இணையதள பத்திரிக்கைக்கு அங்கீகாரம் மற்றும் விளம்பரங்கள் கொடுப்பதில் செய்தி துறைக்கு குழப்பமா? – மக்கள் அதிகாரம்.

அரசியல் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

இன்று இணையதளத்தின் பயன்கள் மக்களிடம் அதிக அளவில் இருந்து வருகிறது. அதாவது பண பரிமாற்றத்தில் இருந்து பொருள் வாங்குவதிலிருந்து விற்பதிலிருந்து இன்றைய இணையதளத்தின் பயன்பாடு மக்களிடம் அதிக அளவு இருந்து வருகிறது.

இது இது குறித்து மக்கள் அதிகாரம் தொடர்ந்து இணையதளத்தின் முக்கியத்துவத்தை செய்தி துறைக்கு வலியுறுத்தி வருகிறது.மேலும்,

மனித வாழ்க்கையில் டிஜிட்டல் உலகத்திற்கு இணையதள பத்திரிகை அலட்சியமானது.அதனால்,இன்றைய காலகட்டத்திற்கு செய்தித் துறையில் அதற்கான அங்கீகாரத்தை கொடுக்கணும்.அதை அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

அதை எப்படி ப்ரோஸ்ஸ் (process) செய்வது என்பது தான் இப்போது அவர்களுக்குள் ஒரு சிக்கல். தவறாக செய்துவிட்டால், தேவையற்றவர்களும் அதில் உள்ளே வந்து விடுகிறார்கள் என்பது அவர்களுடைய கருத்து நியாயமானது.

முதலில் டிஜிட்டல் உலகத்தில் வரக்கூடிய பத்திரிகைகளுக்கு தகுதி இருக்கிறதா? என்பதை அதற்கான ஆய்வு தான் மிக முக்கியமானது. எவ்வளவு பேர் படிக்கிறார்கள்? தினமும் என்னென்ன செய்திகள்? இணையதளத்தில் கொண்டு வருகிறார்கள்? இது முதல் ப்ராசஸ்.

இந்த செய்திகளுக்கான முக்கியத்துவம் மத்திய ,மாநில அரசுக்கு !அடுத்தது இந்த செய்திகளுக்கான முக்கியத்துவம் மக்களுக்கு! அடுத்தது, அதன் பயன்கள் !இந்த செய்திகளின் உண்மை தன்மை ,உறுதி செய்ய வேண்டியது மிக முக்கியமானது.

உதாரணத்துக்கு தற்போது மத்தியில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .அது குறித்து தொடர்ந்து செய்திகளை மக்கள் அதிகாரத்தில் செய்தியை வெளியிட்டிருந்தோம்.

மேலும்,தேர்தல் ஆணையம் ஏன் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள் என்ற காரணத்தை சொல்லி விட்டார்கள். அதில் உண்மை தன்மையில்லாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பது மக்களை முட்டாளாக்கும் அரசியல் என்று மக்கள அதிகாரம் செய்தியை வெளியிட்டுள்ளது.

இதுபோல், மக்களுக்கான செய்திகள் நடுநிலைத் தன்மையோடு இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

மேலும்,சினிமா செய்திகளையும், நடிகைகளின் கவர்ச்சி படங்களை வைத்து போட்டால் ,இன்றைய இளைஞர்கள் அதிகம் பேர் பார்ப்பார்கள், இணையதளத்திற்குள் வருவார்கள் . இப்படிப்பட்ட கவர்ச்சி செய்திகளை எல்லாம் போட்டு ,அதற்குள் ரீல்ஸ் போட்டு, இணையதள பார்வையாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.

அது மட்டுமல்ல, பத்திரிக்கையில் காதல் ஜோடிகள் ஓடிப்போனது. கள்ளக்காதல் வரலாறுகள் இதற்கெல்லாம் , பத்திரிக்கை சர்குலேஷனில் கொண்டு வருவது போல்,செய்தித்துறை ! கொண்டு வரக்கூடாது.

மேலும்,சினிமா செய்தியை போட்டு விட்டு, நடிகைகளை அரைகுறை ஆடைகளோடு போட்டு விட்டு, அதுவும் செய்தி என்றால், இங்கே அதற்கு இடமில்லை .அப்படி போட்டால், ஒரே நாளில் 10 லட்சம் பேர் கூட பார்ப்பார்கள்.

மேலும் ,இது மக்களுக்கான பத்திரிக்கை என்பதை உறுதி செய்ய வேண்டும் .அடுத்தது, அரசு செய்தி என்பது தனி ட்ரேக் .அது மத்திய அரசு செய்தியாக இருக்கலாம், மாநில அரசு செய்தியாக இருக்கலாம் .

மேலும் ,ஒரு செய்தியை ஒருவர் காப்பி அடித்து போடுகிறார் என்றால் ,காப்பி அடித்து போட்டவர் ,எந்த நேரத்தில் அதே செய்தியை போட்டு இருக்கிறார்? அதுவும் அந்த நேரமும்? அதிலே எடுக்கலாம், நிமிஷங்கள் கூட ,அதில் கிடைக்கும் .ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி இவர் போட்டார் .இந்த செய்தியை அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி அவர் போட்டார்.

அதனால், இணையதள செய்திகளை பத்திரிக்கையில் காப்பி அடித்து போடுவது போல, இதில் போட முடியாது. அடுத்தது, இதில் வாசகர்கள் அப்படி போட்டாலும், படிக்க மாட்டார்கள் இது முழுக்க, முழுக்க இணையதளத்தை பார்ப்பவர்கள் ,படிப்பவர்கள் ,அதற்கான இணையதள நாலெட்ஜ் (knowledge) உள்ளவர்கள்.

அதனால் ,இதை படிப்பவர்கள் ,பெரும்பாலும், படித்தவர்கள், படித்த இளைஞர்கள் , இளைய தலைமுறைகள், அதிகாரிகள் ,அரசு ஊழியர்கள், படித்த பட்டம் பெற்றவர்கள், இப்படி அறிவை கொண்டு வாழ்பவர்கள். அவர்கள்தான் அதிகம், இந்த டிஜிட்டல் உலகத்தை பயன்படுத்துகிறார்கள் .

இருப்பினும்,இன்று மாடு மேய்ப்பவர்களிடமும் செல்போன் இருக்கிறது .குருவிக்காரர்களிடமும் செல்போன் இருக்கிறது. கிராமங்களில் இருளர் சமுதாயத்திடமும், இன்று செல்போன் இருக்கிறது .அந்த நிலைமைக்கு வந்து விட்டார்கள். அவர்கள் பிள்ளைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். கல்லூரிக்கு செல்கிறார்கள். அவர்களும் இந்த செய்திகளை பார்க்கிறார்கள்.

அதனால், செல்போன் உபயோகம் எந்த அளவுக்கு மக்களிடம் சென்றுள்ளது ?என்பதுதான் மிக முக்கியமானது.மேலும், இது கத்தி போன்றது .கத்தியை காய்கறி வெட்டவும் பயன்படும். அதே கத்தி கொலை செய்யவும் பயன்படும் என்ற நிலையில் தான் ,இந்த டிஜிட்டல் உலகத்தில், இணையதள தவறான செய்திகள், தவறான பிரச்சனையை உருவாக்கும் .அதில் மாற்று கருத்து இல்லை .

இதில் ஒவ்வொரு செய்தியும் ,உண்மைத்தன்மை இருப்பதை செய்தி துறை உறுதி செய்ய வேண்டும் .அது அரசாங்கமே தவறு செய்தாலும், அல்லது மக்களே தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடிய செய்தியாக அது இருக்க வேண்டும் .

அடுத்தது என்டர்டைன்மென்ட் செய்திகள், அதாவது பொழுதுபோக்கு செய்திகள் எல்லாம் போட்டுவிட்டு, அதுவும் இணையதள பத்திரிக்கை என்று அச்சு ஊடகத்தில்,கணக்கு காட்டக் கூடிய பத்திரிக்கைகள் போல இதில் முடியாது. எனவே ,அப்படிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

மேலும், இங்கே செய்திக்கு தான் முக்கியத்துவம். அதன் ஃபீட்பேக் முக்கியத்துவம் .ஆனால் ,பத்திரிகை பிரிண்ட் மீடியாவில், அச்சடிப்பது தான் முக்கியத்துவம் என்று சட்டத்தை வைத்திருந்தார்கள் .அதை எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? எவ்வளவு பேர் வாங்கி படிக்கிறார்கள்?

அதுதான் சர்குலேஷன் ஆக இருக்க வேண்டும் .ஆனால், அச்சடிப்பதே சர்குலேஷன் என்று கார்ப்பரேட்டுக்கு சாதகமான ஒரு சட்டத்தை அரசாங்கம் அப்போது கொண்டு வந்தது .அது ஒரு தவறான சட்டம். ஆனால், இப்போது இந்த டிஜிட்டல் உலக பத்திரிக்கையை எப்படி வடிவமைப்பது ?என்பதில்தான் இப்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்து இணையதள பத்திரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எழுதி வந்தது மக்கள் அதிகாரம் பத்திரிகை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் ‌.

மேலும்,இந்த நிலையில் தவறுகளை நியாயப்படுத்தக் கூடிய பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது .பத்திரிகையில் பிரிண்ட் அடித்து கணக்கு காட்டுவது போல், இங்கே காட்ட முடியாது.

மக்களுக்கு எது உண்மை? என்று தேடுவது தான் இணையதள பத்திரிக்கையின் நோக்கமாக இருக்கும்/ இருக்கிறது .அப்படி இருக்கும்போது, அதற்கு தகுதியானது எத்தனை பத்திரிகைகள்? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

இப்போது கூட அதிகாரிகள் சொன்னார்கள். நல வாரியத்தில் இன்னும் சிறிய பத்திரிகைகளின் பிரதிநிதிகள் சேர்க்கப் போகிறார்கள். என்பது காதுக்கு வந்த செய்தி .இதை அமைச்சர் யாரை சொல்கிறாரோ அவரை போடுவார்கள் என்று தெரிகிறது .

இங்கு தான் அரசியல் உள்ளே வரும்போது, தகுதி என்பது அடிபட்டு போகிறது .தகுதியானவர்களை உள்ளே கொண்டு வந்தால், தான் தரமும் தகுதியும், பத்திரிக்கை துறையில் கொண்டு வர முடியும். அது முக்கியமானது.

அடுத்தது, பிரிண்ட் பத்திரிக்கையில் சிபாரிசுகள் போல, டிஜிட்டல் பத்திரிக்கையில் சிபாரிசு என்பது முடியாத காரியம் .ஏனென்றால், நீங்கள் கட்சி பத்திரிகையை நடத்திக் கொண்டு, எந்த எந்த கட்சி!ஆட்சி , அதிகாரத்திற்கு வருகிறதோ ?அந்த கட்சியின் செய்தியை போட்டு ,நீங்கள் கட்சி பத்திரிக்கையும் ,இதற்குள் கொண்டு வந்தால், இங்கே அதை மக்களுக்கான பத்திரிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும்,முழுக்க, முழுக்க இது ஒரு நடுநிலைத் தன்மை வகிக்கக்கூடிய உண்மை செய்திகளை வெளியிடக் கூடிய தகுதியான பத்திரிகைகள் மட்டும்தான் இதில் இடம் பெற்றால் தான் ,இதில் தவறுகள் வருவதற்கு வாய்ப்பில்லை. இல்லை என்றால், எதிர்காலத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் வந்துவிடும்.

இங்கே பழைய பஞ்சாங்கத்தை போல் ,அச்சடிப்பது சட்டம் ஆக்கி, பத்திரிக்கை துறையை கார்ப்பரேட்டுக்கு செய்தித்துறை சொந்தமாக்கி வைத்திருப்பது போல, இதிலும், அதுவே தான் கொண்டு வந்து விடும்.

இதை மாற்ற வேண்டுமென்றால், அரசியலுக்குள், பத்திரிகைகள் இருக்கக் கூடாது ,இந்த பத்திரிகைகள் மக்களுக்காக இருக்க வேண்டும் . இப்படி வடிவமைத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் ‌. மத்திய அரசும் இணையதள பத்திரிக்கையை கொண்டு வந்துள்ளது .ஆனால், அதில் நிறைய குளறுபடிகள் உள்ளது. மீண்டும் அதற்குள் அரசியல் இருக்கிறது. எனவே, அரசியலுக்குள் பத்திரிகை என்றால், குளறுபடிகள் வரத்தான் செய்யும்.

மேலும் , உண்மைக்கு முக்கியத்துவமான பத்திரிகைகள், நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும் ,உண்மை தன்மையை கொண்டு சேர்க்கக் கூடிய பத்திரிகைகளாக இவர்கள் இருக்க வேண்டும்.

இதில் தேசத்தின் பாதுகாப்பு ,மக்களின் பாதுகாப்பு ,உண்மையான செய்திகள், தரமான செய்திகள், அரசின் செய்திகள், இது அத்தனைக்கும் மார்க் போட்டு, மக்கள் மனதில் இதற்கான இடம் எங்கே நிற்கிறது? இதற்கு முக்கியத்துவம் கொடுத்தால், இந்த பத்திரிகைகள் நிச்சயம் மக்களுக்கும் பயன்படும். இந்த தேசத்திற்கும் பயன்படும். அரசாங்கத்திற்கும் பயன்படும்.

இதிலே டி.டி. அண்ணாதுரை அவர்களிடம் பேசும்போது, இறுதியாக அவர் ஒரு வார்த்தை சொன்னார். பயன்கள் என்று குறிப்பிட்டார். இதுதான் சார், லட்சத்தில் ஒன்று ,என்று அவர் பேசும் போது குறிப்பிட்டேன். அதாவது ,இந்த செய்திகளுக்கான பயன்கள் மிக, மிக ,முக்கியத்துவம் ஆனது. இதை முதன்மைப்படுத்தி, பத்திரிகைகளை ஆய்வுக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்.

இதில் அவ்வளவு எளிதில் கணக்கு காட்டக் கூடிய பத்திரிகைகள் உள்ளே வர முடியாது .ஒருவன் படித்தாலும், படிக்காவிட்டாலும் ,அந்த பத்திரிகையை நீட்டி விட்டு, போய்விடுவார்கள் ‌.இங்கே அதுயெல்லாம் நடக்காது.

அது மட்டுமல்ல, கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் கூட ,அச்சடிப்பதை கணக்கு காட்டி ,சலுகை ,விளம்பரங்கள் வாங்குவது போல், இங்கே வாங்க முடியாது. அங்கே சினிமா செய்தியை போடுவார்கள், விளையாட்டு ,வியாபார செய்திகளை போடுவார்கள் ,அரசியல் கட்சி செய்திகளை போட்டு ,பக்கங்களை நிரப்பி காட்டக்கூடிய வேலையெல்லாம் இங்கே நடக்காது.

அதனால் ,இது எல்லாம் அரசியல் சுயநலமாக இருந்த காலத்தில் கார்ப்பரேட் பத்திரிகைகள் அவர்களோடு சேர்ந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தார்கள். இப்படிப்பட்ட கொள்ளை இனி இருக்கக் கூடாது.

பத்திரிகை துறையும், செய்தித் துறையும், இணையதள பத்திரிகைகளை மக்கள் நலனுக்காக மாற்ற வேண்டும் .மக்களுக்கான பயன்கள் என்ன? என்பதை இந்த டிஜிட்டல் உலக பத்திரிக்கை கொடுக்க தயாராக இருக்க வேண்டும் .

அதுதான் செய்தி துறையின் வெற்றியாக இருக்குமே தவிர ,மீதி எதுவும் இந்த செய்திகள் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதை இந்த கட்டுரையை முடிக்கிறேன்.(இது தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *