ஸ்டாலின் ஊழல் ஆட்சி! அராஜக ஆட்சி! பிடிக்காத மக்கள் தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள் . ஆனால்! அவர் வீட்டுக்கே சென்று சால்வை அணிவித்து, கட்டிப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன ? இது என்ன அரசியலா? இல்லை சினிமா? அரசியலா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

தமிழக மக்கள் மாற்றம் தேவை என்று தான் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த மாற்றத்தை ஊழல் ஆட்சி செய்தவர்களிடமே போய் சரண்டர் ஆகி ,ஆட்சி நடத்த விஜய்க்கு வாக்களிக்கவில்லை.

ஊழலை எதிர்த்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா? இல்லை ஊழல் ஆட்சியினருடன் சமரசம் செய்து கொள்ளப் போகிறீர்களா? மேலும், கடந்த ஆட்சியில் ஒவ்வொரு மந்திரியும் செய்த ஊழல்களை வெளிக்கொண்டு வந்து ,அதற்கு சட்டப்படி அந்த சொத்துக்கள் பறிமுதல் செய்து ,அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

ஆனால், எதிர்பாராத நிகழ்ச்சி எல்லாம் ,இந்த அரசியலில் அரங்கேறி வருகிறது. அதையும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் திருடன் ,கொள்ளையடிப்பவன் நியாயப்படுத்துவது போல ,அது மரியாதை நிமித்தமாக, அரசியல் பெருந்தன்மையாக, பார்க்கப்படுகிறது என்று இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டு மக்கள் எதற்காக ?உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்? என்பதற்கு விஜய் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், ராதன் பண்டிட் ஜோசியர் அவருக்கு அரசு அதிகாரியாக நியமனம் செய்ததற்கு எத்தனையோ ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அது ஒரு பெரிய விஷயம் அல்ல.

தவிர,ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது ஒரு ஜோதிடரை அதிகாரியாக நியமிக்கிறீர்களோ அல்லது அவர் உங்களுடைய அரசியல் கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் .அதனால் ,கூட அவரை நியமித்திருக்கலாம் .அது தவறு இல்லை. அது உங்களுடைய ஒரு தேவையான ஒன்றாக கூட இருக்கட்டும் பரவாயில்லை. அது தவறு என்று கூட சொல்ல முடியாது.

ஆனால் ,எங்கே தவறு நடக்கும்? எங்கே ஊழல் நடக்கும்? என்பது எங்களுக்கு தெரியும். ஊழலிடமே போய் சமரசம் செய்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியுமா? என்பது தான் எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கேள்வி? மேலும்,

இதற்கிடையில் நீங்கள் சொன்ன தேர்தல் வாக்குறுதிகள், தமிழ்நாட்டில் இப்போதைக்கு ஒன்று கூட, அதை நிறைவேற்ற முடியாது. அதற்கேற்ற வருமானமும் நிதி நிலையில் இல்லை ‌. ஆனால், சொல்லி விட்டீர்கள். இது உங்களுக்கு மைனஸ் தான். இதை எதிர்க்கட்சிகள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தீர்கள் என்று தான் சொல்லப் போகிறார்கள் .

மேலும்,இந்த ஊழல்வாதிகளின் சொத்துக்களையாவது, எடுப்பதற்கு தங்களிடம் வலுவான ஆட்சி அதிகாரம் இல்லை. எந்த திமுகவை எதிர்த்து ,அரசியல் செய்து, மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் ? என்பதை சிந்திக்காமல்,அவர்களுடைய கூட்டணியை வைத்துக்கொண்டு, அரசியல் செய்வது மிகப் பெரிய தவறு.

மேலும்,விரோதியை கூடவே வைத்துக் கொண்டு, நீங்கள் அரசியல் செய்ய முடியாது. ஆட்சியும் செய்ய முடியாது. இருப்பினும்,அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த சி.வி .சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்எல்ஏக்களை வைத்து ஆட்சி நடத்தலாம் தவறில்லை.

ஆனால், இந்த ஆட்சி ஒவ்வொரு நாளும் ,போராட்டத்தின் வெளிப்பாடாகத் தான் இருக்குமா ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நீங்கள் ஸ்டாலினை எதிர்த்து அரசியலை செய்யாமல், விஜய்க்கு எந்த அரசியல் முன்னேற்றமும் இருக்காது. என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய கொள்கை என்ன? மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

ஏதோ மக்களுக்கு தேவையானதை செய்துவிட்டு, அது கூட செய்ய முடியாமல் இருந்த ஸ்டாலின் ஆட்சியை நினைத்து மக்கள் ஆறுதல் அடைந்து கொள்வதா? (அட்மினிஸ்ட்ரேஷன்) அதாவது நிர்வாகம் மிக மோசமான நிலையில் இருந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனை மோசமான நிலையில் இருந்ததை கொஞ்சம் சரி செய்யலாம் .

இவரால் வேறு எதாவது செய்ய முடியுமா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. மேலும், மிகப்பெரிய சவால்கள் நிறைந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் ஆட்சி! இந்தப் போராட்ட களத்தில் எப்படி ஜெயிக்கப் போகிறது? இல்லை, இது சினிமா பாலிடிக்ஸ் ஆக இருக்கப் போகிறதா? அரசியலில் தெரிந்தவர்கள் கேள்வி? குழப்பத்தில் தமிழக மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *