
ஸ்டாலின் பிரச்சாரம் செய்வது போல், அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள் .கொஞ்சம் கடுமையாக செய்ய வேண்டும் என்று பல பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். இவ்வளவுதான் இதில் என்ன பயம்?
விஜய் பிரச்சாரத்திற்கு போகக்கூடாது என்று நினைக்கிறீர்களா? மக்களிடம் அவர் அரசியல் செய்யக் கூடாதா? இல்லை அரசியல் பேச கூடாதா? மேலும்,

பல லட்சம் கோடி ஊழல் செய்துவிட்டு, மு க ஸ்டாலின் பயமில்லாமல் தன்னை ஊத்தமர் போல் காட்டிக்கொண்டு, ,பேசுவது திறமை என்று எங்களைப் போன்ற அரசியல் தெரிந்த பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.
அது மட்டுமல்ல, திமுக மந்திரிகள் மீது போடப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்திலே எவ்வளவு வழக்குகள் போய்க்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது, மாற்றத்தை விரும்பும் மக்களிடம் இதை எடுபடுமா? மேலும்,

இந்த கதை எல்லாம் அரசியல் தெரியாத மக்களிடம் தான், கதை விட்டுக் கொண்டிருப்பார்கள் . மக்களிடம் இதையெல்லாம் செய்தியாக்கி உண்மை என்று ஏமாற்றக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தான் இவருடைய செய்தியை அப்படியே போட்டுக் கொண்டிருக்கும்.
ஆனால், எது உண்மை? எது பொய்? என்று மக்களிடம் கொண்டு செல்வது ஒரு பத்திரிக்கையாளனின் கடமை. ஒரு சமூக நலன் பத்திரிகையின் கடமை.
அந்த வகையில் மக்கள் இந்த செய்திகளை எல்லாம் பார்த்து, இவர் பேசுவதை பார்த்து ,அப்படியே உண்மை என்று நம்பி விடுவார்களா? இல்லை, இவர்களுடைய கார்ப்பரேட் ஊடகங்கள், எல்லாம் உண்மைதான் சொல்லிக் கொண்டிருக்கிறது என்று நம்பி விடுவார்களா?

மக்களே சிந்திக்கட்டும் ……!மக்களே ஆய்வு செய்யட்டும் ….!எது உண்மை? எது நியாயமானது? எப்படிப்பட்ட அரசியல் தேவை? ஊழல் அரசியலா? அல்லது மக்களுக்கான அரசியலா? என்பதை அவர்கள் சிந்தித்து முடிவு எடுக்கட்டும். இதில் என்ன முட்டு கொடுக்க வேண்டி இருக்கிறது?
மக்களுக்காக …. மக்களுடன்,….! என்றும் மக்கள் அதிகாரம் ….!