
யாரை தீய சக்தி என்று மக்களிடம் சொல்லி ,ஓட்டு வாங்கிய விஜய் !அந்த தீய சக்திகளை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக முதல்வராக வெற்றி பெற்றவர் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆசி பெற்றாவர் – நடிகர் விஜய். மேலும்,
தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை மிகவும் ஒரு மோசமான சூழ்நிலை. இந்த சூழ்நிலையை மாற்றி, மக்களுக்கான ஆட்சியை விஜயால் தர முடியுமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி ?
ஏனென்றால், இவருக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனது, அது ஒரு துரதிஷ்டவசமானது. இருப்பினும், எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளை கொண்டு பெரும்பான்மை நிரூபிப்பது ,அதுவும் ஒரு தவறான அரசியலுக்கு முன் உதாரணம்.

மேலும்,அதைவிட மோசமான ஒரு முன் உதாரணம், இன்று இவர் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ,நேரில் சென்று வாழ்த்துக்களை பெறுவது, இது தமிழ்நாட்டின் மிகக் கேவலமான ஒரு அரசியல் களத்தை இவர் உருவாக்கி விட்டார்.
அதாவது மக்கள் இவருக்கு வாக்களித்தது !அதிமுக ,திமுகவுக்கு ஒரு மாற்றான ஒரு சக்தி என்று தான் நினைத்து வாக்களித்து இருக்கிறார்கள். இதை விஜய் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
தவிர,இன்று கூட ஒரு சில அதிகாரிகள் என்னிடம் பேசினார்கள், இவருக்கு வாக்களித்தவர்கள் அத்தனை பேருமே பெரும்பாலும் படித்தவர்கள் என்று சொன்னார். அது உண்மைதான். நானே கடந்த சில நாட்களாக தேர்தலுக்கு முன்னர், விஜய்க்கு கிராமங்களில் உள்ள ஓட்டுக்களை விட, நகரங்களில் அதிகமாக வாக்கு வாங்குவார் என்று சொன்னேன் .
அதே போல தான், நகரங்களில் இவர் அதிக வாக்குகளை வாங்கி இருக்கிறார் .வெற்றியும் பெற்று இருக்கிறார். இதை எடுத்துப் பார்த்தால் தெரியும். மேலும்,இந்தப் படித்தவர்கள் இப்போது என்ன பேசுகிறார்கள்? என்றால், நாம் வாக்களித்தது திராவிட கட்சிகளுக்கு எதிரான ஒரு மாற்று சக்திக்கு தான் வாக்களித்தோம் .

இன்று இவரே போய், அவர் காலில் விழுவது போல் ஆசி பெறுகிறார் என்றால், எல்லோருக்கும் இது மனதில் ஒரு அதிர்ச்சியை தான் கொடுக்கிறது என்கிறார்கள்.அது மட்டுமல்ல,
தமிழக அரசியல் வரலாற்றில் ,இதுவரை எம்ஜிஆர் வெற்றி பெற்ற போது ,ஜெயலலிதா வெற்றி பெற்ற போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆட்சி பெறவில்லை. அதேபோல், வேறு சில தலைவர்களும், எதிர்க் கட்சியினரிடம் போய் ஆசி பெற்று வருவது ,வெற்றி பெற்றதற்கான ஒரு தகுதியின்மையை தான், விஜய் இடம் இது எடுத்துக்காட்டுகிறது.

மேலும்,இவர் எப்படி எதிர்க்கட்சிகளின் அரசியலை சமாளிப்பார்? ஆரம்பத்திலேயே போய் அவர்களிடம் ஆசி பெற்றால், இவருக்கு அரசியல் தெரியவில்லை .அரசியல் படிக்கவில்லை.
இது கூட தெரியாத நம்ம தமிழ்நாட்டு, இந்த கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அது ஒரு மரியாதை நிமித்தம் என்று ,அதை நியாயத்தை பேசிக் கொண்டு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,இது எல்லாம் அரசியல் தெரியாத, மக்களை இவர்கள் ஏமாற்றலாம் .அரசியல் தெரிந்தவர்கள் ,ஒருபோதும் விஜயின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் ,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்த நோக்கத்திற்காக மக்கள் வாக்களித்தார்கள்? என்பதை சிந்திக்காமல், ஒவ்வொரு எதிர்க்கட்சி தலைவர்களையும், அவர்கள் வீட்டுக்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்திக்கிறேன் என்றால்! வாக்களித்த மக்கள் முட்டாள்களா? இல்லை நாங்களும் பைத்தியக்காரர்களா?

எதற்காக பத்திரிக்கையில் தவறுகளை சுட்டிக் காட்டுகிறோம்?மக்களுக்காக தான்! நாங்கள் பத்திரிக்கை நடத்துகிறோம். அரசியல் கட்சியினர்களுக்காகவும், ஆட்சியாளர்களுக்காகவும், நடத்துகிறவர்கள் ,நீங்கள் எதை செய்தாலும், அதை மக்களிடம் நியாயப்படுத்தி ,மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள்.மேலும்,
மக்களுக்காக தான் இந்த உண்மைகளை வெளிப்படுத்துகிறோம். தவிர,எது தவறு ?எது சரி ?என்று ஒரு பத்திரிக்கையாளன் மக்களுக்கு அதை எடுத்துச் சொல்கிறான்.

மேலும்,இங்கே ஸ்டாலின் எங்களுக்கு ஒரு பகையாளியும் அல்ல, விரோதியம் அல்ல, பங்காளி அல்ல, நாங்கள் ஏன் திமுகவை எதிர்த்து எழுதுகிறோம்? அதிமுகவை எதிர்த்து அதனுடைய தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம்? எதற்காக ?மக்களுக்காக தான்!
உங்களைத் தேர்வு செய்தது, மக்கள் மக்களின் நலனுக்காகவே தவிர, அரசியல் கட்சியினரின் நலனுக்காக இல்லை . மேலும் ,
இனி வருங்காலத்தில் விஜய் மட்டுமல்ல, எந்த அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள், தவறு செய்தாலும், மக்கள் உங்களை மாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள் .ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது. தவிர,

அரசியல் கட்சி என்றால், அரசியல் களத்திலும் ,தேர்தல் நேரத்திலும், நீங்கள் ஒருவருக்கொருவர் விரோதிகள் போல் பேசிக்கொண்டு ,பதவிக்கு வந்தவுடன் நீங்க ரெண்டு பேரும், ஒற்றுமையுடன் உறவு கொண்டாடுவதற்கு ,மக்கள் இந்த அரசியலை விரும்பவில்லை.
மேலும்,இப்போதே பலர் என்னிடம் இது என்ன அப்படின்னு? தான் கேள்வி எழுப்பினார்கள்? இதுதான் அரசியல் நாகரீகமா? ஏன்டா ?நீங்க எதை பேசினாலும், அரசியல் நாகரீகம் ? இல்லையென்றால் !அதற்கு ஒரு நியாயம் கற்பிப்பீர்கள்.

மக்கள் இளிச்சவாயர்களா? எந்த அரசியல்வாதி ?ஜெயித்தவன் !தோற்றவனை போய் இதுவரை பார்க்கிறான்? இது ஊரில் கூட கிடையாதே. இந்த அரசியல்! எங்கே போயி முடியப் போகிறது?
மேலும், விஜயால் ஸ்டாலின் ஊழலை வெளிக்கொண்டு வந்து , சட்டப்படி அதற்கான தண்டனையை இவரால் வாங்கி கொடுக்க முடியுமா? அதனால்! இவர் ஒரு (விஜய்)அரசியல் ஃபெயிலியர் (political failure) இது சினிமா அல்ல,
ஒவ்வொரு காட்சியிலும் வசனங்களை மாற்றிப் பேசி விட்டு, போவதற்கு சினிமாவில் தான் நடக்கும். நேற்று பேசியது மக்களுக்கு உற்சாகத்தை தந்தது .

இன்று நடந்த சம்பவம் , சினிமாவில் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.நிஜத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், சினிமாவையும், அரசியலையும் ஒன்றாக பார்த்தால்! விஜய்க்கு தோல்விதான். இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே எழுதி வருகிறேன்.
அரசியல் தெரியவில்லை என்றாலும், அதற்கு சரியான கைடை (guide) வைத்துக் கொள்ள வேண்டும். மேலும்,அரசியல்! என்பது சினிமாவை விட ஆழமான கடல் .
இங்கே நீந்தி கரை சேருவது, என்பது எல்லோருக்குமே மிகப்பெரிய போராட்டங்கள் தான். அதனால் விஜயின் எதிர்கால அரசியல்! தமிழக மக்களுக்கு ஒரு ஏமாற்றமாகத்தான் இருக்கப் போகிறது என்பது, இந்த நிகழ்ச்சியின் மூலம் எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களின் பார்வை !

மேலும்,இது தமிழகத்தில் வாக்களித்த மக்களுக்கு தோல்விக்கான அரசியல் அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை .