
தமிழ்நாட்டின் அரசியலை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். ஒன்று கௌரவத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள். இன்னொன்று பணத்திற்காக அரசியலுக்கு வந்தவர்கள்.

19 65க்கு முன் வந்த அரசியல்வாதிகள், கௌரவத்திற்காக வந்தவர்கள். அவர்கள் அரசியலுக்கு வந்து சொத்து ,பணமும் சேர்க்க வந்தவர்கள் அல்ல .
அவர்கள் பேருக்காக பெருமைக்காக வாழ்ந்தவர்கள். அவர்களுக்கு மக்களை ஏமாற்றத் தெரியாது. ஆனால்,1965 க்கு பிறகு அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பணத்தை எப்படி அரசியலில் சம்பாதிப்பது? என்று ஆரம்பித்து ,இப்போது பணத்தை எப்படி அரசியலில் கொள்ளை அடிப்பது ?இதுதான் தற்போதைய அரசியல்.

இந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கும் துணையாக இருந்தவர்கள் மக்கள் தான். இவர்களில் தற்போது படிப்பறிவு பெற்றவர்கள் ,பட்டம் பெற்றவர்கள் .இருப்பினும் இவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிப்பார்கள்.

ஆனால், படிப்பறிவு இல்லாத மக்கள், அதாவது ,கைநாட்டு பேர்வழிகள் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்த மக்கள் . அவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்தார்கள்.
அவர்கள் வாழ்ந்த காலத்தில் மக்கள் ஓட்டுக்காக பணம் வாங்கியது இல்லை.அந்த மக்கள் வறுமையில் வாழ்ந்தாலும் ,நிம்மதி ,சந்தோஷம், ஒற்றுமை, மதிப்பு,மரியாதை, கௌரவத்துடன் வாழ்ந்தார்கள்.

இப்போது அது எவ்வளவு பணம் ?என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதையும் விலை கொடுத்து வாங்கலாம் என்று அது முடியுமா? இப்போது பணம் இருந்தால் தான் கவுரவம் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பணம் இல்லாதவர்கள் அரசியலில் மதிக்கப்படுவதில்லை. காரில் போய் இறங்கினால் தான் அரசியல்வாதிகளுக்கு மதிப்பே என்று உதவாதவன் கூட ஒரு காரை வாங்கிக் கொண்டு அரசியலுக்கு வருகிறான். இது அரசியல் போலிகளின் உச்சகட்டம்.

இந்தக் அரசியல் போலிகளிடம் ஏமாறும் மக்கள், பணத்தை கொடுத்து ஏமாறுவதும், வேலை வாங்கிக் கொடுப்பதாக சொல்லி ஏமாறுவதும், வீடு கட்டி தருவதாக சொல்லி ஏமாறுவதும், இப்படி பல வழிகளில் பேசி ஏமாற்றுவது தான் இன்றைய போலிகளின் அரசியல்.மேலும்,
போலிகளுக்கு வேஷம் போடத் தெரியும். திறமையாக பேசத் தெரியும். ஆனால் ,உண்மைக்கு உத்தமனாக பேசி போலியாக நடிக்க தெரியாது.

தவிர, அந்த காலத்தில் இருந்த அரசியல்வாதிகள் கழுத்தில் கட்சி துண்டுகளையும், வேஷ்டிகளையும் கட்டிக் கொண்டு ஊரை ஏமாற்றத் தெரியாது. ஊரில் நல்லவர்களாக வேஷம் போடத் தெரியாது. கட்சியை வைத்து கொள்ளையடிக்க தெரியாது. மக்களுக்கும் அந்த காலத்தில் நடிக்க தெரியாது. குறிப்பாக சொல்லப் போனால் இப்போது இருக்கின்ற போலியான பந்தா அரசியல் கிடையாது.

மேலும் , தற்போது உள்ள மக்கள் ,நல்லவர்கள் ,கெட்டவர்கள் யார் வந்தாலும், பணத்தை கொடுத்தால் அவர்களுக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் .அதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற விதிவிலக்கு இல்லை.ஆனால்,

அப்போது வாழ்ந்த மக்கள் பணத்தை மட்டுமே ,பெரிதாக நம்பி வாழவில்லை. அவர்கள் உழைப்பை மட்டுமே நம்பி வாழ்ந்தார்கள். ஆனால், இப்போது ஏமாற்றுவது எப்படி என்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நேரத்தில் மக்கள் ஏமாந்தார்கள். அது எல்லா நேரத்திலும் இந்த அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கின்ற இளைய தலைமுறைகளிடம் அது நடக்காது. மேலும்,
அப்போது அரசியல்வாதிகள் மக்களுக்கு என்ன நன்மை செய்தாலும், ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டார்கள். ஆனால், இப்போது ஒரு ரூபாய் கூட வாங்காமல் செய்ய மாட்டார்கள். இதுதான் தமிழ்நாட்டின் அரசியல். அதுமட்டுமல்ல,

இப்போது நடக்கின்ற கூட்டணி கட்சிகளின் பேரம் அப்போது இல்லை. எந்த கட்சிகளுடன் கூட்டணி சென்றால் எத்தனை கோடி வாங்கலாம் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆனால்,இன்று ஒட்டு மொத்த அரசியலே எதிர்பார்ப்பாகி விட்டது.

அதனால்தான் இன்று இந்த வியாபார பத்திரிகை தொலைக்காட்சி, நிறுவனங்கள், எல்லாவற்றையும் எதிர்பார்ப்புடன் தான் மக்களுக்கு செய்திகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உண்மையைப் புரிந்து கொண்டு மாற்றத்தை நோக்கினால் உங்கள் வாழ்க்கை மாறும்.

இல்லையென்றால் மக்களுக்கு அரசியல் என்பது மிகப் பெரிய போராட்டமாக தொடரும் . இந்தப் போராட்டங்களை கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் வியாபாரம் ஆக்கிக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது இந்த அரசியல் உங்களுக்கு புரிகிறதா? எதனால், மக்களின் வாழ்க்கை போராட்டம் ? சிந்தியுங்கள்.
ஆசிரியர்.