
2026 சட்டமன்ற தேர்தல் பல்வேறு இடங்களில் திமுகவினரின் அராஜகங்கள், கள்ள ஓட்டுக்கள், மற்றும் சில இடங்களில் வாக்கு இயந்திரத்தின் சீல் உடைப்பு , இதையெல்லாம் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து ,விசாரணை நடத்தி ,மறு தேர்தல் நடத்துவது அவசியமானது .

மேலும், இந்த புகார்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வரும்போது, மீண்டும் அப்படிப்பட்ட இடங்களில் மறு தேர்தல் அவசியம். தவிர,
தேர்தல் என்பது மக்களின் உணர்வு பூர்வமான நம்பிக்கை தான், ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்கு,! அந்த வாக்கு உரிமையை அடாவடித்தனம் செய்து, பறிப்பது திமுகவினரின் அராஜகத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.மேலும்,

இந்த தேர்தலில் ,அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் தமிழக முழுதும் என்னென்ன பிரச்சனைகள்? என்னென்ன தில்லுமுல்லுகள் ? செய்திருக்கிறார்கள்? இப்படிப்பட்ட அராஜகத்தின் முறைகேடுகளை அவர்கள் நியாயப்படுத்தி, குறுக்கு வழியில் சட்டத்தை மீறும் செயலுக்கு தேர்தல் ஆணையம் துணை நிற்க கூடாது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தமிழக வாக்காளர்களின் கோரிக்கை .

அந்த வேதனையின் மனக்குமுறலின், வெளிப்பாடுகள் தான் ,மக்கள் சமூக வலைதளங்களில், அவர்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு பக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கலாம் என்ற இளம் வாக்காளர்களுக்கு பெண்களுக்கும் ,ஆண்களுக்கும் ,பஸ் வசதி இல்லாமல், எந்த அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டு தங்களுடைய வேதனைகளை, ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள்.
இது ஒரு புறம் என்றால், பல்வேறு வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டுகள் போட்டிருக்கிறார்கள். எஸ் ஐ ஆர் (SIR)இல்லையென்றால், இன்னும் எவ்வளவு கள்ள ஓட்டுகள்? போட்டு இருப்பார்களோ தெரியவில்லை.
மேலும்,எந்தெந்த ஓட்டுகளை நாம் கள்ள ஓட்டாக போட முடியும்? என்று பட்டியலெடுத்து, இந்த கள்ள ஓட்டு திமுக கும்பல் செய்து வருவதற்கு, தேர்தல் ஆணையம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ஒருவருக்கு ஓட்டு போட பூத் ஸ்லிப்பும் கொடுத்திருக்கிறார்கள். அவர் வந்து ஓட்டு போடுவதற்கு முன் யார் ?அவர்களுடைய ஓட்டை போட்டது? இதை தேர்தல் ஆணையத்தால் கண்டுபிடிக்க முடியாதா?

அதற்காக தான் ஒவ்வொரு பூத்திலும் கேமராக்கள், மற்றும் பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்கள், ட்ரோன்கள் பறக்க விடுவது அவசியம் என்று அரசியல் கட்சயினர் தெரிவித்துள்ளனர்.
இனியாவது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தும் முன், பல்வேறு கடுமையான சட்ட விதிகளை பின்பற்றாமல், தேர்தல் நடத்துவது வீண்.