ஜூன் 17, 2025 • Makkal Adhikaram

களம்பாக்கம் காலனியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞனும், தேனி மாவட்டத்தின் நாயுடு சமூகத்தை சேர்ந்த விஜய ஸ்ரீயும், இன்ஸ்டாகிராமில் காதலிக்கிறார்கள். இந்த காதல் தொடர்ந்து பல நாட்கள் பேசி ,பழகி வருகிறார்கள். இது எப்படி இருக்க,
விஜயஸ்ரீ அப்பாவும், அந்தப் பெண்ணின் மாமாவும், அது என்ன சம்பவத்திற்காக இருவரும் ஜெயிலுக்கு போனார்கள்? என்ற விவரம் தெரியவில்லை .இரண்டு மாதமாக ஜெயிலில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் விஜயஸ்ரீ வீட்டை விட்டு விட்டு வெளியேறி களம்பாக்கம் தனுஷும் ,விஜயஸ்ரீயும் இருவரும் சேர்ந்து பதிவு திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த பதிவு திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த விஜய்ஸ்ரீயினுடைய அப்பாவும்,மாமாவும் ஜெயிலிலிருந்து வெளிவருகிறார்கள்.

வெளிவந்தவுடன் மகளை எப்படியாவது அந்தப் பையனிடம் இருந்து பிரித்துக் கொண்டு வந்து விட வேண்டும் இதுதான் விஜய்ஸ்ரீ அப்பாவினுடைய நோக்கம். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால்! விஜயஸ்ரீ சுமார் 650 கோடிக்கு சொந்தக்காரி. பையன் ஒன்னும் இல்லாதவன். பையன் கிடைத்திருந்தால் கதையே வேறு, மாதிரி ஆகி இருக்கும். நல்லவேளை அவன் தப்பித்துக் கொண்டான். இப்படி இருக்கின்ற சூழ்நிலையில்!
விஜயஸ்ரீ னுடைய அப்பா எப்படியாவது தன்னுடைய மகளை எவ்வளவு பணம் செலவானாலும், அந்த பையனிடம் இருந்து தூக்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அப்போதுதான் மகேஸ்வரியின் தொடர்பு இவருக்கு கிடைத்துள்ளது. மகேஸ்வரிக்கு ஏடிஜிபி ஜெயராமன் பழக்கமானவர். அதனால் மகேஸ்வரி விஷயத்தை ஏடி ஏடிஜிபி ஜெயராமன் இடம் சொல்ல, அவர் பூவை. ஜெகன் மூர்த்தியை தொடர்பு கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் திட்டம் போட்டு, இவருடைய வண்டியை அதில் ஒரு எஸ். ஐ போட்டு, கூட புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த மணவூர் மாகா அவருடைய கூட்டாளிகளை சேர்த்து வண்டியில் அனுப்பி இருக்கிறார்.
இந்த வண்டி களம்பாக்கம் தனுஷின் வீட்டிற்கு சென்றுள்ளது. தனுஷ்சும், விஜய ஸ்ரீயும் வீட்டில் இல்லை. அந்த வீட்டில் தனுஷ்னுடைய தம்பியும், அம்மாவும் இருந்திருக்கிறார்கள். உடனே இவர்கள் அவனுடைய தம்பியை வண்டியில் ஏற்றுக் கொண்டு, தனுசை கூட்டி வந்து எங்களிடம் ஒப்படைத்து விட்டு, இந்த பையனை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள். தனுஷின் அம்மாவிற்கு வண்டி போலீஸ் வண்டியாக இருந்தாலும், இதில் வந்தவர்கள் அதிகம் பக்கத்து ஊரை சேர்த்த மகா ஆட்களாக இருக்கவே அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
உடனே 100க்கு போன் செய்திருக்கிறார்கள். போலீஸ் வந்துவிட்டது. போலீஸிடம் உண்மையை சொல்லி இருக்கிறார்கள். இந்த ஆள் கடத்தல் விஷயம் வடக்கு மண்டல ஐஜி அசரா கார்க் அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனே அவர் கடுமையான நடவடிக்கை எடுக்க என்னென்ன வேலைகளை செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்துள்ளார்.

இதில் ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரியவந்துள்ளதால் ,இருவருடைய ஃபோன்கள் டேக் செய்யப்பட்டு ,விஷயத்தை வடக்கு மண்டல ஐஜி அசரா கார்க் கனகச்சிதமாக இருவரும் தப்பிக்க முடியாத அளவுக்கு இந்த வழக்கை கொண்டு வந்து விட்டார். ஆதாரம் கிடைத்தவுடன்,
இது சம்பந்தமாக திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசை பூவை ஜகன் மூர்த்தி வீட்டிற்கு செல்ல, அங்கு அவர் இல்லை. இவர் தப்பித்து இவர் ஹை கோர்ட்டில் முன்ஜாமின் வாங்குகிறார். முன் ஜாமின் வாங்கும் போது நீதிபதி வேல்முருகன் சரியான கேள்விகளை கேட்கிறார். உனக்கு மக்கள் எதற்காக வாக்களித்து உன்னை எம்எல்ஏ வாக தேர்ந்தெடுத்தார்கள்? கட்டப்பஞ்சாயத்து செய்யவா? எந்த தொகுதி? எவ்வளவு வித்தியாசத்தில் ஜெயித்தீர்கள்? இவ்வளவு கேள்வியும் கேட்கவே, வெட்கி குனிந்து விட்டார் பூவை ஜெகன் மூர்த்தி. பிறகு, அவரை கைது செய்யாமல் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்கம்படி அவருக்கு உத்தரவிட்டார்.
காவல்துறையின் விசாரணையில் ,தற்போது புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி மீது ஆள் கடத்தல், மிரட்டல் மற்றும் அத்துமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திருவலங்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும்,
ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்டார். அதனால், ஏடிஜிபி கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருடைய வாகனத்தை அனுப்பியதும் தவறு. உடந்தையாக இருந்ததும், இவ்வளவு பெரிய பொறுப்புள்ள அதிகாரி, இந்த கீழ்த்தரமான வேலைக்கு இறங்கி போனதும் தவறு. அதேபோல் ஜெகன் மூர்த்தி இருவரும், தங்களுடைய பதவி, பொறுப்புகளை பற்றி கவலைப்படாமல்,50 லட்சம் பணத்திற்காக இந்த ஆள் கடத்தல் வேளையில் ஈடுபட்டது. இன்று தமிழகம் முழுவதும் இப்படிப்பட்ட ஒரு உயர் அதிகாரிக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு எழுதி விட்டார்.மேலும்,
இந்த வழக்கு இவ்வளவு கனகச்சிதமாக நடவடிக்கை எடுத்தவர் வடக்கு மண்டல ஐஜி அசரா கார்க் என்கிறார்கள். தவிர, இவர் ஒரு நேர்மையான அதிகாரி என்று காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுபவர். அது மட்டுமல்ல, இவர் தென்மண்டல ஐஜி ஆக இருந்த போது கூட, அந்தப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் ,இல்லீகல் ஆக்டிவிட்டீஸ் எல்லாமே கட்டுப்படுத்தியதாக இப்போதும் பேசுகிறார்கள். இந்த சம்பவத்தில் காவல்துறையின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது அவசியம்.

மேலும், நாட்டில் கட்டப்பஞ்சாயத்து பெரும்பாலும் ஜாதி அரசியல் கட்சிகளால் தான் அதிகம் நடக்கிறது. இந்த விஷயம் காவல்துறைக்கும் தெரியும்.இது பற்றி தமிழகமே பேசுகின்ற போது, திருமாவளவன் வாய் திறக்கவில்லை.சீமான் வைத்திருக்கவில்லை