
இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி ! அமெரிக்காவுக்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்ல,
உலக அரங்கில் இந்தியாவின் சேட்டிலைட்டுகள், எதிரி நாடுகளை கண்காணிக்கும் குறைந்த பொருட்ச அளவில் வடிவமைக்கப்பட்ட சேட்டிலைட்டுகள், வல்லரசு நாடுகளுக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இது தமிழ நாட்டுக்கும் தேவை என்று பல நாடுகள் அதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. இது அமெரிக்காவுக்கு போட்டி ,பொறாமையை ஏற்படுத்தி உள்ளது.மேலும்,

குறிப்பாக அமெரிக்க சர்வதேச நாடுகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் அல்லது அச்சுறுத்தலுக்கு பயப்பட வேண்டும் என்பது மறைமுக ஒரு ஆதிக்க சக்தியாக இருக்க வேண்டும் என்பது அதனுடைய ஒரு விருப்பம் .
அதை நம் நாட்டில் ,குறிப்பாக இங்கே டான் என்று சொல்வார்களே !அதுபோல், அமெரிக்கா டான் போல மற்ற நாடுகளிடம் இருக்க வேண்டும் என்று அதனுடைய மறைமுக கொள்கை. அதற்காகத் தான் அமெரிக்க பல ஏவுகணைகளை தயாரித்து ,உலக அரங்கில் மற்ற நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதையெல்லாம் இந்தியா முறியடித்து பொருளாதார வளர்ச்சியிலும் ,இது போன்ற ராக்கெட்டுகள் தயாரிப்பிலும், ஏவுகணைகள் தயாரிப்பிலும், சேட்டிலைட்டுகள் தயாரிப்பிலும், இந்தியா தற்போது முன்னணியில் நிற்கிறது. அவர்களோடு போட்டி போடுகிறது.
இது ட்ரம்புக்கு மனதில் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் இந்தியாவுடன் நட்பு பாராட்டுவார் .மற்றொரு பக்கம் பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி அதன் வளர்ச்சிக்கு பொருளாதார உதவிகளை செய்வார். அதாவது இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை வளர்த்தால் இந்தியாவுடன், பாகிஸ்தான் போரிட்டுக் கொண்டிருக்கும் .
இப்படிப்பட்ட ஒரு மறைமுக ராஜதந்திர வேலையா? இது இல்லை கிரிமினல் வேலையா ?என்பது தெரியாமல், இந்தியாவுடன் இப்படிப்பட்ட வேலையெல்லாம் செய்து பார்க்கிறார் ட்ரம்ப் . ஆனால்,மோடி எல்லாவற்றையும் அமைதியாக, பொறுமையாக சகித்துக் கொண்டு, ட்ரம்பின் ஆட்டத்தை எப்படி அடக்குவது ?என்பதை ஒரு பட்டியல் எடுத்து ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.
முதலடி இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்கள் திரும்ப பெற்றது. இது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி. அதேபோல், தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக திருப்பூரில் இருந்து ஆடைகள் ஏற்றுமதி அதிகமாக இருந்தது .இந்த 50 சதவீத வரிவிதிப்பு அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.

இப்போது அமெரிக்காவுக்கு தான் ஏற்றுமதி செய்து இந்தியாவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய நிலையை உருவாக்குவதை விட, உலக நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் அனுப்பி ,அந்த பொருளாதாரத்தை ஈட்டலாம் என்ற ஒரு முடிவுக்கு மோடி அந்த கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்.

அதற்கு அடுத்தது ,இந்தியாவின் ரூபாயிலே வர்த்தகத்தை உலக நாடுகளில் நடைபெறும் ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளார். இது இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று சாதனை.
மேலும் , ட்ரம்ப் அவருடைய நாட்டின் அதாவது அமெரிக்காவின் டாலர்களில் தான் உலக நாடுகள் பெரும்பாலும் ,சந்தை மதிப்பை அதாவது ஷேர் மார்க்கெட் முதல் இதை வைத்துதான் நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோடி செயல்படுவது ட்ரம்புக்கு கொடுக்கப்படும் பதிலடி .
அதனால் டிரம்ப் இந்தியாவை 50 சதவீதம் வரி விதித்து மட்டம் தட்டி ,இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை கேள்விக்குறியாக்கலாம் என்று நினைத்தால், அது வீணான கனவு. அது மட்டுமல்ல,

இந்திய நாட்டின் அரசியலில் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளோடு மறைமுக கூட்டு சதி திட்டங்களுக்கும், அந்நிய சக்திகள் தலையீடு இருக்கிறது. என்று கடந்த காலங்களில் மக்கள் அதிகாரத்தில் குறிப்பிட்ட உள்ளோம் .அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தான், இந்தியாவின் பொருளாதாரத்தை வீழ்த்தி, இந்த நாட்டை அந்நிய சக்திகள் கூறு போடலாம் என்று நினைத்தாலும் ,ஒரு காலம் அது நடக்காது. இந்தியாவின் ஒற்றுமை ,மோடி உலக அரங்கில் பாராட்டப்படும் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் காலத்தில் தான் இந்தியாவின் பெருமை, உலக அரங்கில் பேசப்பட்டது. அது இந்திய மக்களுக்கு கிடைத்த பெருமை. அதனால் மோடியைப் பற்றி தரை குறைவாக பேசக்கூடிய அரசியல் கட்சிகள், தகுதி தெரியாமல் ,தரம் தெரியாமல் ,அவர்களுடைய தகுதி என்ன என்று தரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இதை வைத்து ட்ரம்ப் பால் இந்தியாவை வீழ்த்த முடியாது.