திமுகவினரை கைது செய்வதால்! அவர்கள் மோசடி செய்த பணத்தை தமிழக முதல்வர் விஜய் அவர்களிடம் இருந்து எடுப்பாரா? – தமிழக மக்கள் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

தமிழக முதல்வர் விஜய் திமுகவை எதிரியாக அரசியல் செய்து தான் ஆட்சிக்கு வந்தார். வந்தவர் இன்னும் ஒருவரை கூட கைது செய்யவில்லை.

மேலும் ,பத்திரிகைகளில் தான் கைது வாய்ப்பு, கைது செய்யப்படுவார் என்று எழுதிக் கொண்டிருக்கிறோமே தவிர, ஒருவரையும் கைது செய்யவில்லை.

தவிர,அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, மோசடி செய்து கொள்ளையடித்த பணத்தை எப்போது இந்த தவெகஆட்சி கைப்பற்ற போகிறது? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி?

மேலும்,துரைமுருகனின் மணல் கொள்ளை ,அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் கல்வி கொள்ளை, கே.என்.நேரு நகராட்சி கொள்ளை, செந்தில் பாலாஜி டாஸ்மாக் கொள்ளை, சேகர்பாபு அறநிலைத்துறை கொள்ளை, மற்றும் உதயநிதி ஸ்டாலின் கைது, என்று இப்படிப் பல கொள்ளைகளை எழுதிக் கொண்டிருப்பதால், பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் அதை காண்பித்துக் கொண்டிருப்பதால் ,மக்கள் இதை எல்லாம் பார்த்து ஆறுதல் அடைய வேண்டுமா?

என்ன நடவடிக்கை ?இதுவரை விஜய் எடுத்தார்? இதுதான் தமிழக மக்களின் கேள்வி? மேலும்,வீடியோ போட்டுக் கொண்டிருப்பது ,பத்திரிகைகளில் எழுதி விட்டுப் போவது, தொலைக்காட்சிகளில் காண்பித்து ,ஆறுதல் படுத்துவது இதற்கெல்லாம் முடிவு எங்கே? எப்போது?

மேலும்,மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்களை ஒருபோதும் விடமாட்டேன் என்று சவால் விட்ட முதல்வர் விஜய் இதை எப்போது நிறைவேற்றப் போகிறார்? இதை செய்யவில்லை என்றால் ! இவர் அரசியலில் நடிக்க வந்து விட்டாரா? என்று தான் தமிழக மக்களின் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *