
பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை.
அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது.
அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் பட்டதாக தகவல். மேலும், இந்தப் பகுதியில் விமான நிலையம் வரும் என்று அப்போதைய திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தை வாங்கி பினாமி பெயரில் வைத்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது பற்றி, மத்திய உளவுத்துறை ஆய்வு செய்யுமா?
மேலும், விமான நிலையம் வராமல் தடுக்கப்பட்டது .அப்பகுதி விவசாயிகளுக்கு உண்மையிலேயே இது ஒரு நல்ல செய்தி தான். இதற்காக ஏகனாபுரம் கிராம மக்கள் அதிக போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அந்த கிராமத்தில் தான் ,அதிகம் நிலத்தை கொடுக்கவில்லை.இது அவர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.

மேலும்,அவர்கள் வழக்கை உயர்நீதிமன்றத்தில் கூட, இப் பிரச்சனை குறித்து சந்தித்து வருகிறார்கள். இருப்பினும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இதை கேன்சல் செய்தது, அப் பகுதி விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
