
தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் .

இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது மந்திரியாக இருக்கும்போது ,இதை பேசி இருக்கிறாரா?

எவ்வளவு செய்திகள் ? எமது பத்திரிகைகளிலும், இணையதளத்திலும், வெளியிட்டிருக்கிறோம். இது பற்றி திமுக அரசின் கவனத்திற்கு எத்தனை முறை கொண்டு சென்று இருக்கிறோம்.? எவ்வளவு பத்திரிகையாளர்கள் தங்களுடைய வேதனையான புகார்களை தெரிவித்து இருக்கிறார்கள்? இதற்கெல்லாம் உங்களுக்கு பதில் சொல்ல தகுதி இல்லை.

ஆனால், மக்களாட்சி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்களா? மக்களாட்சி என்றால்! கவர்னர் மக்களை பற்றிய திரும்பி பார்க்கக் கூடாது, அவர்களுடைய புகார்களை கேட்கக்கூடாது. அவர் சொன்னதில் என்ன தவறு? மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை தீர்த்து வைப்பேன். இதில் என்ன தவறு?
இதற்கு முன்னால் இருந்த கவர்னர் ரவியிடம் கூட இந்த பிரச்சனையை புகார் மனுவாக அனுப்பி இருக்கிறோம். எந்த பலனும் இல்லை. இந்த கவர்னர் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், எங்களை நேரடியாக அணுகலாம் என்று தெரிவித்துள்ளார் .

தமிழக மக்களுக்கு !இது ஒரு நல்ல அரசியல் .மக்களாட்சி தத்துவத்தின் முன் உதாரணம் ,என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல், மத்திய அரசின் கவனத்திற்கும், எங்களுடைய பிரச்சனை கொண்டு செல்ல வேண்டும் என்று கவர்னருக்கு கோரிக்கை வைக்க போகிறோம்.

அதற்கான நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் நிச்சயம் சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில், அவரை அணுகவும் ,பிரச்சனைகளை தெரிவிக்கவும் ,செயல்படுவோம்.
மேலும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள, அரசின் கவனத்திற்கு ,எங்களுடைய கோரிக்கைகளை கொடுத்திருக்கிறோம். எதற்கும் ஒரு நேரம், காலம் கொடுத்து பார்க்க வேண்டும் .அதனால், அவசரப் படவில்லை.

இந்த கோரிக்கைகள், தமிழக அரசு எப்படி செயல்பட போகிறது ?என்பதை பார்த்து, அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று யோசிக்க இருக்கிறோம். எனவே, தமிழ்நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று நீங்கள் எதை வேண்டுமானாலும், பேசி விட்டு போகலாம் என்று இனி கனவு காணக்கூடாது. அதேபோல்! பத்திரிகைகளையும் ஏமாற்றலாம் என்று நினைக்கிறீர்களா? மேலும்,

அப்படி ஏமாற்றம் அரசியல்வாதிகளுக்கு இன்றுவரை அது ஒரு பிளாக் அரசியல் தான் இன்றைய கார்ப்பரேட் மைக்குகள் . அது தான் உங்களுக்கான தளம். மக்கள் அந்த பொய்களை இனி நம்ப மாட்டார்கள்.
எனவே ,மக்களின் வலி! மக்களுக்கு தான் தெரியும் . அதேபோல் ,எங்களின் வலி எங்களுக்கு தான் தெரியும்.மேலும்,கார்ப்பரேட் மைக்கை களுக்கோ ,இல்லை உங்களைப் போன்ற வாயிலே பேசிவிட்டு, போகின்ற அரசியல்வாதிகளுக்கு தெரியாது.

மேலும்,சினிமாவில் தான் நடிக்கிறார்கள் ,அவர்கள் நடிகர்கள். ஆனால் ,அரசியல்வாதிகளில் நடிகர்களாக வந்து விட்டு ,மக்களை ஏமாற்றுவது தான் மிகக் கொடுமையிலும், கொடுமை .இங்கே மக்களாட்சி, இந்த தத்துவம், அந்த தத்துவம், எல்லாம் வாய் கிழிய பேசலாம் ?ஆனால் ,என்ன தினமும் நீங்கள் செய்கிறீர்கள்?
வன்னி அரசு தன்னுடைய ஜாதிக்கு செய்து கொண்டு, மக்களாட்சியை பற்றி பேசுவது மக்களாட்சி அல்ல ,அதேபோல் வேல்முருகன் எந்த ஜாதிக்கும் செய்யப்போவதில்லை. வாயிலே பேசிவிட்டு, மக்களாட்சி தத்துவத்தை பேசிக்கொண்டு ,இருக்கிறார்கள்.

இதைவிட ஒரு கொடுமை! அன்புமணி அரசியல் தெரியாத வன்னியர்களிடம் இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .அதை தான் இப்போது சி .ஆர். ராஜன் சமூக வலைத்தளத்தில் செய்திகளாக அனுப்பி கொண்டிருக்கிறார். 10. 5 % வாங்கி வன்னியர்களுக்கு கொடுத்து விட்டார்கள்.

இப்போது கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை இவர் போய் நிறுத்தி விடப் போகிறார்? இதெல்லாம் எவ்வளவு பெரிய போலித்தனமான அரசியல்! என்பதை மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள் ?
