மக்களின் உணவு தேவைக்கு பயன்படுத்த வேண்டிய அரிசியை எத்தனால்! எரிபொருள் தயாரிக்க பயன்படுத்துவது நாட்டில் உணவு பஞ்சத்தை ஏற்படுத்துமா? – மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள்

அரிசியை பயன்படுத்தி மத்திய அரசு எத்தனால் எரிபொருள் தயாரிப்பதால் மக்களின் உணவு தேவைக்கு அது சவாலாக அமையுமா? இந்த அரிசி தேவையற்ற அரிசியா? அல்லது மக்கள் உணவுக்குப் பயன்படுத்தும் அரிசியா?

இந்த இரண்டு வகைப்பாட்டில் உணவுக்கு தேவையற்ற அதாவது அதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அரிசியை வேண்டுமானால் எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தலாம்.

ஆனால், உணவுக்கு பயன்படுத்தக்கூடிய அரிசியை எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தினால் அதனால் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால்?

கால நிலை மாற்றத்தால் விவசாயம் பாதிக்கப்படும் போது, எத்தனால் தயாரித்தால் ,அதனால் பின் விளைவுகள் ஏற்படும். மக்களுக்கு எது முக்கியம் என்றால் உணவு தான் முதல் முக்கியம் .

மீதி அனைத்தும் பிறகு தான். ஒரு மனிதன் உணவின்றி வாழ முடியாது. அதனால் எரிபொருள் இல்லாமல் கூட வாழ்ந்து விட முடியும். ஆனால் உணவில்லையேல், இறப்பது தவிர வேறு வழி இல்லை. மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி எரிபொருள் மூலம் அவசியம் தேவையானது. என்று சொன்னால் கூட அதைவிட அவசியமானது உணவு. ஏழை முதல் பணக்காரன் வரை உணவின்றி இருக்க முடியாது.

அப்படிப்பட்ட உணவை நாம் எரிபொருளாக மாற்றி வருகிறோம். இது தேவைக்கேற்ப அதிகமாக இருக்கிறது அதனால், இதை செய்கிறோம் என்றால்! நாட்டில் விளைச்சல் பாதிக்கப்பட்டால் அல்லது வெள்ளத்தால் நீரில் மூழ்கினால், அப்போது உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் தகவல் வெளியாகி இந்த அரிசியை மக்கள் பயன்படுத்த முடியாத அரிசியாக இருந்தால், மட்டுமே மத்திய அரசு எத்தனாலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், மக்கள் பயன்படுத்தக்கூடிய அரிசியை அவர்கள் எத்தனால் ,உற்பத்திக்கு பயன்படுத்தினால் எதிர்காலத்தில் அரிசி மக்களின் தேவைக்கு அது சவால்களாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதனால் மத்திய அரசு இப்போதே இந்த திட்டம் குறித்து விரிவாக ஆய்வு செய்து உணவின் முக்கியத்துவத்தை புரிந்து செயல்பட வேண்டும் என்பது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் முக்கிய ஆய்வுக் கருத்தின் கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *