பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனையை அரசியல் ஆக்கினால், தீர்வு காண முடியுமா ?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

பட்டாசு தொழிற்சாலையில் முதலாளிகளின் அதிக ஆசை + அரசியல்வாதிகளின் இரட்டை வேடம் இது தான் பட்டாசு தொழிற்சாலையில் மனித உயிரிழப்புக்கு முக்கிய பிரச்சனையா? மேலும்,

பட்டாசு தொழிற்சாலை மிகவும் லாபகரமான தொழில்! சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் பட்டாசு இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இங்கே பிரச்சனை என்று வரும் போது தான் மக்களுக்கு தெரிய வருகிறது அரசியல்வாதிகள் அதிலே உள்ளே நுழைந்து அதிகாரிகளை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிகாரிகள் தரப்பில் அதாவது (Factories of health department) இணை இயக்குனர்கள் அவ்வப்போது சென்னையில் இருந்து சிவகாசிக்கு சென்று பார்வையிட்டு நிலைமையை என்னவென்று அரசுக்கு தகவல் கொடுத்து வருகிறார்கள். அந்த விஷயத்தில் இவர்கள் சரியான முறையில் செய்த பணியை இயக்குனர் எஸ். ஆனந்த் தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தத்துக்கு தெரிவிக்கப்பட்டு , அவரும் வாய்டைத்து போய் உள்ளார்.மேலும்,

இப்போது இந்த பிரச்சனை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது ,அங்கு இருக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். அவரிடம் சரியான உண்மையை அவர்கள் சொல்லவில்லை.

அந்தப் பகுதியில் உள்ள வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகிறார்கள். அனுபவம் இல்லாத தொழிலாளர்களாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அவர்கள் எதை எங்கு வைக்க வேண்டும் எப்படி வைக்க வேண்டும் தெரியாமல் வைத்தாலே தீர்ந்து. இது மிகவும் ஆபத்தான வேலை. தொழிலாளர்களுக்கு பயிற்சி மிகவும் அவசியம்.

மேலும்,அவர்களுக்கு இந்த பட்டாசு செய்யத் தான் செய்கிறதே ஒழிய, அது எதனால் வெடிக்கிறது ? என்பதை அங்குள்ள தொழிலாளர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் ,இது தெரியவில்லையா ? தொழிலாளர்களுக்கு தெரியவில்லை என்றாலும், பட்டாசு தயாரிக்கும் உரிமையாளர்களுக்கு நிச்சயம் இந்த பிரச்சனை தெரிந்து இருப்பினும், அவர்களுடைய அதிகப்படியான ஆசை ஒரு பக்கம், மற்றொரு பக்கம் அவர்கள் உயிரிழப்பு பற்றி கவலைப்படாதவர்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு பட்டாசு தயாரிக்க முடியும்? என்பதை அதிகாரிகள் தெளிவாக சொல்லிவிட்டு வருகிறார்கள்.

ஆனால், உரிமையாளர்கள் அப்போதைக்கு சரி என்று சொல்லி விட்டு, குறுகிய இடத்தில் ஆட்களை கொண்டு வந்து பட்டாசை உற்பத்தி செய்ய சொல்கிறார்கள். இவர்கள் அடுக்கி வைக்கும் போது சிறிய உராய்வு ஏற்பட்டாலும், காற்றிலே எளிதில் தீப்பற்ற கூடியது. அதாவது பாஸ்பரஸ் போன்ற வெடிபொருட்கள் காற்றில் எளிதில் தீ 🔥 பற்றக் கூடியது .

இதற்காக தமிழக அரசு அந்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், இந்த தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையிலும், கூட்டங்கள் நடத்தி, அவர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இவர்கள் ஆலையை மூடி சீல் வைத்தால்! அங்குள்ள அரசியல்வாதிகள் ,அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். உயிர் இழப்பு ஏற்படும்போது அதிகாரிகள் மீது பழியை சுமத்தி (தொழிலாளர்களுக்காக) இவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.

இப்படி சிவகாசி பட்டாசு தொழிற்சாலை பிரச்சனைக்கு தீர்வு என்ன ?வென்று தெரியாமல் எடப்பாடி பழனிசாமியிடம் உரிமையாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவர்கள் சொல்வது ,அவர்கள் நலனுக்காக தான் இருக்கிறது.

அங்கே வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் உயிரிழந்தால், அவர்களுக்கு என்ன இழப்பீடு கொடுப்பது? அவர்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு? உயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்க, என்ன வழி ? என்பதை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கவில்லை.

மேலும், இதில் நீதிமன்றமும் இதில் தலையிட்டு, காற்று மாசு அவசியமானதாக கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்குகிறது. இவர்கள் பட்டாசு காட்டும் மாசு ஒரு சதவீதம் தான் என்கிறார்கள். இல்லை, தீபாவளி காலங்களில் பட்டாசின் காற்று மாசு அதிகப்படியாக இருக்கிறது. சொல்லப்போனால்,

மக்களுக்கு இரண்டு நாளைக்கு காற்று மாசின் பாதிப்பு சுவாசத்தில் அதன் அறிகுறிகள் தென்படுகிறது. இப்படி எல்லாம் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து, அதற்கு தீர்வு காண வேண்டும். இதை வைத்து அரசியல் பிரச்சினையாக , ஓட்டுக்காக அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால்! இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. மக்களுக்காக பிரச்சனையை தீர்க்க அரசியல்வாதிகள் முன் வர வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *