
தாயுமானவர் திட்டம் – ரேஷன் கடைகள் மூடப்பட்டதால் மக்கள் அவதி !
ஈரோட்டில்
முதலமைச்சரின் “தாயுமானவர் திட்டம்” கடந்த ஆகஸ்ட் 12, 2025 அன்று சென்னையின் தண்டையார்பேட்டையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டதாக அரசாங்கம் விளம்பரப்படுத்தியிருந்தாலும், திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மாவட்ட அளவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.மேலும், இத்திட்டம்,

ஈரோடு பி.பெ. அக்ரஹாரம் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிக்குட்பட்ட ரேஷன் கடை எண் 1–இல் இன்று வரையிலும் கதவுகள் பூட்டியே காணப்படுகின்றன. “கடை மூடப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பே மட்டும் ஒட்டப்பட்டிருந்தது. மக்கள் இதைத் தொடங்கும் போது சந்தோஷப்பட்டார்கள். ஆனால், தற்போது ஏழை ,எளிய நடுத்தர மக்கள் இத்திட்டம் குறித்து செயல்படாமல் மூடி வைத்துள்ளது குறித்து புலம்பி வருகின்றனர்.

தவிர ,மக்கள்! தங்கள் அத்தியாவசிய பொருட்களை அந்தக் கடையின் மூலம் பெற்றுவருகின்றனர். ஆனால், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கடை திறக்கப்படாததால், அவர்கள் அரிசி, தானியம், எண்ணெய் போன்ற அடிப்படை பொருட்களை தனியார் கடைகளில் அதிக விலையில் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் இந்த திட்டம் மக்களுக்காக துவக்கப்பட்டதா? இல்லை இவர்களுடைய அரசியலுக்காக துவக்கப்பட்டதா? எதற்காக? என்பதுதான் மக்களின் கேள்வி?

மேலும் இத்திட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்து, திமுக அரசு இத் திட்டத்தை அவசரமாக தொடங்கியதால், மாற்று பணியாளர்கள் நியமிக்கப்படாமல், நிர்வாக முன்னேற்பாடுகள் செய்யப்படாமல் கடைகள் இயங்காமல் போய்உள்ளன.மேலும்,
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் திமுக அரசு அலட்சியம் காட்டுகிறதா? தவிர, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கை எடுப்பாரா? அல்லது இது வெறும் அரசியல் பிரசாரத்துக்காக மட்டுமே துவக்கப்பட்ட திட்டமாக முடிவடையுமா?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே,
மக்களின் எதிர்பார்ப்பு – மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிடுமா?
– கோபிநாத்.அ,
ஈரோடு மாவட்டம்.