
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆன இன்றைய திமுக ,அதிமுகவும் சரி இப்போது வந்திருக்கும் அண்ணாமலையும் சரி ,100% அரசியலில் ஊழல் அற்ற ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது.
எல்லோரும் மனிதர்கள் தான். கடவுள் ஒருவரால் மட்டுமே 100% கொடுக்க முடியும். உங்கள் கட்சியில் உள்ளவர்கள் 100% ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார்களா? மேலும் அண்ணாமலையால் நூறு சதவீதம் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியுமா?அதற்கு நீங்கள் கேரண்டியா? விஜய் நூறு சதவீத உள்நாட்டு ஆட்சியை கொடுக்கிறார் .அதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஒரு சில மந்திரிகள் இல்லாதவர்கள் இருப்பார்கள், அவர்கள் குடும்பம் இவர் சேவை செய்ய வந்துவிட்டால், அவர்கள் நடுத்தெருவிலாக நிற்பார்கள்? செலவுக்கு வாங்கி கொள்பவர்களும் இருக்கிறார்கள் அதில் தப்பு இலலை.
மேலும், கடந்த கால திமுக, அதிமுக ஆட்சியில் எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கிறார்கள்? என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அப்படி யாராவது சொத்து சேர்த்து விட்டார்களா? நீங்கள் நின்றால் குறை சொல்வீர்கள், ஏன் நிற்கிறான் என்று குறை சொல்வீர்கள்,பார்த்தால் குறை சொல்வீர்கள், ஏன் பார்க்கிறான்?பேசினாலும், ஏன் பார்க்கிறான்? குறை சொல்வீர்கள், குறை சொல்வது மட்டுமே எதிர்க்கட்சிகளின் வேலை.அப்படி என்றால்! யாராலும் எதுவுமே செய்ய முடியாது.

முதலில் உங்களாலே அது போல இருக்க முடியுமா? திமுக ஆட்சியில் கொலையே ,கற்பழிப்பு நடக்காதது போல், இன்று சட்டமன்றத்திலே பேசுகிறார்கள். நடந்த போது நடவடிக்கை எடுக்காத நீங்கள், அவர்களை காப்பாற்றி சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தீர்கள்.

ஆனால், விஜய் அப்படி இல்லை. அவருடைய கட்சிக்காரராக இருந்தாலும், தவறு செய்தால்! கைது நடவடிக்கை எடுக்கிறார். இது அவரை சப்போர்ட் செய்து பேசுகிறோம் என்று பத்திரிகைகளோ அல்லது அரசியல்வாதிகளோ, எப்படியும் பேசுபவர்களோ, நினைப்பீர்களானால் அது உங்களுடைய குறை. ஏனென்றால், உங்கள் குறைகள் உங்களுக்கு தெரியாது. மற்றவர்களுடைய குறைகள் மட்டுமே தெரிகிறது.

இதற்குக் காரணம், உங்கள் முதுகை நீங்கள் பார்க்க முடியாது. மற்றவர்கள் பார்த்தால் தான் பார்க்க முடியும். கடந்த திமுக ஆட்சியில் கூட ,செய்த தவறுகளை மக்கள் அதிகாரம் தொடர்ந்து சுட்டிக்காட்டி தான் வந்தது. அதை நியாயப்படுத்தி பேசவில்லை. நியாயப்படுத்தியதும் இல்லை.

நடந்த தவறை அது சரி என்றும் சொல்லவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் அதை நியாயப்படுத்தி, அவர்களை சட்டத்தின் மூலம் காப்பாற்றியது கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கு தெரியும். அதுபோல விஜய் செய்யவில்லை. மேலும்,

எதிர்க்கட்சிகள்! உங்களுடைய ஆட்சியில் எவ்வளவு குறைகள்? எவ்வளவு அராஜகங்கள்? எவ்வளவு ஊழல்கள்? இதையெல்லாம் கணக்கிட முடியாது. ஆனால், எங்கேயோ ஒரு சில தவறுகள் நடக்க தான் செய்யும். தவறே நடக்காமல், யாராலும் ஆட்சி செய்ய முடியாது.
இதற்கு காரணம், வாழும் மக்களில் எல்லோரும் நல்லவர்களாக இருந்தால் பரவாயில்லை .இதில் எவ்வளவு குற்றவாளிகள்? எவ்வளவு மோசடி பேர்வழிகள்? எவ்வளவு அராஜகப் பேர்வழிகள் ?இவர்களோடு அப்பாவி மக்களும், சாமானிய மக்களும், உழைக்கும் மக்களும், வாழ்ந்து கொண்டிருக்கும்போது,
அநியாயமே செய்து பழக்கப்பட்ட 50 ஆண்டு கால ஆட்சி வரலாற்றில் ஊறிப்போன கூட்டங்கள், உடனே தெரிந்து விடுமா? அல்லது திருத்தி விட முடியுமா? அல்லது கெட்ட புத்தி உள்ளவர்களை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருப்பது தான் வேலையா? இப்படி மக்களின் மனநிலை காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்போது, யாராலும் இதை உடனடியாக தடுத்து நிறுத்தி விட முடியாது.

மேலும்,DMK files ஃபைல்ஸ் ஒன், டூ ,த்ரீ என்று சொன்னார் அண்ணாமலை.ஒரு பைலாவது நீதிமன்றத்தில் கொண்டு சென்று நடவடிக்கை எடுத்தாரா? எல்லாம் வாயிலேயே தான் பேசிவிட்டு போனார்.
மேலும் ,அமைச்சர்கள் 2%,4%, டென்டர்களுக்கு கமிஷன் வாங்குவது நியாயமானது .இது அந்த காலத்திலும் இருந்துள்ளது. தவிர, அவர்கள் பல தலைமுறைக்கும் ,பல ஆயிரம் கோடிகளையும், ஊழல் செய்ததில்லை. எதிலும் ஒரு நேர்மை இருந்தது.
அடுத்தது, உதயநிதி ஸ்டாலின் ,இவர் சட்டையில் முதல்வர் பேசுவாரா? என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வருகிறார். ஊரை ஏமாத்துற பிராடு, கிரிமினல்ஸ் தான், அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறான்.

ஏனென்றால் அவன் தன்னை நியாயமானவன் என்று அடுத்தவனை நம்ப வைப்பதற்காக அதிகம் பேசுகிறான். நியாயமானவன் அதிகம் பேச வேண்டிய அவசியம் இல்லை. நேர்மையானவன் அரசியலில் அதிகம் பேச வேண்டியது இல்லை. இதுவே போதும் என்று நினைக்கிறேன்.
இன்னும் இவர்கள் குறைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால், இவர்களுடைய கடந்த கால அரசியல் வரலாறுகளை இவர்களே மீண்டும், மீண்டும் படித்து ,அதை சிந்திக்க வேண்டும் .அப்போதாவது இவர்களுக்கு உண்மைகள் புரியுமா?
