ஜூலை 20, 2025 • Makkal Adhikaram

எமது பத்திரிக்கை மற்றும் இணையதள வாசகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வணிக நிறுவனங்கள், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் சார்பில் மனமார்ந்த வணக்கம்.
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் குரலாக வெளிவந்து கொண்டிருக்கிறது . நாட்டில் லட்சம் பத்திரிகை இருக்கலாம் அதில் லட்சத்தில் ஒன்றாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இருக்கும். அதனால் தான், நீதியரசர் கற்பக விநாயகம் பத்திரிக்கையை படித்து பார்த்தேன். சமூக அக்கறையுடன் இருப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று பத்திரிக்கை என்பது ஒரு விளம்பரத்தின் அடிப்படையில் பத்திரிக்கை இருக்கிறது. ஆனால், மக்கள் அதிகாரம் சமூக நோக்கத்தின் அடிப்படையில் பத்திரிக்கையாகவும், இணையதளமாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும், மக்கள் அதிகாரம் மக்களுக்கு உண்மைகளை எடுத்துச் சொல்லும் பத்திரிக்கையாக விளங்குகிறது. மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு இரண்டு இணையதளங்கள் உள்ளது.
1. makkaladhikarammedia.com ; 2. makkaladigaram.page ; இரண்டிலும் சுமார் தற்போது 4 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். இது தவிர, இன்ஸ்டாகிராம் பேஸ்புக் , டுவிட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றின் மூலம் சுமார் 25 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளர். மேலும், பத்திரிகையின் பிரதிகள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது விற்பனைக்கு அல்ல. முக்கிய விஐபி களுக்கு, அதிகாரிகளுக்கு, பொதுமக்களுக்கு இலவசமாகவே கொடுத்து விடுகிறோம். இதில், முக்கிய விஷயம் என்னவென்றால்! பத்திரிக்கை மக்களிடம் ஒரு நல்ல பாராட்டைப் பெற்றுள்ளது.
குறிப்பாக சொல்லப்போனால், மக்களுக்கு மக்கள் அதிகாரம் என்றால்! விரும்பி படிக்கும் அளவிற்கு அதனுடைய கருத்து, உண்மை தன்மை, மக்களை ஈர்த்துள்ளது.மேலும், அரசின் சலுகை, விளம்பரங்கள் இருந்தால், இந்த பத்திரிக்கை எப்போதோ வளர்ச்சி அடைந்திருக்கும். அது இல்லாததால் பத்திரிக்கையை போராடி நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இருப்பினும் இணையதளம் மக்கள் இடத்தல் அதிகளவு வரவேற்பை பெற்றுள்ளது.
பத்திரிகையின் சட்டங்கள் சாமானிய மக்களுக்கு ஒரு வித கஷ்டத்தையும், கார்ப்பரேட்டுக்கு ஒரு வித சாதகத்தையும், ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி மத்திய, மாநில அரசுக்கு மக்கள் அதிகாரம் பலமுறை எடுத்து சொல்லியும் நடவடிக்கை இல்லை. தொடர்ந்து மக்கள் அதிகாரத்தின் போராட்டம் அற வழியில் தொடரும்.
எனவே, எங்களுக்கு கொடுக்கின்ற விளம்பரங்கள் உங்களது தொழில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்தின் வளர்ச்சிக்கும், அது முக்கியத்துவம் ஆனது என்பதை உணர்ந்து தொழில் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், விளம்பரங்கள் கொடுத்து மக்கள் அதிகாரம் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவிட கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், பத்திரிக்கையில் கொடுக்கப்படும் விளம்பரத்திற்கு இணையதளத்தில் இலவசமாக ஒரு மாதம் உங்களுடைய விளம்பரத்தை இணையதளத்தில் செய்திகளோடு சேர்த்து அதை வெளியிடுவோம். நன்றி.