தமிழ் நாட்டில் மிகப்பெரிய ஊழல்களை மறைத்து, திமுக, அதிமுக அரசியல் கட்சிகள்! மக்களை ஏமாற்றி, நியாயப்படுத்தும் , அரசியல்! தமிழக மக்களை ஏமாற்றம் அரசியல்! – உண்மையை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மறைப்பது ஏன்? -சமூக நலன் பத்திரிகைகள்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக, திமுக ஆட்சியின் ஊழல்கள், அராஜகங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு, சமூக நலன் பத்திரிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கேள்விக்குறியானது.

மேலும்,மக்கள் எதை சிந்திக்க வேண்டும் என்பதை சிந்திக்காமல், வாக்களிப்பது தான் ஜனநாயகத்தின் தோல்வி. தவிர,மக்களுக்கு கொடுத்திருக்கும் வாக்குரிமையை பணத்திற்கோ அல்லது ஏமாற்று அரசியலுக்கோ அல்லது தங்கள் சுயநலத்திற்கோ பயன்படுத்தாமல், வாக்களிப்பது தான் ஜனநாயகத்தின் வெற்றி.

அதுதான் நாட்டு மக்களின் முன்னேற்றம். இந்த தேசத்தின் பாதுகாப்பு ,பொருளாதார வளர்ச்சி ,எதிர்கால இந்தியாவின் வளர்ச்சி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு ,தொழில் முன்னேற்றம் ,இது அத்தனையும், இதற்குள் தான் அடங்கி இருக்கிறது.

இதைப் பற்றி எல்லாம் ஊடகங்கள் பேசாமல், தொலைக்காட்சிகள் பேசாமல், யூட்யூப்கள் பேசாமல், சம்பந்தமில்லாத குற்றம், குறைகளை பேசிக்கொண்டு, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்களின் சுயநலம் அரசியல்! அரசியல் கட்சிகளின் சுயநலத்துடன் இணைந்து செயல்படுகிறது.

மேலும்,மக்கள் மாற்றும் தேவை என்று தான் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள். இந்த வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி. மக்களுக்கான வெற்றி. தவிர,கடந்த ஆட்சிகளில் சாமானிய மக்கள் ஒரு ஆட்சியாளரிடமோ அல்லது அதிகாரிகளிடமோ சென்று புகார் அளித்தால் கூட, அதற்கு எந்த மதிப்பும், மரியாதையும் இருக்காது .அந்த காகிதத்தை தூக்கி குப்பையில் போட்டு விடுவார்கள்.

அதுமட்டுமல்ல, எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களே, ஊழல் பிரச்சனைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கோ அல்லது தலைமை செயலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கோ புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இருக்காது. இப்படிப்பட்ட ஆட்சியை எந்த மக்கள்தான் விரும்புவார்கள்?

அதேபோல், காவல்துறையில் புகார் அளித்தால், அரசியல் செல்வாக்கு மற்றும் பதவியில் உள்ளவர்கள், ,பணக்காரர்கள் அவர்களுடைய பரிந்துரை தான் எடுபடும். சாமானிய மக்களின் உண்மையான கோரிக்கைகள் ,நியாயமான புகார்கள், நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது என்பதை மீண்டும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் வாக்காளர்களுக்கு இதையெல்லாம் மக்கள் அதிகாரத்தின் பத்திரிக்கையின் வாயிலாக இதை நினைவுபடுத்துகிறேன்.

மேலும்,மக்களாட்சி என்பது மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஆட்சி தான் மக்களாட்சி! ஆனால், அரசியல் கட்சிக்காரனுக்காகவும் ,அவர்கள் குடும்பத்திற்காகவும் ,ஆட்சி நடத்துவது ஜனநாயகத்தின் ஆட்சி அல்ல, என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்கிறார்களோ, அப்பொழுதுதான் இந்த அரசியல் கட்சிகளின் சுய லாபங்கள் உங்களுக்கு புரிய வரும்.

கடந்த ஆட்சிக்காலத்திலும் திமுக, அதிமுகவை பற்றிய ஊழல்கள் அராஜகங்கள் , மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து எழுதி வந்தோம். இந்த உண்மைகள் வாசகர்களுக்கு புரியும். இருப்பினும், அதற்கான எந்த நடவடிக்கையும் இருக்காது. மேலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு மக்கள் ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள் .அந்த வாய்ப்பை அவர் எப்படி செயல்படுத்துகிறார் என்பதை , சில காலம் வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.

அதுதான் ஜனநாயகத்தின் அரசியல் மாற்றம், சமூகத்தின் முன்னேற்றம், நாட்டின் முன்னேற்றம். எனவே, மக்கள் ஊழல்களை நியாயப்படுத்துவது, அராஜகங்களை நியாயப்படுத்துவது, அநியாயங்களை நியாயப்படுத்துவது, இல்லையென்றால், தங்களை உத்தமர்கள் என்று பேசிக் கொண்டிருப்பது, இது எல்லாம் தமிழ்நாட்டு மக்களை அரசியல் கட்சிகள் ,ஏமாற்றம் போலி அரசியல்! என்பதை வாக்காளர்கள் மற்றும் தமிழக மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ……?

மக்களுக்காக…! மக்களுடன் என்றும் …..! – மக்கள் அதிகாரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *