மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்! அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் கோவிலில் ! குட முழுக்கு விழா !

Uncategorized ஆன்மீகம் உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ,அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தராவதன பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கும், 23. 8 .2026 அன்று காலை சுமார் 5.30 குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

இதன் அருகிலே மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் சுமார் 9.30 முதல் 10.30 மணிக்குள் ,ஸ்ரீ சேஷாத்திரி சுவாமியின் ரதோஸ்வ (தேர்பவனி) நடை பெறுகிறது . இக் குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ முரளி தர சுவாமிகள், கலந்து கொள்கிறார்.

மேலும், இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வரும் இக்கோயிலின் டிரஸ்ட் தலைவர் லட்சுமி அம்மாள், செயலாளர் பிஜேபி வழுவூர் பாஸ்கர் மற்றும் விழா குழுவின் மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, ட்ரஸ்ட் உறுப்பினர்கள் ஆர் .எஸ். எஸ். ஸ்ரீ நிவாசன், பாலாஜி மற்றும் முக்கிய கிராம பெரியோர்கள், விழாவை பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து தர கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், ஸ்ரீ சுந்தரவதனப் பெருமாளின் அனுக் கிரகத்தையும், மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் நல்லாசியும், பெறுவதற்கு அன்போடு ,அழைக்கின்ற இத் தெய்வ நிகழ்ச்சியில் ,கலந்து கொண்டு !இறையருளைப் பெறுவோம்.இவ்விழாவிற்கு நன்கொடை அளிக்க விருப்பமுள்ளவர்கள் அழைப்பிதழில் உள்ள கியு. ஆர். கோடுக்கு (Q R code க்கு ஸ்கேன் செய்து ) அனுப்பலாம்.இறை ஆசி எங்கிருந்து வேண்டுமானாலும், அது அருள் செய்யும். நம்பிக்கையே கடவுள் !

என்றும் மக்கள் பணியில் ……! மக்களுடன்…….! மக்கள் அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *