
திருவள்ளூர் தொகுதி பொறுத்தளவில், அரசியல் கட்சிகளின் மீது மக்கள் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள். அதிலும் ,அதிமுக, திமுக, என்று மாறி ,மாறி வாக்களித்து மக்கள் சளைத்து போய்விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இரு கட்சிகளிடமும் ,அந்த அளவுக்கு அதிருப்த்தியில், தொகுதி மக்கள்.
மேலும்,நகர மக்கள் தெளிவாகத் தான் இருப்பார்கள் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. அங்கே படித்தவர்கள் அதிகம். யாருக்கு வாக்களிக்க வேண்டும் ?என்பதை ஒருமுறைக்கு ,இருமுறை சிந்தித்து வாக்களிப்பார்கள்.

இருப்பினும் திமுக கட்சியினர் வீடு, வீடாக போய் பிச்சை கேட்பது போல், நூறு தடவைக்கு ,200 தடவை நடந்து யாருக்கு? உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?என்று இப்போதுதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதிலும் ,வி.ஜி. ராஜேந்திரன் ஜெயித்தது முதல் இன்று வரை, தொகுதி பக்கமே வராத ஒரு ஆள்.

மேலும், பணத்தால் ஜெயிக்கலாம் என்று வி.ஜி .ராஜேந்திரன் , நினைத்தாலும், மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ,யாருக்கு போட வேண்டும் ,என்று அவர்கள் மனதில் தோன்றுகிறதோ, அவர்களுக்குத்தான் இந்த முறை வாக்களிப்பார்கள் என்கின்றனர் . தவிர,இரண்டு கட்சிகளிடமும் மக்களின் அதிருப்தி மேலோங்கி நிற்கிறது.
மேலும்,அதேபோல் ரமணா அதிமுக சார்பில் போட்டியிடுகின்றார். இவர் மந்திரியாக இருந்த காலத்தில், நாயுடு சமுதாயத்திற்கு தான் அதிகம் செய்து கொண்டிருந்தார். இதனால், மற்ற சமுதாயம் வெறுப்பில் இருந்தது. மீண்டும் இவருக்கு மற்ற சமுதாயம் வாக்களிக்குமா? தொகுதிக்கு இவர் அறிமுகமானவர் என்றாலும், இவருடைய வெற்றி கேள்விக்குறியாக தான் இருக்கும்.

மேலும், எடப்பாடி செய்த தவறு இவருக்கு மீண்டும் சீட்டு கொடுத்தது. இவர் மீது ஊழல் வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கிலிருந்து இன்னும் இவர் வெளியில் வரவில்லை.மேலும்,
இதைத்தான் தேர்தல் ஆணையத்திடம், பலமுறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஊழல் வழக்கு, கிரிமினல் பின்னணி உள்ளவர்கள், தேர்தலில் நிற்க தடை செய்ய வேண்டும்.
மேலும்,விஷயம் தெரிந்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் ,படித்தவர்கள் ,பண்பாளர்கள் நிச்சயம் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்களிப்பார்களா? அவர்கள் நிச்சயம் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.மேலும்,
கிராமங்களில் அரசியல் தெரியாதவர்களிடம் ஏமாற்றலாம். அதிலும், எல்லோரையும் ஏமாற்ற முடியாது. அதனால், இந்த இரண்டு பேருக்குமே, திருவள்ளூர் மாவட்டம் நிச்சயம் டாப் கொடுக்கப் போகிறது.
அடுத்தது, பாமக சார்பில் வெங்கடேசன் என்பவர் நிறுத்தப்பட்டு இருக்கிறார். நியாயமாக பார்த்தால், இந்த தொகுதி வன்னியர்கள் அதிகம் இருக்கின்ற தொகுதி. ஆனால், வன்னியர்களே வன்னியர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
அந்த அளவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி ,வன்னியர்களின் துரோகியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு எப்படிப்பட்ட கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூட்டு கொடுத்து, இவர்களை ஊக்குவித்தாலும் ,தமிழ்நாட்டில் ஒரு தொகுதி யாவது இவர்களால் ஜெயிக்க முடிகிறதா?

வட மாவட்டத்தில் எவ்வளவு வன்னியர்கள் இருக்கிறார்கள்? ஏன் ஜெயிக்கவில்லை? இப்போது மட்டுமல்ல ,எப்போதும் ஜெயிப்பது கடினமானது. இன்னும் வன்னியர் சமுதாயத்தை வைத்து எப்படி ஏமாற்றி பிழைப்பு நடத்தலாம்? என்றுதான் இவர்களுக்கு அரசியல் தெரியுமே, தவிர, சமுதாயத்தை மதிக்கத் தெரியாதவர்கள். நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு போனாலும், ,விழுந்து விட்டீர்கள். இதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாறு.
மேலும்,விஜய் கட்சியின் சார்பில், விஜய்க்காக திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளராக டி. அருண்குமார் நிறுத்தப் பட்டிருக்கிறார். இவர் முதலியார் சமுதாயத்தை சார்ந்தவர் என்று கேள்விப்பட்டேன். இவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர்.விஜய் பார்த்து வாக்களிக்க,இந்த தொகுதியில் விஜய்க்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மேலும், விஜய் திருவள்ளூரில் பிரச்சாரம் செய்தால், மிகவும் வெற்றி வாய்ப்பு .திருவள்ளூர் தொகுதி மக்கள் விசில் சின்னத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால், திமுக, அதிமுக இரண்டு கட்சிக்கும் வன்னியர்களும், தாழ்த்தப்பட்ட சமுதாயமும், மாறி, மாறி பெரும்பான்மை சமுதாய மக்கள் வாக்களித்து ,அவர்களை சுரண்டி சாப்பிட்டது தான் மிச்சம் என்கின்றனர் தொகுதி மக்கள்.
எனவே, திருவள்ளூர் தொகுதி மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கும் தொகுதி மக்கள்.இந்த தொகுதியில் வேட்பாளர் அருண்குமார் சளைக்காமல், மக்களை சந்திக்க வேண்டும். மக்களை அணுகி பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.
ஏனென்றால்; இவர் தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர். அதனால், மக்களின் நம்பிக்கையை இவர் நேரில் பார்த்து வாக்கு கேட்க வேண்டும். அது மட்டுமல்ல, விஜயின் அரசியல் செல்வாக்கு மாற்றத்தை ஏற்படுத்துவது போல, திருவள்ளூர் தொகுதி மக்களுக்கு! மாற்றம் அவசியம் தேவையானது.