
இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தவிர,தமிழ்நாட்டில் மட்டும் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

இதையெல்லாம் நடவடிக்கை எடுக்கக்கூடிய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாது, ஊழலுக்கு துணை போகக் கூடிய அரசியல் கட்சிகள், தனியார் கம்பெனிகளை மிரட்டி பணம் வசூல் செய்வதும், ஸ்கிராப் கம்பெனிகளில் எடுக்க, ரவுடித்தனம் செய்வதும், காண்ட்ராக்ட்களில் கமிஷன் கேட்பதும், நாட்டில் ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள். இது பற்றி தேர்தல் ஆணையம் உளவுத்துறை ரிப்போர்ட் கேட்டு நடவடிக்கை எடுக்க வாக்காளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், எத்தனையோ சிப்காட் பகுதிகளில் ஆளும் கட்சி சேர்ந்த கட்சியினருக்கும் மற்ற கட்சியை இருக்கும் இந்த ஸ்க்ரப் எடுப்பதில் போட்டி ரவுடிசம் இன்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் தலை தூக்கிக்கொண்டு தான் இருக்கிறது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஒரு அரசியல் கட்சியின் நன் நடத்தை விதிகள் குறித்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை உளவுத்துறை ரிப்போர்ட் கேட்க வேண்டும். அரசியல் கட்சிகள் பெயரில் நாட்டில் சமூக விரோதிகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் கண்காணித்து ரகசிய ஆய்வு செய்து அந்த அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

இதுதான் நாட்டில் சமூக விரோதிகளின் கூடாரத்தை காலி செய்ய முக்கிய ஒரு சட்டமாக இதைக் கொண்டு வர வேண்டும். அது மட்டுமல்ல ,அரசியல் கட்சியின் நோக்கம் என்ன ?என்று கூட தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியினர் இன்று சமூக விரோதிகளின் கூடாரமாகவே அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இது எல்லாம் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி எந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளும், உண்மையை தேர்தல் ஆணையத்திற்கு இதுவரை சொன்னதில்லை.

ஏனென்றால், அவர்கள் பணமோ, விளம்பரமோ கொடுத்தால், அவர்களைப் பாராட்டி செய்திகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் போலியான அரசியல் பிம்பம். இதிலிருந்து தான் நாட்டில் போலியான அரசியல்வாதிகள் ,போலியான அரசியல் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் சாமானிய மக்கள் கேட்க முடியாது. இதை தேர்தல் ஆணையம் தான் கேட்க முடியும்.

ஏன்? பல கோடி முதலீடு செய்து நடத்தக்கூடிய ஒரு தனியார் கம்பெனி நிறுவனம் கூட இதை எதிர்த்து இந்த அரசியல் கட்சிகளை கேள்வி கேட்க முடியவில்லை. கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம், இது எல்லாம் அரசியல் கட்சிகளின் பெயரில் சமூகவிரோதிகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால்! தேர்தல் ஆணையம் அப்படிப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இது நாட்டு மக்களுக்கு செய்யக்கூடிய மிகப்பெரிய பாதுகாப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஆளுங்கட்சி சிபாரிசு, நீதிமன்ற சிபாரிசு, நீதிமன்றத்தில் வழக்கு போடுவது, இதற்கெல்லாம் இடம் இல்லாமல் ,குற்றம் நிரூபிக்கப்பட்டால், உளவுத்துறை மூலம் உடனடியாக தேர்தல் ஆணையம் அந்த, அந்த அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இப்படி ஒரு சட்டத்தை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.

இது இன்றைய காலகட்டத்தில், நாட்டு மக்களுக்கு மிக, மிக அவசியமான ஒரு சட்டம். இந்த சட்டத்தை தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு சில மாதங்களிலே கொண்டு வருவது, இந்த தேசத்தின் பாதுகாப்பில் முக்கியத்துவமானது.

மேலும், தேர்தல் நேரங்களில் வாக்காளர்களுக்கு கொடுக்கக்கூடிய கருப்பு பணம் அது ஊழல் செய்த பணம். மீண்டும், மீண்டும் இந்த ஊழல்வாதிகள் ,ஊழல் பணத்தை வைத்து நாட்டில் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதை தடுக்க தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று எவ்வளவோ விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது. இதை வைத்து தேர்தல் ஆணையத்தால் நிச்சயம் இந்த பண பட்டுவாடாவை தடுக்க முடியும். அதற்கு எனக்குத் தெரிந்த சில கருத்துக்களை தேர்தல் ஆணையத்திற்கு முன் வைக்கிறேன்.

அதாவது தேர்தல் ஆணையம் ஒவ்வொரு சில முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ,வைத்து ஒரு மாநிலத்தை கண்காணிக்க முடியும். அதே போல் ட்ரோன்களைப் பறக்கவிட்டு, எங்கெங்கு பண பட்டுவாடா நடக்கிறது? என்பதை கண்காணிக்க முடியும்.

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பட்டியலை தேர்தல் என்று அறிவிப்பு வந்தவுடன், அந்தந்த பகுதிகளில் அவர்களுடைய லிஸ்ட் எடுத்து விட வேண்டும் .அவர்கள் அனைவரையும் கண்காணிப்பு வளையத்தில் வைக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள்? யார்? யார்? வீட்டுக்கு செல்கிறார்கள்? அது எல்லாவற்றையும் ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். அப்படி கண்காணிப்பு செய்தால் ஒரு ரூபாய் கூட இவர்களால், பணம் பட்டுவாடா செய்ய முடியாது.

இந்த அளவுக்கு தேர்தல் ஆணையம் கடும் முயற்சி எடுத்து தேர்தலை நடத்தினால், ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப முடியும். ஊழல்வாதிகள் தேர்வு செய்யப்படுவது தடுக்க முடியும் .இதையெல்லாம் இந்த நாட்டு நலனுக்காக தேர்தல் ஆணையம் சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இதையெல்லாம் கொண்டு வராமல் ஊழல்வாதிகளின் பிளாக் மணியில் தேர்தல் நடத்துவது வேஸ்ட் அதற்காக மக்களின் வரிப் பணத்தை பல ஆயிரம் கோடி செலவு செய்வது வீண் தான். இதையெல்லாம் தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ,சமூக நலன் பத்திரிகையாளர்கள் வைக்கின்ற முக்கிய கோரிக்கை .