கடந்த திமுகவின் ஆட்சி ! மிக மோசமான ஆட்சி நடத்தி விட்டு,இனி திமுக சொல்லும் பொய்களை மக்கள் நம்புவார்களா ? – மக்கள் அதிகாரம் .

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கடந்த 2026 தேர்தலில் மக்களுக்கு ஏற்பட்ட திமுக ஆட்சியின் வெறுப்பு அரசியலில்! திமுக, அதிமுகவுக்கு மாற்றாக புதியதாக வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு மக்கள் வாக்களித்து விட்டார்கள். இது மக்கள் அளித்த தீர்ப்பு ,மாற்றத்திற்கான அரசியல்.

மேலும், விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்காததால் ,திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை வைத்து ஆட்சி அமைத்து விட்டார்.

இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகள் 100% அவரால் நிறைவேற்ற முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி குறி தான். காரணம் ,தமிழ்நாட்டின் நிதிநிலை! மோசமான நிதி நிலை’ என்பதை வெள்ளை அறிக்கை மூலம் விளக்கமாக மக்களுக்கு தெரிவித்து விட்டார்.

தவிர, இவர்கள் கூறும் போலி அரசியலில் , தேர்தல் வாக்குறுதிகள் என்ன? என்று காரணம் காட்டி ,எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு தொடர்ந்து வைத்துக்கொண்டே இருப்பார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் முதல்வர் ஜோசப் விஜய்.

மேலும், தற்போதைய ஆட்சியில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கும், பதில் சொல்லி ஆக வேண்டும். அதே சமயத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளையும், செய்தாக வேண்டும்.

இதைவிட தற்போது வந்துள்ள கூட்டணி அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்புகள், தங்களுடைய சொந்தக் கட்சியில் உள்ள அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்புகள் ,இது எல்லாம் செய்யக்கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை.

மேலும்,ஒரு நேர்மையான அரசாக செயல்பட்டால் ,இங்கே கஜானா காலியாக உள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே சுமார் 30 சதவீதத்திற்கு வருவாயில் சென்று விடுகிறது.

இப்படி பட்ட நிலையில், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும். அரசின் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும் ,கல்வி துறையை சீரமைக்க வேண்டும். நேற்று கூட கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகன் தனியார் பள்ளிகளுக்கு உரிய அங்கீகாரத்தில் யாரும் அரசியல் தலையீடு இன்றி செயல்பட வேண்டும்.

யாருக்கும் ஒரு ரூபாய் கமிஷன் கொடுக்க தேவையில்லை. இடைத்தரகர்கள் இல்லாமல் உங்களுடைய அங்கீகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம் என்று வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இது ஒரு புறம் ஒரு நல்ல முடிவு என்று சொல்ல முடியாது.

காரணம், தனியார் பள்ளிகளை ஊக்கிவிப்தற்கு பதிலாக ,அரசு பள்ளிகளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையான கல்வியும் ,தரத்தையும் மேம்படுத்துதல் மிகவும் அவசியமானது. அந்த தரத்தை மேம்படுத்துவதை திமுக ஆட்சியிலும், ,அதிமுக ஆட்சியிலும் ,மிக கேவலமாக கல்வி துறையை வைத்திருந்திருக்கிறார்கள்?

எனவே திமுக ,அதிமுக ஆட்சியில்,கல்வியறிவு இல்லாத முட்டாளாக மக்களை வைத்திருந்தால் தான், மக்கள் நாம் சொல்வதைக் கேட்பார்கள். மேலும், மதுவுக்கு அடிமையாக வைத்திருந்தால்,தான் நம்மை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள். இப்படி போதை கலாச்சாரம் உருவாக்கி, தொழில் வளர்ச்சி, வருமானம் எல்லாமே சீரழித்து விட்டார்கள். டாஸ்மாக் வருமானத்தில் அரசாங்கம் நடத்துகிறோம் என்றால், அது மக்களுக்கான ஆட்சியாக இருக்க முடியாது. அதனால் தான்,

கடந்த 15 ஆண்டுகளாக படித்த பட்டதாரி ஆசிரியர்கள் ,முதுகலை பட்டம் பயின்றவர்கள், முனைவர் பட்டம் பயின்றவர்கள், எல்லோரையுமே தூக்கி குப்பையில் போடும் அளவிற்கு இவர்கள் ஆட்சியில் கல்வித் துறையை சீரழித்துள்ளது. அவர்கள் படிப்புக்கு தகுந்தவாறு அரசு பள்ளிகளிலும், அரசு கல்லூரிகளிலும், அவர்களுக்கு நிரந்தரமான ஊதியத்தை வழங்காமல், நிரந்தரமாக பணி நியமனம் செய்யாமல் ,வெறும் 25000 க்கு அவர்களை கூலி வேலை செய்வது போல், ஆக்கிவிட்டார்கள்.

மேலும்,இவர்களுக்கெல்லாம் கல்வியின் தரம் என்ன ?தகுதி என்ன? என்று தெரியாதவர்கள். பேச சொன்னால், எல்லாம் தெரிந்த மேதைகள் மாதிரி பேசிவிட்டு ,இந்த முட்டாளாக்கும் வேலைகளை எல்லாம் ,முட்டாள்கள் இடம் வைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் !அதிகாரம் கையில் கொடுத்து விட்டதால்,படித்தவர்களிடமும் ,பேசிக் கொண்டிருப்பார்கள்.அதற்கு இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், இவர்களுடைய அராஜகத்திற்கும், போலி அரசியலுக்கும், மக்களிடம் போலி பத்திரிக்கை பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் .

அதுதான், கார்ப்பரேட் போலி பத்திரிக்கை பிம்பம். அது என்ன என்றால்! இவர்கள் 500 கோடி ,ஆயிரம் கோடியில் பத்திரிக்கை ,தொலைக்காட்சி ஆரம்பித்து விட்டு, நான் பெரிய பத்திரிக்கை ,நான் பெரிய தொலைக்காட்சி, இது யாரிடம் சொல்ல முடியும்?

பத்திரிக்கை துறையை பற்றி தெரியாதவர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள் .பத்திரிகை என்றால் என்ன? என்று தெரியாத மக்களிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். உண்மையை சொல்வதற்கு தான் பத்திரிக்கை, பொய்யை சொல்வதற்கு பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தேவை இல்லை.

மேலும், திமுக ஆட்சியாளர்களின் அராஜகத்தை நியாயப்படுத்துவதற்கும், , அநியாயத்துக்கு முட்டுக் கொடுப்பதற்கும் ,பத்திரிக்கை, ,தொலைக்காட்சிகள் என்றால்! நீங்கள் எத்தனை கோடியில், ஆரம்பித்தாலும், அது ஒரு குப்பை.

அதேபோல்,இன்றும், திமுகவினர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாட்டின் வளர்ச்சி, கல்வி துறையை சார்ந்தது. அப்படிப்பட்ட அந்த கல்வித்துறையை தனியார் பள்ளிகள் இடம், தனியார் கல்லூரிகளிடம், வியாபாரம் ஆக்கி விட்டார்கள். இது ஏன் என்றால்? இந்த கொள்ளையடிக்கும் கூட்டமே, தனியார் பள்ளிகள் முதல் தனியார் கல்லுரி கல்வி நிறுவனங்கள் வரை, இவர்கள் ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

இங்குதான் இவர்களுடைய அரசியல் கருப்பு பணத்தை, வெள்ளையாக்கி கொண்டிருக்கிறார்கள். இது தவிர, மருத்துவமனைகள் கட்டி ,அதில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகக் கூடி இந்தக் கொள்ளை அடிக்கும் கும்பல் தமிழ்நாட்டை கொள்ளை அடித்து 13 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாட்டை கடனில் மூழ் கடித்து இருக்கிறார்கள் . அதுதான் திமுக அரசின் மிகப் பெரிய சாதனை.

இந்த சாதனையை செய்து விட்டு ,எங்களை விட சிறப்பான ஆட்சி யாராலும் கொடுக்க முடியாது என்று வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,படித்த இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு எதிர்பார்த்து, இவர்களுடைய ஆட்சியில் வெந்து நொந்து நூலாகி விட்டார்கள். 25 ஆயிரம் ரூபாய்க்கு ஒவ்வொரு மாதமும் வேலை செய்துவிட்டு ,வேதனையுடன் திரும்பும் இவர்கள் ,எத்தனையோ போராட்டங்கள் நடத்தி ,பயனளிக்கவில்லை. இப்போது இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது.நீதிமன்றம் உடனடியாக அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டுள்ளது.மேலும்,

நீதிமன்றம் உடனடியாக இவர்களுக்கு வேலைவாய்ப்பை அளியுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. ஒரு பக்கம் தொழிற்கல்வி சார்ந்த ஆசிரியர்களின் ஒரு போராட்டம், மற்றொரு பக்கம் கலைக் கல்லூரி சார்ந்த ஆசிரியர்களின் போராட்டம், இது தவிர, பல்வேறு துறைகளை சார்ந்த அரசின் காலி பணி இடங்கள் இருக்கிறது.

இந்த வேலை வாய்ப்புக்களை மக்களுக்கு உருவாக்காமல், ஐந்து ஆண்டுகால ஆட்சியை நடத்தி இருப்பது, மக்களை பற்றி கவலைப்படாமல், இவர்கள் சுயநலத்திற்காக, ஊழல் ஆட்சியை நடத்தி விட்டார்கள். அதிலும் மிக மோசமான அரசியல், ஆட்சி ஸ்டாலினால் தான் ,தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி ஆட்சி மோசமானது என்றால், மிக, மிக மோசமானது ஸ்டாலின் ஆட்சி. இப்படிப்பட்ட இந்த பத்தாண்டு காலம், தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு பொள்ளாத காலம் என்று சொல்ல வேண்டும் .

அதனால் ,தான் மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் அரசு! இதையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறது? என்பதுதான் மிகப் பெரிய அரசியல் சவால்கள்.

மேலும்,இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமாவளவன் தங்களுக்கு சமூக நலத்துறை வேண்டாம், வேறு நல்ல பணம் புழங்கக்கூடிய துறை வேண்டும் என்று கேட்கிறாராம். எதற்கு? வருமானத்திற்காகவா ? இங்கே இவர்களே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், செய்து கொண்டிருக்கும் போது, திருமாவளவன் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தால், அது சரியாக இருக்குமா?

மேலும், மக்களின் எதிர்பார்ப்புகளை செய்யாமல், தங்களின் எதிர்பார்ப்புகளை செய்து கொள்ள இவர்களுக்கு வேறு துறை வேண்டுமா? தங்கள் கட்சியில் இருக்கக்கூடிய தவெக்காவினரும், தங்களுக்கு மந்திரி பதவி இல்லை, மாவட்ட செயலாளர் இல்லை, என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்களாம் .எனவே, இதையெல்லாம் ஜோசப் விஜய் எப்படி சரி செய்யப் போகிறார்? என்பதுதான் ,தற்போதைய மிகப் பெரிய அரசியல் சவால்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *