ஒரு சமூக நலன் பத்திரிக்கையாளனின் கேள்விக்கு ஒரு பதில் கூட தமிழக செய்தித் துறையால் கொடுக்க தகுதி இல்லையா? இல்லை உண்மை சொல்ல பயமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

பத்திரிக்கை என்பது எதற்கு ? யாருக்காக பத்திரிக்கை ? – செய்தித்துறைக்கு அர்த்தம் தெரியுமா? தெரியாதா? செய்தித் துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கேட்டால், ஒரு கேள்விக்கு கூட இதுவரை சரியான பதிலை எனக்கு கொடுக்கவில்லை.

சுமார் 60 கேள்விகளுக்கு மேல் கேட்கப்பட்டது. அதில் ஒரு கேள்விக்கு கூட செய்தித் துறையால் பதில் அளிக்க முடியவில்லை. என்ன பதில் கொடுக்கிறார்கள்? என்றால் மனுதாரர் பொது தகவல் அலுவலர் உடைய கருத்துக்களையோ, கேட்ட கேள்விக்கான பதிலையோ அல்லது விளக்கம் மற்றும் தெளிவுரை பெற தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் வழியில்லை .

அடுத்த பதில் என்ன கொடுக்கிறார்கள்? என்றால் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 விதி 2 (f) – ன் கீழ் பொது தகவல் அலுவலரின் கேள்வி – தெளிவுரை – வியூகம் – காரணம் – விளக்கம் போன்ற தகவல்கள் கூற ,வழி வகையில்லை என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும்,தமிழக அரசு செய்தித் துறையின் தகுதி இவ்வளவு தானா? ஒரு சாதாரண பத்திரிக்கையாளனின் கேள்விக்கு இவ்வளவு பெரிய ஒரு அரசுத் துறையின் அதிகாரம் மிக்க செய்தி துறை ஒரு கேள்விக்கு கூட பதில் அளிக்க அதற்கு தகுதி இல்லை.

அப்படி என்றால், எந்த அளவுக்கு இந்த செய்தி துறை பத்திரிக்கை என்ற பொதுநலத்திலிருந்து, அதன் சுயநலத்திற்காக செயல்பட்டு வருகிறது என்பது தெளிவாக சொல்லப்பட்டுள்ள உண்மை. மேலும்,அரசு அங்கீகார அடையாள அட்டை, அரசு அடையாள அட்டை இது ரெண்டுமே வெவ்வேறு யாராவது கொடுக்கிறார்களா? இரண்டுமே தமிழக அரசு தான் கொடுக்கிறது . ஆனால், அரசு அங்கீகார அட்டைக்கும், அரசு அடையாள அட்டைக்கும் என்ன வித்தியாசம்? ஒருவேளை அக்கடேஷன் கார்டு, பிரஸ் பாஸ் என்று வேறுபடுத்தி இருப்பார்களா? இந்த கார்டு, இத்துடன் இலவச பயணப் பேருந்து அடையாள அட்டை இந்த மூன்றில் ஏதாவது ஒன்று இருந்தால் பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர தகுதி உள்ளவர்கள்.

சரி அப்படியே வைத்துக் கொள்வோம். இது எதன் அடிப்படையில் கொடுக்கிறீர்கள்? தகுதி அடிப்படையிலா? இல்லை சர்குலேஷன் அடிப்படையிலா? எதன் அடிப்படையில் கொடுக்கிறீர்கள் என்பதை தமிழக அரசின் செய்தித்துறை இதற்கு விளக்கம் அளிக்க முடியுமா ?மேலும்,

திமுக அரசு பத்திரிகையாளர்கள் விஷயத்தில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள ஒரு வித்தியாசத்தை தான் பத்திரிக்கை துறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் மேடைகளில் மைக்கைகளில் பேசுவது ஏழைக்கான ஆட்சி என்று கட்சிக்காரர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஏழை பத்திரிகையாளர்களுக்கு நீங்கள் என்ன உங்கள் ஆட்சியில் செய்திருக்கிறீர்கள்? இந்த நல வாரியம் திட்டமிட்டு அரசு அங்கீகார அடையாள அட்டை மட்டுமே பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர தகுதி என்றால்! உங்களுடைய அங்கீகாரம் சர்குலேஷன் அடிப்படையில் இல்லை .

பத்திரிக்கையாளர்களின் தகுதி? எதன் அடிப்படையில்? நீங்கள் இதை நிர்ணயிக்கிறீர்கள்? இந்த கேள்விக்கு அரசு செய்தி துறையால் பதில் சொல்ல முடியவில்லை.

மேலும்,தகுதியின் அடிப்படையில் நீங்கள் அங்கீகரிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஆனால், அரசு அடையாள அட்டை என்பது உங்களுடைய அங்கீகாரம் அரசியல் கட்சி சார்ந்ததா? வியாபார நலன் சார்ந்ததா? சமூக நலன் சார்ந்ததா? இதையெல்லாம் பார்த்து ஆய்வுக்கு உட்படுத்தி அரசு அடையாள அட்டை வழங்கி இருந்தால், செய்தித் துறையை பாராட்டலாம்.

ஆனால் ,திமுக கட்சி பத்திரிக்கை நடத்துபவர்களுக்கு எல்லாம் அரசு அங்கீகார அடையாள அட்டை கொடுத்து விட்டு சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஊழலுக்கு எதிரான போராடுகிற பத்திரிகைகளுக்கு அங்கீகார அடையாள அட்டை சர்குலேஷன் சட்டத்தை வைத்து ஏமாற்றுவது பத்திரிக்கை துறையை ஏமாற்றும் வேலை. இந்த ஏமாற்று வேலைக்கு செய்தித்துறை அதிகாரிகள்

நீதிமன்றத்தில் இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. ஏனென்றால் ,பத்திரிக்கை துறை சமூக நலனுக்கும் ,தேச நலனுக்கும் ,பத்திரிகை சுதந்திரத்தை சட்டமாக இயற்றப்பட்டது.

இங்கே சர்குலேஷன் என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்து தினசரி, வாரம் ,மாதம் இந்த பிரிவினை உள்ளே புகுத்தி அதற்குள்ளே சர்குலேஷனை வைத்து இதற்கு தான் சலுகை, விளம்பரம் என்றால் !இது பணத்தின் அடிப்படையில் கொடுக்கப்படும் அங்கீகாரம். அதாவது கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அங்கீகாரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

பணம் ஒருவரிடம் இருந்தால் எத்தனை லட்சம் பிரதிகள் வேண்டுமானாலும், தினசரி பத்திரிகைகளும் அடிக்கலாம், வார பத்திரிகைகளையும் அடிக்கலாம், மாத பத்திரிகையிலும் அடிக்கலாம். ஆனால் தகுதியான செய்தியை அடிக்க முடியுமா ?அது எப்படி அடிக்க முடியும்?அதை பணத்தால் அடிக்க முடியாது .ஒரு தகுதியான பத்திரிகையாளனால் மட்டும் தான் கொடுக்க முடியும் . இப்போதாவது செய்தி துறைக்கு இந்த உண்மை புரியுமா? மேலும்,

தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்படும் அங்கீகாரம் எப்படி இருக்க வேண்டும் என்றால் !ஒரு பத்திரிகையின் செய்தி, அதன் தரம் ,சமூக நலன் ,தேச நலன் ,ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய பத்திரிகைகள், இது தான் தகுதியான பத்திரிகை. இதற்கு தான் செய்தித் துறை முதலில் முக்கிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

ஆனால் ,இவை அத்தனைக்கும் எதிராக செய்தித் துறையில் கொள்கையின் அடிப்படையில், சர்குலேஷன் அடிப்படையில், தினசரி வாரம் மாதம் இதன் அடிப்படையில்! அரசியல் கட்சிக்கும் ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கும் இன்றைய செய்தி துறை சலுகை விளம்பரங்களை கொடுத்து,பத்திரிக்கை சுதந்திரத்தை அரசியல் ஆக்கிவிட்டது.

அந்த அரசியலுக்குள் எந்தெந்த பத்திரிகை தொலைக்காட்சிகள் ஆட்சியாளர்களின் அரசியல் கட்சி சார்ந்த பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், வியாபாரம் சார்ந்த பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்து , வருவதன் பின் விளைவு தான் அரசியல் என்பது சுயநலமும், ஊழலும் அதிகரித்துள்ளது.

பொதுநலனை விட ,அரசியலில் குடும்ப அரசியல், சுயநல அரசியல் ஆக்கிரமித்துள்ளது ‌.மேலும்,

உண்மைகள் மக்களிடம் மறைக்கப்படுகிறது. பேருக்கு தான் பத்திரிக்கை சுதந்திரமாக இருக்கிறதே ஒழிய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில், அதிகாரம் மிக்கவர்களின் கட்டுப்பாட்டில் ,இந்த சலுகை விளம்பரங்களை வைத்துக்கொண்டு பத்திரிக்கை துறையில் சமூக நலன் பத்திரிகைகளுக்கு எதிராக செய்தித்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றிய உண்மை செய்திகளை

பல செய்திகள் இந்த செய்தி துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,

பத்திரிகை வியாபாரம் நடத்தும் செய்தி நிறுவனங்களுக்கு தான் முக்கியத்துவம் அளிப்பார்களா?

அதற்குத்தான் இவர்கள் அங்கீகாரம் கொடுப்பார்களா? செய்தியின் தரம் ,அதன் மதிப்பீடு ,எதுவுமே தெரியாத செய்தி துறை ,அதிகாரிகளுக்கு அந்த சீட்டில் உட்கார்ந்து வேலை பார்க்க கூட தகுதி இருக்கிறதா? தவிர,

ஒரு சாதாரண பத்திரிகையாளனின் கேள்விக்கு ஐஏஎஸ் அதிகாரியான வைத்தியநாதன் பதில் அளிக்க முடியவில்லை என்பது பத்திரிக்கை துறை எந்த அளவுக்கு வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது? என்பதை பத்திரிகை சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,

ஆர் .டி.ஐ.யில் கேட்கப்பட்ட கேள்வி பத்திரிகை சம்பந்தப்பட்ட கேள்வி?இது என்ன ராணுவ ரகசியமா? ராணுவ ரகசியம் தான் சொல்லக்கூடாது. அல்லது ஒரு தனிப்பட்ட ஒருவரின் சொந்த வாழ்க்கை பற்றி கேட்டால் கூட பரவாயில்லை .அதைக்கூட சொல்ல முடியாது என்று சொல்லலாம். ஆனால், பத்திரிக்கை துறையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தமிழ் நாட்டில் எத்தனை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் எத்தனை கோடி செலவிடப்படுகிறது என்ற கேள்வி ?தானே கேட்டோம் .

இதற்கு பதிலளிக்க வழி இல்லை. இது போன்ற ஒரு தவறான தகவல்களை கொடுப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு செய்தித்துறை அதிகாரிகள் கொடுத்துள்ளது எதிரான ஒன்று. இது,அந்த சட்டத்தை அவமதிக்கும் வேலை.மேலும், அரசியல் தலையீடு இருக்கும் வரை சமூக நலன் பத்திரிக்கைகளுக்கு, நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்காது.

இதை இந்த சமூக நலன் பத்திரிக்கை சமுதாயம் எப்போது புரிந்து கொள்ளப் போகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *