
மக்கள் அரசியலில் ஒருவருக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்றால், அதை ஏற்றுக் கொள்பவன் தான் அரசியல்வாதி. ஆனால்,அந்தத் தீர்ப்பை மதிக்காமல், அதற்குள் அரசியல் செய்து கொண்டு, மக்களாட்சிக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டு ,பேசிக்கொண்டு ,நடந்து கொண்டு தன்னுடைய பதவி வெறி! அதிகாரத்திற்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வலிமையை அழித்துவிட்டார்.
மேலும்,மக்கள் வாக்களிக்கும் போது ஜெயலலிதா இருந்தவரை ஜெயலலிதாவுக்காக தான் அதிமுக என்று வாக்களித்தார்கள். இப்போது எடப்பாடிக்காக மக்கள் வாக்களிக்கிறார்களா? இல்லை அந்த இரட்டை இலை சின்னத்திற்காக வாக்களிக்கிறார்களா? அல்லது இவர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்று வாக்களிக்கிறார்களா? இதற்கு மட்டும், எடப்பாடி பழனிசாமி பதில் தெரிந்து கொண்டால் ,இந்த காலத்திற்கு ஏற்ப மக்களின் மனநிலை புரிந்து கொண்ட அரசியல்வாதி என்று ஏற்றுக் கொள்வேன்.

மேலும், இவர் படிப்பறிவு இல்லாத மக்கள் வாழ்ந்த காலத்தின் அரசியல்வாதி. இவர் அதே மனநிலையில்தான் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார். இவரை நம்பி அரசியலுக்கு செல்கிறவர்கள், இவரை நம்பி அதிமுகவில் பதவி வெறியில் அலைந்து கொண்டிருப்பவர்கள் ,நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள் என்பது உறுதி .
இது அவருக்கு எதிராக இந்த செய்திகளை சொல்வதால், எனக்கு எதுவும் வரப்போவதில்லை .எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இந்த செய்திக்கு விமர்சனங்கள் வந்தாலும் நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் அவரிடம் நிறைய தவறுகள் இருக்கிறது.

ஒரு காலத்தில் அதிமுக என்றால், ஒரு மதிப்பு ,மரியாதை மிக்க ஒரு கட்சியாக மக்களிடம் செல்வாக்கு உள்ள கட்சியாக இருந்தது. அந்த அடிப்படையில் தான், இந்த உண்மையை, மக்களுக்கு இந்த அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கிறேன். மேலும்,இது அக் கட்சியினருக்கும் தெரிந்த உண்மைதான்.

எடப்பாடி பழனிசாமி திரும்பத், திரும்ப அதே தவறை செய்து கொண்டிருக்கிறார். இப்போது, இந்த 25 எம்எல்ஏக்கள் வகித்த பொறுப்புகளை எல்லாம் நீக்கி ,வேறு நபர்களை நியமித்து ,அதிமுக லெட்டர் பேட்டில் வெளியிட்டுள்ளார்.

இது அவர் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை யாரும் அசக்க கூடாது .அதிலிருந்து நான் இறங்கவும் மாட்டேன் என்று கெட்டியாக பிடித்துக் கொண்டு, உட்கார்ந்து இப்படி எல்லாம் ஒரு தவறான செயல்களை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த கட்சி இவரோடு முடிந்து விட வேண்டும் என்று தான், இப்படி எல்லாம் செயல்படுகிறார?இல்லை மேலும் ,இந்த கட்சியை வளர்ந்து மக்களுக்கு எம்ஜிஆர் ,ஜெயலலிதா நினைத்த ஒரு நல்ல சேவையை மக்களுக்கு கொடுத்து வந்ததை இவர் எடுத்து விடுவார் என்று தான் தெரிய வருகிறது.
மேலும்,அதிமுக கட்சியில் ஓரளவுக்கு திமுகவை போல் மனசாட்சி இல்லாதவர்கள் இல்லை நாங்கள் பத்திரிகை நிருபர்கள் ஆக இருந்து, அவர்களுடன் நெருங்கி பழகி இருக்கிறோம் .அதுவும் எங்களுக்கு தெரியும். ஆனால், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய சுயநலத்திற்காக இந்த கட்சியை அழித்துவிட்டார் என்று தான் தோன்றுகிறது.

ஏனென்றால், இந்த 25 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்கலாம் அல்லது அவர்களை கட்சியிலிருந்து நீக்கி தன்னுடைய சர்வாதிகாரத்தை வெளிப்படுத்தலாம் என்று நினைத்தால், எடப்பாடி பழனிசாமியால் ஒரு எம்எல்ஏ கூட ஜெயிக்க முடியாது.
மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்களுடைய கனவு திட்டங்கள் எல்லாம், இந்த 2026 தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள் .பணத்தை கொடுத்து இனி மக்களை விலைக்கு வாங்க முடியாது. அதனால், மக்களுக்கான ஆட்சியை கொடுப்பவர்களுக்கு தான் மக்கள் முன்னேரிமை என்று எழுதி வைத்து விட்டார்கள்.

எனவே,எடப்பாடி பழனிசாமி அதிமுக வை பட்டா போட்டுக் கொண்டு, ஆட்டம் ஆடினால், அது கட்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இதுவரையில் இந்த கட்சிக்கு தூணாக இருந்தவர்கள் எஸ் பி வேலுமணி, சி.வி. சண்முகம், விஜயபாஸ்கர், தங்கமணி, இவர்களையெல்லாம் கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, அதிமுகவை ஒன்றும் இல்லாமல் செய்யப் போகிறாரா?
மேலும், இப்போதே அதிமுகவினர் சோர்வடைந்து போய்விட்டார்கள். இனி எப்படி ஐந்து வருடம் இவர்கள் தாக்கி பிடிப்பார்கள்? ரொம்ப கஷ்டம் தான் இன்னும் ஒரு சில மாதங்களிலே எடப்பாடியின் பதவி வெறிக்கு அக் கட்சியினரே முடிவு கட்டி விடுவார்கள்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியை எம்ஜிஆர் ஆரம்பித்து, ஜெயலலிதாவால் உள்ளே வந்து முதலமைச்சர் நாற்காலியில் சசிகலா தயவால் உட்கார்ந்து கொண்டீர்கள். இது அதிமுகவின் எனக்கு தெரிந்த உண்மைதான்.

ஆனால், பழனிச்சாமிக்கு என்று கூட்டம் வருமா? இது கூட பிஜேபி உங்களுக்கு சப்போர்ட்டுக்கு வரவில்லை என்றால் இந்த சீட்டு கூட வாங்கி இருக்க மாட்டீர்கள். இதைவிட இன்னொரு உண்மையும் சொல்கிறேன். வன்னியர் சமுதாயம் வாக்களிக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அதிமுக 10 லிருந்து 15 சீட்டு தான் வந்திருக்கும்.
திமுகவை ஒட்டுமொத்தமாக தோல்வி அடைய செய்துள்ளது வன்னியர் சமுதாயம். இது பொய்யல்ல, வட தமிழகத்தில் அதிகமான எம்எல்ஏக்கள் வன்னியர் சமுதாயத்தில் இருக்கிறார்கள்.

இதற்கு காரணம்? திமுக வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்ட 10 .5% விஷயத்தில் ஒட்டு மொத்தமாக தூக்கி எறிந்தார்கள். இதிலும், எந்தெந்த வேட்பாளர்கள் இந்த வன்னியர்களுக்கு சரியாக செய்யாமல் இருந்தார்களோ, அவர்களெல்லாம் தோல்வியை தழுவினார்கள் .அது அத்தனையும் திரும்பி, தமிழக வெற்றி கழகத்தின் மீது பார்வை இழந்து விட்டது. இப்போதாவது அரசியல் புரிகிறதா?

மேலும்,இங்கே சி.வி. சண்முகத்தின் பலத்தை தெரியாமல், எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலு மணியை கட்சியிலிருந்து நீக்கினாலும், விரைவில் அதற்கான பின் விளைவை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் சந்திப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
