
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது இந்த அதிமுக திமுகவினரின் சொத்து பட்டியல் கணக்கை எடுத்து பார்த்தால் ஒருவராவது தேர்வார்களா? இந்த கேள்வி தமிழக மக்களை சிந்திக்க வைக்கிறது . இந்த செய்திகள் எல்லாம் மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தொகுத்து யாரோ விஜய்க்கு கொடுத்து இரப்பார்கள் என்று நினைக்கிறேன்.மேலும்,

அரசியலுக்கு வரலாம் உங்களுடைய தொழில் என்ன? வியாபாரம் என்ன? அதையும் மீறி சொத்து பட்டியல் நீள்கிறது என்றால், இதை எப்படி மக்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?

தவிர,தமிழ்நாட்டில் இந்த ஊழல் கட்சிகளுக்கு எதிரான மாற்றத்தை விரும்பக்கூடிய மக்கள், நிச்சயம் விஜய்க்கு தான் வாக்களிப்பார்கள் அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. அது மட்டுமல்ல, படித்த இளைஞர்களின் கணிசமான ஓட்டு விஜய்க்கு நிச்சயம் வர வாய்ப்புள்ளது.

மேலும், பிஜேபி ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொன்னாலும், கொள்கையில் அது நிற்கவில்லை . அதிமுகவுடன் தான் கூட்டணி வைத்துள்ளது. காரணம் ,இங்கே ஓட்டு பற்றி தான் சிந்திக்கிறார்களே ஒழிய, மக்களைப் பற்றியோ, மக்கள் நலனை பற்றியோ, கொள்கையை பற்றியோ, கூட்டணி அரசியல் கட்சிகள் சிந்திக்கவில்லை.

மேலும் ,பிஜேபியில் சரியான நிர்வாகிகள் இல்லை. மக்களை அணுகக்கூடிய செல்வாக்கு உள்ள தலைவர்கள் இல்லை. அண்ணாமலை போன்றவர்கள் youtube நடத்தவும், பத்திரிகை, தொலைக்காட்சியில் ,பேட்டி கொடுக்கவும் தான் தகுதியானவர்கள். அரசியல் தலைவருக்குள்ள தகுதி என்ன ?என்று கூட தெரியாமல் இருக்கிறார்கள்.

மேலும்,இவர்களைப் பாராட்டக்கூடிய பத்திரிகைகள் தான், பத்திரிகை என்று மக்களுடைய வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்களை கொடுத்து வைத்திருக்கிறார்கள். உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகளுக்கு அது எல்லாம் கிடைக்காது. காலம் இதற்கு பதில் சொல்லப் போகிறது.
தவிர, மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதுதான் பத்திரிக்கை . ஆனால், இவர்கள் நினைப்பது தான் பத்திரிக்கையாக்கி விட்டார்கள். அதற்கு பல பத்திரிகைகள் அவரவர் சொந்தமாகவும், கூலிக்கும் வைத்திருக்கிறார்கள்.

மேலும்,எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இல்லை என்று பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் இந்த முறை வெற்றி பெற்றாலும், அவருடைய அதிர்ஷ்டமாக தான் இருக்குமே ஒழிய, அவருடைய தகுதியோ ,உழைப்பு, அதில் இருக்காது. அப்படிதான் ஸ்டாலினுக்கும் அடித்த யோகம். யோகத்தால் முதலமைச்சர் ஆகிறார்கள்.

வந்த பிறகு, மக்கள் நலனுக்கான ஆட்சியை கொடுக்காமல், இவர்கள் கட்சிக்கும், இவர்கள் சொந்த நலனுக்குமான ஆட்சியாக மாற்றி விடுகிறார்கள். அப்படிதான் இப்போது திமுக கதறிக் கொண்டிருக்கிறது. அதனுடைய ஊழல் பட்டியல், நீதிமன்றத்தில் ஒவ்வொருவராக பட்டியல், போட்டு வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பதவி, அதிகாரம் மக்கள் எதற்காக கொடுக்கிறார்கள்? உங்கள் வீட்டுக்கு சொத்து சேர்க்கவா? இல்லை, உங்க கட்சிக்காரர்களுக்கு சொத்து சேர்க்கவா? இதுவாவது இந்த இரண்டு கட்சிக்கும், இதுவரை புரிந்து இருக்குமா? மக்கள் ஓட்டு அளிக்காமல், கட்சிக்காரன் ஓட்டிலா? நீங்கள் ஜெய்கிறீர்கள்?

மேலும், மாற்றத்தை விரும்பும் இளைய தலைமுறைகள், விஜயை விரும்புவார்கள் .மேலும், அதிமுகவிலும், திமுகவிலும் இருக்கக்கூடிய ஊழல் கறை படிந்தவர்கள், மீண்டும் தேர்தலில் நின்றால் தோற்பது உறுதி .

அரசியல் கட்சிகளில்,கொள்கை பிடிப்பில் சீமான் இறுதிவரை தனித்தே நிற்கிறார் .அது வரவேற்க வேண்டிய ஒன்று தான். என்ன மாற்றி ,மாற்றி பேசி விடுகிறார். அதுதான் சீமானின் மைனஸ். ஒரு நாளைக்கு முஸ்லிம்காக பேசுவார். ,இன்னொரு நாளைக்கு கிறிஸ்தவர்களுக்காக பேசுவார், இன்னொரு நாளைக்கு இந்துக்களுக்காக பேசுவார்.
தமிழ்நாட்டில் ஓட்டுக்களை கவர தான் ,இந்த அரசியல் கட்சியினர், அரசியல் கட்சி தலைவர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவான உண்மை. மக்களுக்கு இந்த அரசியல் உண்மைகள் தெரியாது என்று எத்தனை நாளைக்கு? பத்திரிகைகளும், இவர்களும் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்?

அதனால், வருகின்ற 2026 தேர்தலில், வெற்றி ,தோல்வி என்பது தகுதியான மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள், நேர்மையானவர்கள், ஜெயிப்பார்கள். அந்த வெற்றியும் ஆயிரம் ஐநூறு எந்த வித்தியாசத்தில் தான் இருக்கப் போகிறது .
மேலும், படித்தவர்களின் அரசியல் ,அதாவது அரசியல் தெரிந்தவர்களின் அரசியல்! அது தகுதியான வேட்பாளர்களுக்கு அது வாக்காக மாறப் போகிறது.தவிர,படிக்காதவனின் அரசியல் , குடிகாரர்களின் அரசியல்,அரசியல் கட்சியை சார்ந்தது .அரசியல் தெரியாதவனின் அரசியல் அரசியல் கட்சியை சார்ந்து இருக்கிறது.
அதனால், தமிழ்நாட்டில் முதன் முறையாக , படித்தவர்களின் அரசியல்! அரசியல் தெரிந்தவர்கள் அரசியல்!இங்கே அரசியல் கட்சிகள் என்பது செகண்டரி தான் இருக்கப் போகிறது . அதனால், இந்தத் தேர்தல் கணிப்பு, அரசியல் கட்சிகள் எடுக்கக்கூடிய சர்வேக்கள், உளவுத்துறை எடுக்கக்கூடிய சர்வேக்கள், எதுவும் எடுபடாது.