தேர்தல் ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடிதம் அனுப்பியும் அவரை பாதுகாக்க வேண்டிய நோக்கம் என்ன ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் செய்தி துறையில் கீழ் மட்டத்திலிருந்து, உயர் மட்ட அளவில் உள்ள அதிகாரிகள் வரை கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையரை மதிக்காமல் இருக்கிறார்களா?

மேலும்,தேர்தல் ஆணையத்திற்கென்று எந்த அதிகாரமும், இல்லையா? அது மட்டுமல்ல, நேற்று கூட தேர்தல் ஆணையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி நான் கேட்டபோது,தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் இருந்து சென்றுள்ளது.

அவர்கள் இவரை பாதுகாக்கிறார்களா? இல்லை ஏதோ ஒரு சிறிய பத்திரிகை தானே என்று அலட்சியப்படுத்துகிறார்களா? மேலும்,செய்தித் துறையில் கோடிகளில் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகளுக்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பார்களா? சமூக நலன் பத்திரிக்கைக்கு மரியாதை கொடுக்க மாட்டார்களா? அதையாவது சொல்லி விடுங்கள்.

பத்திரிக்கை பற்றி இயக்குனருக்கு எத்தனையோ முறை நேரில் கூட விளக்கி இருக்கிறேன். இவ்வளவு பாடம் எந்த பத்திரிகையும், தமிழ்நாட்டில் உங்களுக்கு எடுத்ததில்லை. அப்பவும் நீங்கள் இந்த பத்திரிகைகளை பற்றி என்ன புரிதல் இருக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

மேலும், ஒரு பி‌. ஆர் .ஓ பத்திரிகையின் உரிமைகளை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்படும் போது ,அதனுடைய நோக்கம் என்ன ? இதற்கு இயக்குனர் வைத்தியநாதன் பதில் சொல்ல தயாரா?

தவிர, பத்திரிக்கைக்கு கொடுக்கப்படும் ஐடி கார்டு இவங்க அப்பன் வீட்டு சொந்தா? இல்லை செய்தி துறை! தனியார் துறையா? இவர்கள் வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே கொடுப்பதற்கு? மற்ற மாவட்டத்தில் ஏன் கொடுத்தார்கள்? எனவே,

தேர்தல் ஆணையம் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கை என் சார்பில் இச்செய்தியின் வாயிலாக வலியுறுத்துகிறோம். மேலும் ,தேர்தல் ஆணையத்திலிருந்து கடிதம் அனுப்பியும் அதையும் மதிக்காமல் இருக்க காரணம் என்ன?

தவிர ,அரசியல் கட்சிப் பின்னணியில் இருந்து கொண்டு , இருக்கும் அதிகாரிகளுக்கு பத்திரிக்கையின் தரம், அர்த்தம், தகுதி எதுவுமே தெரியாது. கட்சிக்காரன் என்ன பேசுவானோ அதே மனநிலையில் இருக்கும் மனநோய் அதிகாரிகளாக இருக்கிறார்கள்.

இவர்கள் முதலில் பத்திரிக்கை பற்றி தெரிந்து கொள்ளாமல், பத்திரிக்கையை பணத்தை வைத்து மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறார்ள். இதைவிட ஒரு முட்டாள்தனமான அதிகாரிகள் கூட்டம், வேற எந்த துறையிலும் இருக்க மாட்டார்கள்.

மேலும்,ஒரு அறிவு சார்ந்த துறையில் அதிகாரிகள் பணத்தை வைத்து அறிவை மதிப்பீடு செய்வது வழிப்போக்கர்கள், படிக்காதவர்களை கேட்டால் கூட இதுக்கு அர்த்தம் சொல்வார்கள்.

அதனால், இதே அரசியல் அதிகாரம் வேறு ஒருவர் கைக்கு மாறும் போது, அப்போது இவர்கள் எப்படி நடிக்கப் போகிறார்கள்? ஏதோ அப்பன் அதிமுக கட்சியில் இறந்துவிட்ட அனுதாபத்தில் ஜெயலலிதா போட்ட ஒரு பிச்சை அஸ்வினுக்கு கிடைத்தது. வந்த பிறகாவது பத்திரிகை துறையை படித்திருக்க வேண்டும்.

மேலும்,இந்த அதிகாரம் எப்படி வந்தது? என்று பத்திரிக்கை சமூகத்திற்கு தெரியாததல்ல.எனவே, இவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில், இச்செய்தியின் வாயிலாக தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *