உச்ச நீதிமன்றம்! நாட்டில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருந்தால்!ஊழலுக்கு மறைமுகமாக துணை போனால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, கேள்விக்குறியாகும் போது,இந்த சட்டத்தின் தீர்ப்புக்கள் நாட்டு மக்களின் வருமானம், தொழில், ஆகியவற்றை சரி செய்து விட முடியுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மே 23, 2025 • Makkal Adhikaram

நாட்டு மக்கள்! ஊழலுக்கு எதிராக தங்களுடைய கவலையை வெளிப்படுத்துகிறார்கள். நேர்மையான அரசியல் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தின் சட்டப்படி வாக்களித்தும், நமக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, இவற்றில் நடுத்தர மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.தொழில் வளர்ச்சியில்லை. சட்டத்தின் பாதுகாப்பு இல்லை. 

இதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் அதை சரிவர செய்வதற்கு தகுதி இல்லாமல் ஊழல் நிர்வாகத்தை திமுக அரசு போல் நடத்திக் கொண்டிருந்தால், பிஜேபி எதிர்க்கட்சி என்று மக்களிடம் அரசியல் பிரச்சாரம் செய்வது போல், நீதிமன்றத்தில் இந்த ஒரு பிரச்சனையை முன் வைத்து, நீதிமன்றம் இதற்கு தடையும், சட்டமும் இயற்றிக் கொண்டிருந்தால், வாக்களித்த மக்கள் முட்டாள்களா? 

நீதிமன்றத்தில் நீங்கள் சட்டத்தை புரட்டிக் கொண்டிருக்கும் போது, இதையெல்லாம் உங்களால் சரி செய்ய முடியுமா? ஊழல் நிர்வாகத்தால், ஊழல் ஆட்சியால், எந்த திட்டத்தையும் நாட்டு மக்களுக்கு சரிவர கொடுக்க முடியாது. நாட்டில் நீதிமன்றம் ஊழலுக்கு எதிராக இருக்க வேண்டுமே தவிர, ஊழலுக்கு மறைமுக ஆதரவாக நீதிமன்றமே இருந்தால், நாட்டில் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அது மாநிலமாக இருந்தாலும், இந்திய நாடாக இருந்தாலும், இதுதான் நிலைமை. வரக்கூடிய வருமானத்தை எல்லாம் நீங்கள் பங்கு போட்டு எடுத்துக் கொண்டு போய்விட்டால், நாட்டு மக்களுக்கு இவர்கள் என்ன செய்வார்கள்? ஊடகங்களின் பொய்களைத்தான் மக்களிடம் பரப்பிக் கொண்டிருப்பார்கள். அதை தான் மக்கள் பார்த்துவிட்டு, கேட்டுவிட்டு, வேதனையோடு புலம்பிக் கொண்டிருப்பார்கள். இதுதான் தமிழ்நாட்டின் அரசியல். 

இப்படிப்பட்ட அரசியல் நிர்வாகத்தில், நீதிமன்றம் வக்காலத்து வாங்கிக் கொண்டிருப்பது, தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும்,ஒவ்வொரு விஷயத்திலும், நீதிமன்றங்கள் இப்பொழுது அதிக அளவில் தலையிடுவது,நாட்டின் நிர்வாகத்திற்கு ஆபத்து. தவிர, எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் மோதல் போக்கு அரசியல், நாட்டு மக்களுக்கு நன்மையை தராது. இருவருடைய போலி கௌரவ சண்டைக்கு, இவர்களுக்கு ஓட்டு போட்ட நாட்டு மக்கள் தான் பாதிப்பார்கள்.

இந்த சூழ்நிலை அரசியல் இருந்தால், நாட்டில் எந்த வேலையும் செய்ய முடியாது. நீங்கள் எதற்கெடுத்தாலும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, குறைகளை, ஆளும் கட்சிக்கு நீதிமன்றங்கள் அரசியலுக்குள் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருந்தால், அவர்களால் எப்படி ஒழுங்காக நிர்வாகத்தை செய்ய முடியும்? சட்டத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் என்ன? என்று உடனடியாக சொல்ல வேண்டும்.

 நீங்கள் வருட கணக்கில் வழக்குகளுக்கு அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் ஆக வாய்தா போட்டுக் கொண்டிருந்தால், நாட்டின் நிர்வாகம் என்னாகும்? இதே நீதிமன்றம், அப்படி காலதாமதம் செய்ததற்காக, தமிழ்நாட்டின் கவர்னர் ஆர். என். ரவி சட்ட மசோதாகளை திருப்பி அனுப்பி கால தாமதம் செய்ததற்கு, உங்களுடைய தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, அதை சட்ட மசோதாவாக ஆக்கிவிட்டீர்கள். 

ஆனால், நாட்டில் திமுக ஆட்சி ஊழலற்ற ஆட்சி கொடுப்பது போல், நீதிமன்றங்கள் வாக்காளத்து வாங்கிக் கொண்டிருந்தால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, வேலை வாய்ப்பு, அத்தனையும் கேள்விக்குறியாகி விடும்,மேலும்,இன்று தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பிறகு, எத்தனை லட்சம் கோடி, கடன் வாங்கி உள்ளது? வாங்கிய கடனுக்கு வட்டி எவ்வளவு கட்டுகிறது? தமிழ்நாட்டின் வருமானத்தில் வட்டி 50 சதவீதம் போய்விடுகிறது. 50 சதவீதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக போய் விடுகிறது. மீதி என்ன இருக்கிறது? எந்தப் பணிகள் இவர்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்வார்கள்?

இந்த நிலையில், மத்திய அரசை குறை சொல்லிக்கொண்டு, நீதிமன்றத்தில் வழக்குகளை கொடுத்துக்கொண்டு, திமுக அரசு அரசியல் செய்து கொண்டு, மத்திய அரசின் மீது நிதி கொடுக்கவில்லை, நிதி கொடுக்கவில்லை. என்று மக்களிடம் பொய்யைச் சொல்லிக் கொண்டிருந்தால், தமிழக மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல.மேலும்,

கொடுத்த நிதியை ஒழுங்காக செயல்படுத்தி, நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க முடியாத ஸ்டாலின் அரசு! இனி தமிழ்நாட்டை திவாலாக்க போவது உறுதி. எதற்கெடுத்தாலும் திமுக ஆட்சியில், இப்போது நீதிமன்றத்திற்கு போய் முறையிட்டுக் கொண்டு, மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டு, காலத்தை கடத்துவது நிர்வாகம் செய்ய தகுதி இல்லை. 

அடுத்தது, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு ஒரு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பின்னாலும், அரசியல் ஆதாயத்திற்கு நின்று கொண்டிருக்கும் கூட்டங்கள், தமிழ்நாட்டை பலவீன படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை இப்படியே போனால், நாட்டு மக்கள் நடுத்தெருவில் பாகிஸ்தான் போல் நிற்பார்கள்.மேலும்,

 நாட்டு மக்களுக்கு சட்டத்தின் படி எது நல்லது? எது கெட்டது? என்பதை பார்க்காமல், அரசியல் கட்சியினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் எது நன்மை? என்று சட்ட புத்தகத்தில் இருக்கக்கூடிய ஓட்டைகளை வைத்து, அவர்களுக்கு சாதகமாக தீர்ப்புகளை எழுதிக் கொண்டு இருந்தால் நீதிமன்றத்தால், நாட்டு மக்களுக்கு ஊழலைத்தான் பரிசாக அளிக்க முடியும். 

நல்ல நிர்வாகத்தையும், நல்லாட்சியும் கொடுப்பார்கள் என்று தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் .ஆனால், மக்களுக்கு ஊழலை பரிசாக கொடுத்தால் அதற்கு நீதிமன்றம் துணை போவது ஜனநாயகத்தின் வரம்புகளை மீறும் செயல்.நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நீதிமன்றம் இருக்க வேண்டுமே ஒழிய, ஆட்சியாளர்களின் வளர்ச்சிக்கும், அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கும், நீதிமன்றங்கள் இருக்கக் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *