விஜயின் ஆட்சி எப்படி இருக்க போகிறது? இதுதான் மக்களின் கேள்வி? அதே கேள்விதான் சமூக நலன்! பத்திரிகைகளின் கேள்வி?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அரசியலில் விஜயை கொண்டு வந்தவர்கள் பிஜேபி தான் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல் .

விஜய் தமிழ்நாட்டில் ஒரு சப்ஸ்டியூட்டுக்காக பிஜேபி இவரை சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அதாவது விஜய்க்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை பயன்படுத்தி விஜய்யை அரசியலுக்கு பிஜேபி மறைமுக சப்போர்ட் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேலும்,

விஜயின் இந்த வெற்றியை பிஜேபியும் எதிர்பார்க்கவில்லை. விஜயும் எதிர்பார்க்கவில்லை. விஜய் எதிர்பார்த்தது 25 சீட்டிலிருந்து 30 சீட்டு வரும். ஆனால், இங்கே தெய்வத்தின் நோக்கமே நிறைவேறி இருக்கிறது. அதாவது சித்தர்கள் ,மகான்கள் அவர்கள் நினைத்ததை நிறைவேற்றி இருக்கிறார்கள். இதற்கு ஆதாரத்தை கொடுக்க முடியாது. அது எப்படி வந்தது என்று காட்டவும் முடியாது. அதுதான் கடவுள். இது ஒருபுறம் இருக்கட்டும்.

விஜய் வெற்றி பெற்ற பிறகு பிஜேபியின், ஆதரவு கோரி, அவர்களுடைய ஆலோசனையில் போயிருந்தால், இப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அத்தனை பேர் ஆதரவும், விஜய்க்கு கிடைத்திருக்கும்.

ஆனால், இவர் மதச்சார்பின்மை கொள்கைக்காக ,மக்கள் இவருக்கு வாக்களித்து விட்டார்கள் என்று இவரே நம்பிக் கொண்டார? அல்லது கூட இருப்பவர்கள் சொல்லி இவரை உசுப்பேத்தி வைத்து விட்டார்களா? என்பது தெரியவில்லை.

மேலும்,இன்று மதச்சார்பின்மை கொள்கையை பேசிய திமுகவை 50 ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்தாலும் , மக்கள் முதுகு தோல் உரித்து ,வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

தவிர, மக்கள் அதிகாரம் தொடர்ந்து திமுக வராது என்று எழுதியிருந்தோம். கார்ப்பரேட் ஊடகங்கள் அத்தனையும் மீண்டும் திமுக ஆட்சி தான் என்று எழுதிக் கொண்டிருந்தார்கள்.

மேலும்,என்னையும், மாநில அளவில், மாவட்ட அளவில், உள்ள உயர் அதிகாரிகளும், நண்பர்களும் கேட்டார்கள் நிச்சயம் வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட்டேன்.

தவிர,அரசியலுக்குள் நடக்கின்ற ஒரு விஷயம் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற விஷயம் அது உயர் மட்ட அளவில் மட்டும் தான் தெரிகிறது.

மேலும்,இப்போது விஜய்! பிஜேபிக்கு எதிரான நிலைப்பாட்டை இவராக தேடிக் கொண்டார். இது தவிர, பெரும்பான்மையாக இருந்த திமுகவே பிஜேபியை எதிர்த்து 5 ஆண்டு காலம் அவர்களால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அவர்களும் செய்யும் மனநிலையில் இல்லை .அது வேறு.

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசியல் சூழ்நிலை ! அடுத்தது வலுவான எதிர்க்கட்சியாக திமுக இவருக்கு எதிராக வந்து உட்கார்ந்துள்ளது. நேற்றே திமுக வலுவான எதிர் கட்சியாக செயல்படுவோம் என்று தீர்மானத்தை கொண்டு வந்து விட்டார்கள்.

மேலும்,நீங்கள் மெஜாரிட்டியாக வெற்றி பெற்றிருந்தால் கூட ,ஓரளவு சமாளிக்கலாம். உங்களுக்கு ஆதரவு கொடுக்கின்ற கட்சிகள் எத்தனை நாளைக்கு தாக்கி பிடிப்பார்கள்?

மேலும்,நீங்கள் வெளிப்படையாக மக்களுக்காக ஆட்சி நடத்தணும் என்று சொன்னால், அவர்கள் வருமானத்தை எப்படி வீட்டுக்கு எடுத்துச் செல்வது என்று தான் கணக்கு போடுவார்கள். அது மட்டுமல்ல,

உங்களுடைய கட்சிகளிலே தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அதற்கு தகுதியானவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ?என்று தெரியவில்லை.

மேலும்,நீங்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் அதை நிறைவேற்ற முடியுமா? என்பதை மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கும்? நீங்கள் மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. கூட இருப்பவர்களும் அந்த நேர்மைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், நிதியைப் பொறுத்தளவில் மத்திய அரசு நிதிதான் பெரும்பான்மை நிதியாக மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப் படுகிறது. அதில் எல்லாம் அவர்கள் முட்டுக்கட்டை போட்டால், தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை வந்துவிடும்.

மேலும்,உங்களுக்கு அரசியல் அடிப்படை தெரியவில்லை என்று தான் அரசியல் வட்டாரத்தில் பேச்சு. இனி யாராவது அரசியல் தெரிந்த வலுவான ஆசான்களையாவது வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும்,ஜான் ஆரோக்கிய சாமி ஒருவரை மட்டுமே வைத்து, ஆலோசனை கேட்டால், நிச்சயம் இந்த நிலை தான் ஏற்படும். தவிர, இப்போது இடியாப்ப சிக்கலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது மட்டுமல்ல,

அதிமுகவின் ஆதரவு சி.வி .சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆதரவு கொடுக்க வந்தாலும், அதற்கு முட்டுக்கட்டை எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள். இன்னொரு பக்கம் அவர் அந்த கட்சியினருக்குள் பேசிய தகவல் ,விஜய்க்கு நம் உடனே போய் ஆதரவு தெரிவித்து விட்டால், இவர் தவறான அரசியலை செய்யும் போது, நாம் எதையும் அவரைக் கேட்க முடியாது.

தவிர, இவர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் அரசியல் கட்சிகளின் மிகப்பெரிய கேள்வி? இவரும், நாம் எங்கே வரப் போகிறோம் என்றுதான் வாய்க்கு வந்தபடி சொல்லிவிட்டார். சொல்வது சுலபம் .செய்வது தன் கடினம். இந்த நிலையில், விஜயின் அரசியல் நகர்வு எப்படி இருக்க போகிறது? இதுதான் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேச்சு? மேலும், அதிமுகவில் வந்த தகவல்!

விஜய் உச்ச நீதிமன்றம் சென்று இவரை முதல்வராக தேர்ந்தெடுக்க அங்கே சட்டத்தின் மூலம் அனுமதி வாங்கட்டும். பிறகு ,வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம் என்ற நிலைப்பாட்டை அதிமுக எடுத்திருப்பதாக தகவல்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை உங்களுடன் கூட்டணியில் சேர்த்துக் கொண்டீர்கள் . இது தவிர ,விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், திமுக கூட்டணியில் இருந்து வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களும் வந்தால், பெரிய எதிர்பார்ப்புடன் தான் வெளியே வருவார்கள். விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆட்சிக்குள் வைத்துக் கொண்டு, நீண்ட நாள் விஜய் அரசியல் பயணிக்க முடியாது என்று ஒரு சில ஐஏஎஸ் அதிகாரிகளே பேசினார்கள்.

அதனால்,ஆகக்கூடி விஜய்க்கு வந்த வாய்ப்பு !அரசியல் சூழ் நிலையை எதிர்கொண்டு, இவரால் ஆட்சி நடத்த முடியுமா? என்பது தான் மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த சூழ்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு !

விஜய் வந்து ஏதாவது செய்வாரா? விஜயின் ஆட்சி எப்படி இருக்க போகிறது? இதுதான் மக்களின் கேள்வி? அதே கேள்விதான் சமூக நலன் பத்திரிகைகளின் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *