காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட (CAA) சட்டம் அது நடைமுறைக்கு கொண்டு வந்தது பிஜேபி. இச்சட்டம் இந்தியாவிற்கு தேவையா? தேவையற்றதா?

அரசியல் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சி ஏ ஏ இந்தியாவிற்கு அவசியமான சட்டம். இது பிஜேபி கொண்டு வந்ததல்ல, ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டம்.அது நடைமுறைக்கு கொண்டு வந்தது பிஜேபி. ஆனால், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட்டு சேர்ந்து ,அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து வருகிறார்கள் .

இந்தியாவில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது கொண்டு வந்த ஒரு சட்டம், அதே சட்டம் எதிர்க்கட்சியாக வரும்போது ,அந்த சட்டத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்? மேலும் ,ஸ்டாலின் இது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சட்டம். நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் சட்டம் .என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி இவர்களுடைய அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 நாட்டு மக்களுக்கு எது உண்மை? எது பொய் ?என்பதை சொல்லக்கூடியது ஊடகங்கள் தான். ஆனால், இன்று ஊடகங்கள் அதற்கு தகுதியான ஊடகங்கள் இல்லை. ஒரு சில ஊடகங்கள் தவிர, வியாபார நோக்கமாகவும், அரசியல் கட்சி சார்ந்த நோக்கமாகவும் ,இவர்கள் செய்திகள் வெளியிட்டு வருவதால், பொதுமக்களுக்கு இந்த உண்மைகள் புரியாமல் குழப்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை தொடர்ந்து இந்த ஊடகங்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் என்று இப்போது கூட பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது .

மேலும் ,இச்சட்டம் ,(CAA)அரசியல் கட்சிகள் இதை வைத்து அரசியல் செய்வதற்கு கொண்டு வந்த சட்டம் அல்ல. மக்களின் குடியுரிமையை பாதுகாக்க கொண்டு வந்த சட்டம். இந்த சட்டத்தை எதிர்ப்பது நாட்டு மக்களின் நலனுக்கு, இந்த தேசத்தின் நலனுக்கு எதிரான ஒன்று . மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் .

இந்த நாட்டு மக்களுக்கே இன்னும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நிலையைப் பற்றி சிந்திக்காமல் ,அரசியல் கட்சிகள் அரசியல் செய்து பயனில்லை. இங்கே வேறு நாட்டில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தால்! இங்கே இருப்பவர்கள் எங்கே போவார்கள்? இவர்களுடைய வாழ்வாதாரம் சரி செய்ய முடியாத இந்த அரசியல் கட்சிகள், இதைப்பற்றி பேசக்கூட தகுதி இல்லை.

 மேலும், இங்கே பிரிவினைவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மதத்தினருக்கும் ,அனைத்து ஜாதியினருக்கும் கொடுக்கப்பட்ட உரிய அங்கீகாரம் தான் குடியுரிமை சட்டத்தின் அங்கீகாரம்(CAA) என்பதை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 இதில் எந்த அரசியல் கட்சி உள்நோக்கமும் இன்றி இந்த தேச நலன் அக்கறையுடன் இச்செய்தியை மக்கள் அதிகாரம் பத்திரிக்கை வெளியிடும் உண்மை.

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *