நாட்டில் அரசியல் கட்சியினர் சுயநலம்! உழைக்கும் மக்களுக்கு எதிரானதா?-ஊடகங்கள் பெயரில், அவர்களை, விளம்பரப்படுத்தி வியாபாரம் செய்கிறதா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மக்களுக்கு அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! தெரிந்து கொள்ளாத வரை, இந்த ஏமாற்றங்கள், போராட்டங்கள், சமூக சிக்கல்கள் ,இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள், எல்லாமே மக்களுக்கு ஒரு சமூகப் போராட்டமாக ஏற்பட்டுள்ளது.

இது ஏன்? தன் சுயநலத்திற்காக இன்றைய அரசியல் கட்சிகள்! அரசியல் கட்சியினர் என்று மாறிவிட்டபோது, இத்தனை குளறுபடிகளும், ஒரு வரைமுறை இல்லாத பிரச்சனைகள், தொடர்கிறது.

அரசியல் சுயநலமானால், அரசியல் கட்சிகள் சுயநலமானால் , சமூகத்தில் வாழக்கூடிய ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். இன்றைய பாதிப்புகள் யாருக்கென்று ஒரு சர்வே எடுத்தால்! அந்த சர்வேயின் முடிவு ,ஏழை, நடுத்தர மக்களாக தான் இருப்பார்கள்.

இதற்குக் காரணம் என்ன? இந்த மக்களிடம் படிப்பறிவு இல்லாமல் இருப்பதால், இவர்களை வைத்து தங்களுடைய அரசியலை அரசியல் கட்சிகள் நடத்துகிறார்கள். இதில் ஜாதி ஒருபக்கம் ,மற்றொரு பக்கம் மதம், ஒரு புறம் இந்த அரசியல் பணத்தை வைத்து மக்களை விலை பேசுகிறது.மேலும்,

வாக்கு திருட்டுக்கும், வாக்கு சரிபார்ப்புக்கும் ,அர்த்தம் தெரியாதவர்கள் ,எப்படி தன்னை ஒரு அரசியல் கட்சி தலைவராக பேசலாம்?

இதற்கு காரணம்? மக்களுக்கு அரசியல் தெரியாது. அதனால், எதை சொன்னாலும் நம்புவார்கள் .அதை எப்படி சொல்ல வேண்டுமோ, அப்படி சொன்னால் நம்புவார்கள். இதுதான் மக்களை ஏமாற்றும் அரசியல் .அந்த அரசியல் தான் சுயநலமான அரசியல்.

இந்த ஏமாற்று அரசியலில் இருந்து, நீங்கள் வெளி வர வேண்டும். நாட்டில் ஏமாற்றுவதற்கு இவர்களோடு சேர்ந்து ஊடகங்கள் பெயரில் பல இருக்கின்றன. பல சமூக வலைதளங்கள் இருக்கிறது. பல youtube சேனல்கள் இருக்கிறது. ஆனால் உண்மையை சொல்ல எத்தனை? என்பது தான் எண்ண‌ ? வேண்டி இருக்கிறது.

இதிலிருந்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, இந்த ஏமாற்று அரசியலை நாட்டில் ஒழிக்க, மக்கள் உண்மையை படிக்க, ஆர்வம் காட்ட வேண்டும் .

உண்மையை எடுத்துரைக்கின்ற ஊடகங்களை, இணையதளங்களை நோக்கி, பத்திரிகைகளை நோக்கி, மக்கள் ஆர்வம் இருந்தால், இந்த ஏமாற்று அரசியலில் இருந்து மக்கள் வெளியேற முடியும்.மேலும்,

வாக்கு என்பது அரசியல் கட்சிகளின் வியாபாரம் ஆகிவிட்டது. ஊழல் செய்த பணத்தால்,இங்கே ஓட்டுக்களை விலைக்கு வாங்கி, மீண்டும் ஊழல் செய்து இன்னும் நூறு தலைமுறைக்கு சொத்துக்களை குவிக்க வேண்டும்.

இதற்கு மக்களின் வறுமை! அவர்களுக்கு சாதகமாக உள்ளதா? படிப்பறிவு இல்லாதது அவர்களுக்கு சாதகமாக உள்ளதா? அப்படிப்பட்ட மக்களுக்கு வாக்குக்கு என்ன அதிகாரம்? உள்ளது என்று அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாதது தான், இந்த அரசியல்! போராட்டக் களமாக தமிழகம் மாறி இருக்கிறது.

நான் எந்த கட்சியில் சேர்ந்து, பதவி வாங்கினால், எத்தனை கோடி? நான் சம்பாதிக்க முடியும்? நான் திமுகவில் இருந்தால், எனக்கு லாபமா? அதிமுகவில் இருந்தால் லாபமா? பிஜேபி யில் இருந்தால் லாபமா? பாமகவில் இருந்தால் லாபமா? விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தால் லாபமா? தேமுதிகவில் இருந்தால் லாபமா?

இப்படி லாப, நஷ்ட கணக்கு பார்த்து தான், இந்த அரசியல் வியாபாரம் அரசியல் கட்சி நிர்வாகிகள் ,ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.

அரசியல் என்பது பொது நலம்! இங்கே சுயநலத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள் ,கூலிக்கு மாரடிப்பவர்களாக வந்திருக்கிறார்கள். எப்படி பத்திரிகை, தொலைக்காட்சிகள் இன்று பணத்திற்காக, அவர்கள் சொல்வதை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ, அதே போல் தான், இன்றைய அரசியல் மக்களை ஏமாற்றும் அரசியலாக மாறிவிட்டது ‌.

மக்கள் பணத்திற்காக வாக்களித்தால் !இன்னும் பத்து தலைமுறைகள், அவர்கள் சொத்து சேர்ப்பார்கள். நீங்கள் இன்னும் பத்து தலைமுறைகள் ஏழைகளாகவே இருந்து கொண்டே இருப்பீர்கள். எவன் வந்தால் என்ன? எப்பவும் நாம் இப்படித்தான் இருப்போம் என்ற பேச்சும், நினைப்பும் இந்த மக்களிடம் ஒரு தவறான கருத்து.

தனக்கு என்ன லாபம்? தனக்கு என்ன வருமானம்? இப்படி எல்லோருமே நினைக்க ஆரம்பித்தால், வாழ்க்கை என்பது கொடூரமானதாகவே இருக்கும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்கள் ஏழைகளாக வாழ்ந்தாலும், அவர்கள் சந்தோஷத்திலும், நிம்மதியிலும், பணக்காரர்கள். இது உண்மை.

ஆனால் இன்று பணக்காரர்கள் நோயாளிகள் ,இன்றைய பணக்காரர்கள் நிம்மதி இல்லாதவர்கள், சந்தோஷம் இல்லாதவர்கள், வழக்குகளை சந்தித்துக் கொள்பவர்கள் .அதனால், அவர்களுடைய அரசியல் சுயநலமானது .அவர்களுடைய வாழ்க்கை போராட்டம் ஆனது.

இன்று ஒவ்வொரு திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மற்றும் கவுன்சிலர்கள், சேர்மங்கள் இந்த குடும்பத்தை எல்லாம் ஒரு நிமிடம் உள்ளே சென்று போய் பாருங்கள். வெளியில் பார்ப்பதற்கு தான் , அவர்களுடைய கார், பங்களா ஆடம்பர வாழ்க்கை, இதுதான் இருக்குமே ஒழிய, மனிதனுக்கு தேவையான சந்தோஷம், மகிழ்ச்சி ,நிம்மதி ,எதுவுமே இருக்காது.

கடவுள் என்ற ஒரு இறைவன் இந்த உலகத்தை சரியாக வழி நடத்திக் கொண்டுதான் இருக்கிறான். இவர்களிடம் அதையெல்லாம் பறித்து விட்டான். எப்போது பதவி அதிகாரத்திற்கு அலைந்து கொண்டிருக்கிறார்களோ, எப்போது இந்த பணத்திற்காக பேயாய் அலைகிறார்களோ ,அவர்களெல்லாம் நிம்மதியை இழந்து ,சந்தோஷத்தை இழந்து, வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

பணம் தேவை, சொத்து தேவை ,அது தேவைக்கு தான் இருக்க வேண்டுமே ஒழிய, இவர்கள் பார்ப்பதற்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் .அதை பார்த்துவிட்டு, பார்த்துவிட்டு, போய் மேலே சேர்ந்து விடுவார்கள். மக்களின் சாபங்கள் இவர்களுடைய குடும்பத்தையே வேர் அறுக்கும் . அதுமட்டுமில்லை,

தெய்வத்தை நிந்திப்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. இதைவிட ஒரு முக்கியமான ஒரு சம்பவம் இவர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் போது ,இறையாண்மைக்கு எதிராக நான் செயல்பட மாட்டேன் .சட்டத்தை மதித்து நடப்பேன். இப்படி எல்லாம் சத்திய பிரமாணம் பதவி எடுக்கும்போது சொல்லிவிட்டு, அந்தப் பதவியை வைத்து, கொள்ளை அடிப்பது ,அரச தண்டனை அவர்கள் அடைவார்கள் என்பது சாஸ்திரம் சொல்கிறது.

இப்படி வாழ்ந்தவர்கள் யார்? நன்றாக இருக்க முடியும்? உதாரணத்திற்கு ஜெயலலிதா வழக்கு !அவருடைய நிலைமை! சசிகலா வழக்கு! அவருடைய நிலைமை, இதுதான் இவர்களுடைய முடிவு.

மேலும், திமுகவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மந்திரிகளும் ,ஊழல் வழக்குகளை சந்திக்காமல், இல்லை. இப்படிப்பட்ட ஒரு அரசியலை மக்கள் தமிழ்நாட்டை விட்டு, இந்த மக்கள் எப்போது அகற்றுகிறார்களோ அப்போது தான் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியல்.மேலும்,

அதேபோல், இந்த வன்னியர் சமுதாயம் எப்போது? ராமதாசை விட்டு ஒதுங்குகிறதோ, அப்போது தான் அதற்கு ஒரு விடியல்.திருமாவளவனை விட்டு எப்போது தலித் சமுதாயம் ஒதுங்குகிறதோ, அப்போதுதான் அதற்கு ஒரு விடியல்.

மேலும்,இவர்களால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. இவர்களை பலப்படுத்துவதற்காக தான் கட்சி என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள். ராமதாஸ் இன்னொரு கட்சியை ஆரம்பித்து, இந்த வன்னிய சமுதாயத்தில் உள்ளவர்களை முட்டாளாக்க பார்க்கிறாரா? இந்த சமுதாயத்தில் அரசியல் தெரியாதவர்களை வைத்து வாக்கு வியாபாரம் செய்ய ஆள் பிடிக்கும் கூட்டத்தை சேர்க்கிறார்களா? அவர்கள் எல்லாம் கட்சிக்காரர்களா? இல்லை உங்களுக்கு புரோக்கர்களா? மக்களே அரசியல் என்பது இப்போது ஏமாற்று வேலை ஆகிவிட்டது அதனால் அரசியலை ஒவ்வொரு இளைஞர்களும் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். மேலும், இந்த கட்சி புரோக்கர்களிடம்

ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களிக்கலாம் என்று நினைத்தால், இன்று பல அரசியல் கட்சிகள் ,ஆள் பிடிக்கும் புரோக்கர்களை ,அதாவது அரசியல் கட்சியினர் என்று சொல்லிக் கொள்வார்கள். இதையேதான் ஊடகங்கள் பெயரில் இவர்களை வைத்து பத்திரிகை வியாபாரமும், இவர்களின் இந்த அரசியல் வியாபாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

மக்கள் அவர்களுடைய பேச்சில் ஏமாந்தால், உழைப்பவன் நிலை! கீழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஊரை ஏமாற்றுபவன் நிலை உயர்ந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு உங்களுடைய நிலை என்ன? என்பதை முடிவு செய்யுங்கள். மனசாட்சி உள்ள மக்கள்! இந்த நாட்டைப் பற்றியும், சமூகத்தைப் பற்றியும் நினைக்கவில்லை என்றாலும் கூட, உங்களுடைய வருங்கால சந்ததிகள் சந்தோஷமாக வாழ, நீங்கள் ஒரு நல்ல அரசியல் கட்சியும் ,அரசியல் கட்சித் தலைவரையும், அந்த வேட்பாளரையும், தேர்வு செய்யும்போது தான்!

நாட்டில் எல்லா தரப்பு மக்களும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். அந்த பொதுநல நோக்கம் யாரிடம் இருக்கிறது? அவர்களை தேர்வு செய்யுங்கள்.

கோடிகளில் கொள்ளை அடித்து அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ,இவை எல்லாம் விசாரிக்கின்ற அரசியல்

கட்சியினருக்காக உங்கள் ஓட்டா? யாருக்கு உங்கள் ஓட்டு? என்பதை இப்போதே அவர்களுடைய தகுதி என்ன? என்பதை தீர்மானியுங்கள்.

அதுதான் ஜனநாயகத்தின் வாக்குரிமை அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *