
வங்கியின் நடைமுறை! பணக்காரர்களுக்கு ஒரு நியாயம் !ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு நியாயம்! இதை எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை.
75% கடனை செலுத்திய நடுத்தர மக்களின் வங்கி அந்த வாடிக்கையாளர்களிடம் மீதியை வசூலிக்க, கடுமை நடவடிக்கை ஏஜென்ட்களை வைத்து எடுக்கிறது. அதுவே, கார்ப்பரேட் கடன்காரர்களுக்கு வங்கிகள்!ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் claims-ல் OTS, Compromise Settlement — ஏன்? இந்த இரட்டை அணுகுமுறை? மக்கள் அதிகார
சமூக நலன் பத்திரிகையின் – சிறப்பு கட்டுரை.
வங்கிகளில் கடன் வாங்கும் சாதாரண மக்களிடம், கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த முடியாதபோது, Recovery Agents மூலம் தொடர்ந்து வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களை அந்த ஏஜென்ட்கள்,தொலைபேசி அழைப்புகள், நோட்டீஸ்கள், சட்ட நடவடிக்கைகள் என பல்வேறு வழிகளில் ,நிலுவைத் தொகையை வசூலிக்க வங்கிகள் முயற்சி செய்கின்றன.
அது வங்கியின் சட்டபூர்வமான உரிமை என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால், இங்கே எழும் கேள்வி வேறு.

ஒரு சாதாரண வாடிக்கையாளர் தனது கடனில் 75 சதவீதத்தை ஏற்கனவே செலுத்தியிருந்தால், மீதமுள்ள தொகையை நியாயமான முறையில் முடித்துக்கொள்ள அவருக்கு ஏன் வெளிப்படையான Compromise Settlement வாய்ப்பு இருக்கக்கூடாது?
பெரிய கடனாளிகளுக்கு OTS எப்படி வருகிறது?
இந்திய வங்கி அமைப்பில் One Time Settlement (OTS) மற்றும் Compromise Settlement போன்ற நடைமுறைகள் உள்ளன.
கடனாளியிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்று, மீதமுள்ள claim-ஐ வங்கி தனது விதிமுறைகளுக்கு உட்பட்டு waiver செய்ய முடியும்.

இது சட்டவிரோதமான நடைமுறை அல்ல.ஆனால், இதே கொள்கை சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் ,வெளிப்படையாகவும் ,நியாயமாகவும் கிடைக்கிறதா? என்பதே கேள்வி?
மேலும், வங்கி அதிகாரிகள் கார்ப்பரேட் கடன்காரர்களிடம் ஏஜெண்டுகள் போவதில்லை. சாதாரண நடுத்தர மக்கள் வாங்கிய கடன்காரர்களிடம் தான், இந்த வசூல் ஏஜெண்டுகளை அனுப்புகிறார்கள். அங்கே அவர்களை மதிக்க மாட்டார்கள். என் செக்யூரிட்டியை உள்ளே விட மாட்டான். மேலும்,

RBI விதிமுறைகளின்படி, Recovery Agents மூலம் மிரட்டல், அவமானப்படுத்துதல், குடும்பத்தினருக்கு தொந்தரவு செய்தல், தொடர்ந்து அசிங்கப்படுத்தும் வகையிலான அழைப்புகள் போன்ற நடவடிக்கைகள் செய்யக்கூடாது. அவ்வாறு இருந்தால் , சம்பந்தப்பட்ட ஏஜென்ட் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
மேலும், இது பற்றி பொது மக்களுக்கு நடந்த உண்மையுடன் இச் செய்தியை மக்கள் அதிகாரம் சிறப்பு கட்டுரையாக வெளியிடுகிறது. கோவையை அடுத்த பொள்ளாச்சியில் சிவா கல்வி அறக்கட்டளை மூலம் கிராமப்புறத்தில் இயங்கி வந்த செவிலியர் கல்லூரி.

இது இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் நடராஜன் முதலியாரல் ,அப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கும் ,கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் உருவாக்கப்பட்ட நிறுவனம். இதை அவருடைய மகன் யோகானந்தா சிவா நடத்தி வந்தார்.மேலும்,

இதன் உரிமையாளரான யோகானந்தா சிவா கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக,இவர் கார்ப்பரேஷன் வங்கி காளியாபுரம் கிளையில் 2012 to 2013 ஆண்டு காலகட்டத்தில்,சிவா 4.06 கோடி கடன் வாங்கி உள்ளார். வாங்கிய நாள் முதல் சுமார் 48 மாதங்களில் அதாவது 2016 வரை, இவர் வாங்கிய வங்கி கடனில் 3. 39 கோடி பணம் செலுத்தியுள்ளார்.

பிறகு, கொரோனா வந்த காலகட்டத்தில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததாலும் ,அவரால் தொடர்ந்து வங்கி கடனை செலுத்த முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் கார்ப்பரேஷன் வங்கி யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்படுகிறது. பிறகு, வங்கியின் அதிகாரி வி .மூர்த்தி இந்த அறக்கட்டளை சொத்தை அபகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் .அதை எவ்வளவோ , தடுத்து போராடியும் கல்லூரியின் எம் .டி. யோகானந்தா சிவாவின் முயற்சி பயனளிக்கவில்லை.

மேலும், வங்கி அதிகாரி இந்த அறக்கட்டளையின் சொத்துக்களை தனித்தனியாக பிரித்து ஏலத்திற்கு கொண்டு வந்து வட்டார். சிவா கல்வி அறக்கட்டளையின் சொத்து 5. 17 ஏக்கர் நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் ,லெமன் அசோசியேட் ஏஜென்ட் மூலம் வங்கி அதிகாரி மூர்த்தி ஏற்பாடு செய்து, இந்த நிலத்தை குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கிறார்கள்.
மேலும்,அறக்கட்டளை சொத்தை அவ்வளவு எளிதில் நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல், ஒருவர் ஏலம் விட முடியாது .இந்த சட்டம் கூட தெரியாத வங்கி அதிகாரி, இந்த நிலத்தை ஏலத்திற்கு கொண்டு வந்து, இதை 3.5.2023 ல் குற்றவியல் ,நீதிமன்றத்தின் மூலம் உண்மையை மறைத்து சுவாதின ஆணையை பெற்று விடுகிறார்.

பிறகு இதை உடனடியாக அந்த நிலத்தை குறைந்த விலைக்கு விற்பனையும் செய்து விடுகிறார். இதுகுறித்து குற்றவியல் நீதிமன்றத்தில் சிவா அறக்கட்டளையினர் முறையட்டும், அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.மேலும்,
அங்கிருந்து அவருக்கு வரும் பதில் என்ன வென்றால் ? நீங்கள் வசூல் தீர்ப்பாயத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ முறையிட்டு, இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர். இதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள், போராட்டங்கள், அவமானங்கள், வெளியில் சொல்ல முடியாது.
ஆனால், வங்கி அதிகாரிகள் எவ்வளவு பெரிய சுய நலவாதிகளாக செயல்படுகிறார்கள்? என்பதுதான் ப ஏழை எளிய நடுத்தர மக்கள் குற்றச்சாட்டு. இதை அரசின் உயர் அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் நீதிமன்றம் முக்கியமாக கவனிக்க வேண்டிய உண்மைகள்.

மேலும், இந்த வழக்கில் சிவா கல்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு!வங்கி அதிகாரிகள் செய்த மோசடி வேலைக்கு கோவை மாவட்ட கடன் தீர்ப்பாயத்திற்கு நியாயமான, முறையான நீதியை வழங்க வேண்டுமென்று ,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், வைக்கும் கோரிக்கை .
