தாலும், வியாபார நோக்கத்தில் அதை சொல்லிவிட வேண்டியது .அதாவது உண்மைக்கு மாறாக செய்திகள் வெளிவரும் ,இதை எல்லாம் இன்றைய பத்திரிக்கை துறையின் மிகப்பெரிய அவலங்கள்.

இதை தான் வரைமுறைப்படுத்த வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்துகிறது. அது மட்டுமல்ல ஆட்சியாளர்களுக்காக செய்திகள் சாதகமாக செய்திகளை வெளியிட்டால் அதற்கு மட்டுமே சலுகை ,விளம்பரங்கள் என்று கடந்த ஆட்சி முதல் தற்போது வரை தொடர்கிற செய்தி துறையின் அவலங்கள்.

இது எல்லாமே மக்களை முட்டாள் ஆக்க பல வழிமுறைகள் இருப்பது போன்று இதுவும் ஒன்று. அதாவது அரசியல் கட்சியினர் மேடைகளில் பேசுவார்கள். இப்போது சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள். அதுதான் வித்தியாசம். எனவே,

மக்களுக்கு இனியாவது, சமூக ஊடகங்களின் facebook, twitter, whatsapp மற்றும் youtube போன்றவற்றின் செய்திகளின் உண்மையைப் பற்றி புரிந்ததா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *