
பொதுக்கூட்டங்களில் பேசும்போது அரசியல் கட்சியினருக்கு ஒரு சட்டம் பொது மக்களுக்கு ஒரு சட்டம் என்று இல்லை. அரசியல் சார்ந்த விமர்சனங்கள் ,அது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து பேசுவது ,அதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை.
மேலும், உதயநிதி ஸ்டாலின் மேடையில் பேசிய பேச்சில் திமுகவை கைது செய்வதில் தான் முதல்வர் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் என்று பேசிய உதயநிதி, கூட்டத்தில் அவர்களுடைய கட்சியினர் திரிஷா த்ரிஷா என்று கத்துவது, கேட்கிறது. அப்போது உதயநிதி கூட்டத்தில் பேசும் பது,அதற்கு எங்கு தண்ணி வருதோ, இல்லையோ, அங்கு தண்ணி வரணும், நான் காவிரியை சொன்னேன்.
இது சட்டத்தில் நிற்குமா? என்பது சந்தேகம். காரணம் ஒரே வரியில் உதயநிதி நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. நான் காவேரி தண்ணீர் வரவில்லை என்று தான் சொன்னேன். இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். அதற்கு எப்படி நான் பொறுப்பு? அதேபோல் என்னுடைய கட்சியினர் கட்டியதும் என் காதுக்கு சரியாக விழவில்லை. மேலும்,
இங்கே உதயநிதி கைது என்பது திமுக கூட்டத்தைக் காட்டி அரசியல் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், பொதுக்கூட்டத்தில் எப்படி பேச வேண்டும் எது அரசியல் நாகரீகம், அரசியல் கலாச்சாரம் என்ன இதை எல்லாம் முறையாக பேசுவது தான்
அரசியல்வாதிக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ள மரியாதை. அந்த மரியாதையை இவர்களை கெடுத்துக் கொள்கிறார்கள் என்றால், காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டியது நியாயமானது தான். ஆனால், இந்த வழக்கு நிக்குமா?
