சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என்ன ?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் வெளிநாட்டு-செய்திகள்

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைக்கு லைசன்ஸ் வாங்கும் போது ,லைசன்ஸ் கொடுக்கும் வருவாய் துறை அதிகாரிகள் அவருடைய கல்வித் தகுதி என்ன? அவருடைய முதலீடு என்ன? அவர் எப்படிப்பட்ட குடோன் வைத்திருக்கிறார்? அந்த குடோன் பாதுகாக்கப் பட்ட குடோனா? அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? எதனால், ,இந்த விபத்து ஏற்படுகிறது? என்பது குறித்து எதுவும் அவர்களிடம் ஆய்வு செய்வதில்லை.

மேலும், ஒரு பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரிபவர் அரை குறை வேலை தெரிந்து கொண்டவுடன், அவர் உடனே இன்னொரு பட்டாசு தொழிற்சாலையை உருவாக்குவார். அப்படி உருவாக்கும் இவர், முறைப்படி அந்த கெமிக்கல் பற்றிய தன்மைகள் என்ன? அது எவ்வளவு உஷ்ணத்தில் இருக்க வேண்டும்? எவ்வளவு உஷ்ணமானால் ,அது வெடிக்கும்? எதுவுமே தெரியாது.

மேலும், பணம் சம்பாதிக்கும் தொழிலில் இது பொன் முட்டையிடும் வாத்து . அதாவது பட்டாசு வியாபாரம் ,உள்ளூர் வியாபாரம் மட்டுமின்றி ,வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும், பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகிறது.அதனால்தான் சிவகாசியில் இந்த தொழிலை வந்த, வரைக்கும் செய்து கொடுத்து, பணத்தை பார்க்கிறார்கள். அதில் எவ்வளவு உயிர் போனாலும், அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.தவிர,

தொழிற்சாலை பாதுகாப்பு அரசு அதிகாரிகள், சொல்லக்கூடிய பாதுகாப்பு சம்பந்தமான, எந்த ஒரு விதிமுறைகளையும், பின்பற்றுவதில்லை. ஆனால், அங்குள்ள காவல் துறை அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் வரை பணத்தைக் கொடுத்து, சரி கட்டும் வேலையில் இந்த பட்டாசு தொழிற்சாலைகள் இயங்குவதால், தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கிறது.

மேலும், தொழிலாளர்களின் உயிர் போனாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், சாலை விபத்தில் எத்தனையோ உயிர் போகிறது. நோயால், ஹார்ட் அட்டாக்கில் எத்தனையோ பேர் உயிர் போகிறது. அதற்கெல்லாம் அரசாங்கம் என்ன செய்து விட முடியும்? இந்த கணக்கை சொல்கிறார்களாம் பட்டாசு தொழிற்சாலை முதலாளிகள்.

மேலும்,சென்னையில் இருந்து தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் வாரம், வாரம் ஆய்வு செய்தாலும், இவர்கள் வருவது ,போவது எல்லாம் கண்காணித்து உடனே தகவல் சொல்ல வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும், உளவு வேலை பார்ப்பதாக தகவல் வெளியாகிறது.

அது மட்டுமல்ல, சென்னைலிருந்து ஆய்வு செய்ய செல்லும் ,அதிகாரிகளுக்கு ,அவர்கள் முறையான பதில் கூட சொல்வதில்லை. எல்லாரையும் பணம் கொடுத்து சரி கட்டலாம் என்று நினைக்கிறார்கள். இது உயிர் பிரச்சனை என்பதால் உயர் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்படுகிறது. அங்கே மிரட்டும் துணியிலும் பேசுகிறார்களாம். இந்தப் பிரச்சனை கடந்த ஆட்சி முதல், இந்த ஆட்சி வரை இப் பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால்! அரசின் கடுமையான சட்ட விதிகளை பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும்.

ஆனால் இவர்களுக்கு பின்னால் அரசியல் கட்சிகள் ,அரசியல் ஆளுமை இருப்பதால் அது ஒரு பக்கம் இந்த உயிர் பிரச்சனைகளை பற்றி கண்டு கொள்ளாமல், பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தீர்வு?

பட்டாசு இன்று மக்களின் வாழ்க்கையோடு மகிழ்ச்சியிலும், துக்கத்திலும், கலந்து விட்ட ஒன்று. இருப்பினும், அதை முறையாக செய்து உயிர்பலி அக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பும் ,அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பும், கொடுக்க வேண்டியது அரசின் முக்கிய கடமை.

அதனால், தமிழக அரசு ஒவ்வொரு பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே அரசியல் உள்ளே வராமல், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ,இது போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும், மறைமுகமாக அவர்களைக் காப்பாற்ற உறுதுணையாக இருக்கிறார்கள்.

இதையெல்லாம் சரி செய்யாமல், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கும் உயிரிழப்புக்கும் தீர்வு காண முடியாது. நடவடிக்கை எடுக்குமா ? -புதிய அரசு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *