
திமுக அரசு !சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் கால தாமதம் செய்தால், அதற்கு உயர் நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் வரை சென்று வழங்கப்பட்ட தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அமர்வு அதாவது மூன்று மாதத்திற்குள் காலக்கெடு விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து பல செய்தியும் வெளியிடப்பட்டது. மேலும்,கால நிர்ணயம் ஆளுநருக்கோ, ஜனாதிபதிக்கோ விதிக்க முடியாது. அதே போல் தான் நீதிமன்றங்களுக்கும், காலக்கெடு விதிக்க முடியாது. அதாவது மாதம் 6 மாதத்திற்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று கால கெடு விதிக்க முடியாது.மேலும்,

திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வு மூன்று மாதத்திற்குள் கால கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் ஜனாதிபதி மூர்மூ உச்சநீதிமன்றத்தில் 14 கேள்விகளை கேட்டார் .அந்த கேள்வியின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையை எதிர்கொண்ட திமுக அரசு வழக்கறிஞர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது மக்களுக்கு பயனளிக்காமல் போய்விட்டால் ,மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்று வாதாடினார்கள். இது ஒரு மொட்டையான கருத்து.
மேலும்,எந்த ஒரு தீர்ப்பும் வழக்கின் விசாரணையை பொறுத்து தான் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தில் கவர்னரும் ,ஜனாதிபதியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்க முடியாது .

ஏனென்றால் ஒரு சில மசோதாக்கள் அரசியல் சாசன விதிகளுக்கு முரண்பட்டதாக இருக்கிறது. ஒரு சில மசோதாக்கள் இவர்களுடைய ஆட்சி அதிகாரத்தின் உச்சமாக புகழ் பரப்பும் வேலைகளை அதில் கொண்டு வருகிறார்கள். தவிர, மக்களுக்கான பயன்கள் என்ன ?என்பதை அடிப்படையாக கொண்டு தான் ஆளுநர்கள் அந்தந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பார்கள். இதில் ஒவ்வொரு மசோதாக்களும் ,ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலையில் ,மக்களுக்கு எதிரான நிலையில் இருக்கும்போது, ஆளுநர் எப்படி அதற்கு ஒப்புதல் வழங்குவார்?
அப்படி மூன்று மாதத்திற்குள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி விட்டால், அதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அல்லது பின் விளைவு தவறான ஒரு முடிவாக இருந்தால் ,அப்போது ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்ததற்கு யார் பொறுப்பேற்பது? இப்படி பல சட்ட சிக்கல்கள் அதில் உள்ளே வருகிறது.
இதை எல்லாம் ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம் ,ஆளுநரின் மசோதாக்களுக்கு இனி கால நிர்ணயம் செய்ய முடியாது என்பதை உறுதி செய்து விட்டது.
இதனால் திமுக அரசுக்கு பல கோடி மக்களின் வரிப்பணம் நீதிமன்றத்தில் செலவு செய்து வீணடித்தது தான் மிச்சம். இது திமுகவின் தோல்வி.