பள்ளிக் கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது போல், செய்தித் துறையில் ஏன்? அந்த மாற்றங்களை கொண்டு வர தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொள்ளப் பட வில்லை ? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

இன்றைய கல்வித் துறையில் மாணவர்களுக்கு காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ,ஆலோசனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

அதுபோல் ஏன்? காலத்திற்கு ஏற்ப செய்தி துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் ,ஆறாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை ,அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் பாடங்களை கொண்டு வருவது குறித்து, ஆலோசனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்க வேண்டியது என்று கல்வித்துறையில் கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்றுள்ளனர்.

மேலும், அதேபோல், பத்திரிக்கை துறையில், காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஏன் ஆலோசிக்கப் படவில்லை? என்பதுதான் எங்களை போன்ற சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கு காரணம் என்ன? செய்தித் துறை அதிகாரிகளா? ஆட்சி மாறி இருந்தும், இன்னும் காட்சிகள் செய்தித் துறையில், மாற்றப் படாமலே தான் இருக்கிறது. செய்தித் துறையில் என்னும் திமுக விசுவாசிகளாக இருக்கக்கூடிய அதிகாரிகள் அங்கே தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை சுற்றி தான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் நிருபர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கிருந்த ஒருவரில் தலைமைச் செயலக செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரான செந்தமிழ்ச் செல்வன் அதுவும் அவருக்கு பிரமோஷன் கொடுத்து வெளியே அனுப்பியதாக தகவல். தவிர, பத்திரிகையாளர்கள் நல வாரியம், திமுக அரசின் கட்சி! நல வாரியமாக செயல்பட்டது.இது எல்லாம் காலத்தின் கொடுமை.மேலும்,

இவர்கள் பத்திரிக்கை துறை, பற்றி படிக்காமலே, வேலைக்கு வந்தவர்கள். இப்படிப் பட்டவர்களை வைத்துக்கொண்டு ,ஆலோசனை கேட்டால், என்ன ஆலோசனை சொல்வார்கள்? மேலும்,இவர்கள் திமுக ஆட்சியில்,கார்ப்பரேட் கம்பெனி ஏஜெண்டுகளாக செயல்பட்டவர்கள்.

அது மட்டுமல்ல,இணையதள பத்திரிகையை ,சோசியல் மீடியா என்று சொன்னவர் செந்தமிழ் செல்வன். இவருக்கு பத்திரிக்கை துறை பற்றி என்ன? ( Knowledge) இருக்கிறது . தவிர,மத்திய அரசு இணையதள பத்திரிகையின் சர்குலேஷனை கையில் எடுத்துள்ளது. அதற்காக சட்டங்களை தற்போது மாற்றியுள்ளதாக தகவல்.

ஆனால் இவர்களில் பலர் இணையதள பத்திரிகையை ,சோசியல் மீடியா என்று என்னிடமே சொன்னவர். இது போல் தான் திருவள்ளூர் மாவட்ட தற்போதைய பி.ஆர்.ஓ வான அஸ்வின். இதே போல் தான், சோசியல் மீடியாக்கும், இணையதள பத்திரிகைக்கும் அர்த்தம் தெரியாமல் பேசும் நோக்கமென்ன?

அதாவது,இவர்கள் எல்லாம் சமூகநலன் பத்திரிகைகள் மேலே வருவதை விரும்பவில்லை. அதை கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் விரும்பவில்லை. ஏனென்றால் இவர்கள் நம்மோடு போட்டி , போட வந்து விடுவார்கள். இவர்களை அரசாங்கம் ஊக்கி வைக்கக் கூடாது. அப்போதுதான் அரசின் சலுகை விளம்பரங்கள் அனைத்தும் நமக்கு கிடைக்கும். எவ்வளவு சுயநலம்?

அதற்கு தான் இப்படிப்பட்ட அதிகாரிகள் கார்ப்பரேட் கம்பெனிகளை ஊக்கிவிக்கும் ஏஜென்ட்களாக தான் செயல்படுகிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. அது என்ன என்றால் ?30% கமிஷன் ,அது தவிர ,மாவட்டங்களில் தனியாக விளம்பரங்களை வாங்கி கொடுத்தால், அந்தந்த பத்திரிகைகளின் நிர்வாகிகள், பிஆர்ஓ களுக்கு 5% கமிஷன் .

இது தவிர, இவர்கள் அரசு நிகழ்ச்சிகளில், அதாவது ஒவ்வொரு துறைகளிலும் ,செய்தியாளர்களை காட்டி வசூல் செய்து விடுவார்கள். என்னிடமே திருவள்ளூரில் ஒரு தாசில்தார் சொன்னார் .சார் ,பிரஸ் என்று 50 பேர் வருகிறார்கள் .

ஆனால், நான்கு பேர் கூட அதில் செய்திகளை போடுவதில்லை. பிஆர்ஓ மட்டும், ஐம்பதாயிரம் வசூல் செய்கிறார். அதேபோல், நகராட்சி நிர்வாகத்திலும், வசூல் செய்வதாக கேள்விப்பட்டேன். இது எல்லாம் கேள்வி கேட்கக்கூடிய பத்திரிகைகளாக ,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் தான், இந்த உண்மைகள் வெளிவரும்.

இவையெல்லாம் அவர்களுக்கு எரிச்சலும், கோபத்தையும் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக இவர்களுடைய வருமானத்தில் இந்த பத்திரிகைகள் கை வைக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. அதனால் தான், இந்த பத்திரிகைகளுக்கு, இவர்கள் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கக் கூடாது என்பதில் ஒரே முடிவாக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தகுதியற்ற பத்திரிகைகளையும், தகுதியான பத்திரிகைகளையும், ஒன்றாக வைத்து, கார்ப்பரேட் கம்பெனி செய்தியாளர்கள் பேசுவது போல, இவர்களும் சேர்ந்து பேசுவார்கள். நாங்கள் கேட்பது தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை-, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். அதுதான் எங்களுடைய போராட்டம்.

மேலும்,இணையதளத்தில் மத்திய அரசே, 5 லட்சம் பார்வையாளர்களையும், சப்ஸ்கிரைப்பர்ஸ்யும் ,வைத்து மதிப்பீடு செய்யும் பத்திரிகையின் தரத்தை கொண்டு வந்துள்ள மாற்றங்கள் பற்றி கூட ,இவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். அதுவும் எமது இணையதளத்தில் செய்தியாக வெளியிடப் பட்டுள்ளது. இதையெல்லாம் படித்தால் தானே, இவர்களுக்கு உண்மை என்னவென்று துளியாவது புரியும்.

மேலும்,50 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஓட்டை சட்டம், சர்குலேஷன் சட்டம் இன்றும் அதையே வைத்து காலத்தை ஓட்டுவது பத்திரிக்கை துறையையும், சமூக நலன் பத்திரிகைகளையும், செய்தித்துறை ஏமாற்றும் ,மோசடி வேலை .

எனவே, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இது குறித்து எங்களைப் போன்ற தகுதியான பத்திரிக்கையாளர்களையும், கார்ப்பரேட் அல்லாத பத்திரிகையாளர்களையும் ,துறை சார்ந்த தலைமைச் செயலக , உயர் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் ,வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் !என்பதுதான், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் ,இக் கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *