தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

Uncategorized அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள்

தமிழ்நாட்டில் எத்தனையோ ,அரசியல் கட்சித் தலைவர்களும் ,அமைச்சர்களும் வந்தார்கள், போனார்கள். ஆனால், காமராஜர் மற்றும் எம்ஜிஆர் இன்று வரை அவர்களுடைய அரசியல்! மக்களிடம் பேசப்படுகிறது.

அதற்கு என்ன காரணம்? என்றால்! அவர்கள் இருவரின் எளிமை தான். காமராஜர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். எளிமையாக வாழ்ந்தவர் .ஆனால், எம்ஜிஆரும் எளிமையான குடும்பத்தில் பிறந்து, வறுமையில் வாழ்ந்து ,பிறகு உச்சபட்ச சினிமா நட்சத்திரமாக வலம் வந்தவர். அவருடைய எளிமை உண்மையிலேயே காமராஜரை விட உயர்ந்தது.

ஏனென்றால், எம்ஜிஆரை பார்க்க யார் சென்றாலும் ,அவர்களை சாப்பிடாமல் வீட்டுக்கு அனுப்புவதில்லை. நாம் அதைப் பார்க்கவில்லை என்றாலும், மக்கள் இன்றும் அதை பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல,

ஒரு பொதுப் பிரச்சனையாக இருக்கட்டும் ,அல்லது சமூகப் பிரச்சனையாக இருக்கட்டும், அவரைப் பார்க்க வேண்டும் என்றால், செக்யூரிட்டிகள் உடனே ஓடி வந்து, என்ன? ஏது ?என்று கேட்டு, விசாரித்து முதலமைச்சர் எம்ஜிஆருக்கு சொல்ல வேண்டும். ஜெயலலிதாவோ அல்லது எடப்பாடியோ கடைபிடிக்கவில்லை .

மேலும்,இன்று ஒரு சிறிய கட்சி நடத்தக்கூடிய ஒருவர் ,எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவரை சந்திக்க வேண்டும் என்று கிரீன் வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கே காவல்துறையினரே பார்க்க முடியாது .எதுவாக இருந்தாலும் அதிமுக அலுவலகத்தில் போய் அங்கே சொல்லுங்கள் .

அங்கிருந்து அப்பாயின்மென்ட் வாங்கினால் தான், இங்கே பார்க்க முடியும் என்று தெரிவிக்கிறார்கள் ‌. இது எல்லாம், மக்கள் பணி செய்யக்கூடிய ஒரு அரசியல் கட்சி தலைவர்களுக்கு, இந்த பந்தா இருக்க கூடாது. பணத்தைக் காட்டி அரசியல் செய்வது, அரசியல் தெரியாத மக்களிடம் அதிமுகவும், திமுகவும் ,ஐம்பது ஆண்டு காலமாக எம்ஜிஆருக்கு பிறகு தான், இந்த அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்,எம்ஜிஆர் அரசியலில் இருந்தவரை, வாக்காளர்களுக்கு வாக்களிக்க யாருக்கும் ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டார். அப்படி இருந்த ஒரு அரசியல் கட்சி, எப்படி எல்லாம் பணத்தை கொடுத்து ஓட்டு வாங்குகிறது? தவிர

குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு பணம் கொடுத்தால் தான், வாக்களிப்போம் என்ற நிலைக்கு உருவாக்கி விட்டார்கள். ஏனென்றால், இது வாங்காமல் ஓட்டு போட்டால், இவர்கள் என்ன எங்களை முன்னேற்றி விடப் போகிறார்கள்? என்பது அவர்களுடைய கேள்வி?

மேலும்,இது எவ்வளவு பெரிய தவறு? என்பது பணம் வாங்கும் மக்களுக்கு தெரியாது. உங்களிடம் ஒரு ரூபாய் கொடுத்தால், அவர்கள் பத்தாயிரம் ரூபாய் அதற்கான உழைப்பை எடுத்து விடுவார்கள். அதுதான் ஊழல்! இந்த பணம் மீண்டும், மீண்டும் ஊழலில் சுற்றி வருகிறது.

அதனால், தான் அதிமுகவும், திமுகவும், மாறி, மாறி மக்களை பணம் கொடுத்து ஓட்டுக்களை விலைக்கு வாங்கி பதவிக்கு வர துடிக்கிறார்கள். தற்போது அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள், விஜய்க்கு வாக்கு சதவீதம் ஏற வாய்ப்பு உள்ளது.

அடுத்தது, எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் ஃபேஸ் வேல்யூ உள்ள தலைவர்களாக இல்லை . விஜய் இந்த இருவரின் அரசியல் தகுதி, மிகவும் குறைவாக இருப்பதால், அந்த மக்கள் செல்வாக்கு, அது விஜய்க்கு சாதகமாக உள்ளது.

மேலும்,விஜையும், எம்ஜிஆர் போல அரசியல் தலைவராக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் அவருடைய இடம் ஒரு வெற்றிடம் தான். சும்மாவே பணம் வாங்கிக் கொண்டு ,எழுதிக் கொண்டிருக்கிற பத்திரிகைகளும், பேசிக் கொண்டிருக்கிறார் youtuber களும், அண்ணாமலையை ஹைலைட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இது எல்லாம் அரசியல் தெரியாத மக்களிடம் வேண்டுமானால், இந்த பேச்சுக்கள் ஏடுபடும். .அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? கேட்பார்கள். மேலும்,அவர்களுக்கு மக்களதிகரத்தின் செய்திகள் சரியான முறையில் உண்மையை வெளிப்படுத்துகிறது என்றுதான் இன்று வரை பேசுகிறார்கள்.

விஜய் மக்களை பார்க்க ஒரு எளிமையான தலைவராக இல்லை. அவரும் ஒரு காஸ்ட்லியான தலைவராக தான் இருக்கிறார். காரில் ஏறி கையை காட்டிவிட்டு, ஆட்டிவிட்டு போவது தலைவருக்கு ஆன தகுதி இல்லை.

மேலும், சமூக ஊடகங்களில் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் அரசியல் என்றால் என்ன? எதற்கு அரசியலுக்கு வருகிறீர்கள் ?என்ற உண்மை கூட மக்களிடம் சொல்ல தகுதி இல்லாத ஊடகங்கள் தான் தமிழ்நாட்டில் இருக்கிறது.

ஊழலுக்கும், மக்கள் பணிக்கும் தகுதியற்ற அரசியல்வாதிகளை தேர்தலில், அரசியல் கட்சி பாரபட்சம் இன்றி தோற்கடியுங்கள் . உழைப்பவர்கள் முன்னேற்றத்திற்காக தான் அரசியலேத் தவிர, ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றத்திற்கு அரசியல் அல்ல என்பது 2026 தேர்தலில் தமிழக வாக்காளர்கள் இந்த அரசியல் கட்சிக்காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

மேலும்,சினிமாவை பார்த்துவிட்டு அரசியல் இது தான் என்று தீர்மானிக்காதீர்கள். இந்தக் கார்ப்பரேட் ஊடக, பொய்களை நம்பி, கார்ப்பரேட் அரசியல்வாதிகளிடம் ஏமாறாதீர்கள். நீ கோடீஸ்வரன் ஆக இருக்கலாம். நீ தொழிலதிபராக இருக்கலாம். ஆனால், என்னுடைய முன்னேற்றுவதற்கு உன்னுடைய அரசியல் என்ன?

தவிர,உன் கார் பின்னாடி 100 கட்சி எடுப்பு களை, கத்த சொல்லி, உனக்கு பின்னாடி ஒரு நூறு காரு வலம் வர வைத்து, அதனால், எனக்கு என்ன பிரயோஜனம்? மக்களுக்கு என்ன பிரயோஜனம்? மக்கள் பணியை செய்பவர்கள், மக்களுக்காக உழைப்பையும் ,அர்ப்பணிப்பும் கொண்டவர்கள், எந்த காலத்திலும் போலியான அரசியலை செய்ய மாட்டார்கள்.

ஆனால், இப்போது தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் முதல் தலைவர்கள் வரை, இந்த போலி அரசியலை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால், மக்கள் விழித்துக் கொண்டு, இந்த போலி அரசியலில் இருந்து ஏமாறாமல், தகுதியானவர்கள் யார் என்பதை ஆய்வு செய்யுங்கள்? தகுதியான அரசியல் கட்சி எது என்பதை ஆய்வு செய்யுங்கள்? பணம் ஒரு பொருட்டல்ல,

அது நம் உழைப்புக்கு கிடைக்க கூடிய ஊதியம். அந்த ஊதியத்தை ஒழுங்காக கொடுத்தாலே போதும். அப்படிப்பட்ட ஒரு அரசியல் கட்சி எது ?என்பதை தேர்வு செய்ய வேண்டும். பொய்களை சொல்லிவிட்டு ,அதை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் காட்டிவிட்டு, நீங்கள் ஏமாந்து மீண்டும் ,இன்னொரு ஐந்தா umண்டு தமிழ்நாட்டில் உழைக்கும் வர்க்கம் ஏமாறக்கூடாது.

அதனால், வரும் தேர்தலில் விழிப்புடன் இருந்து வாக்களித்தால் தான், மக்கள் இவர்களுக்கு எஜமானவர்களாக இருக்க முடியும். இல்லை,காசுக்காக வாக்களிப்பவர்கள் என்றால்,அவர்களுக்கு இந்த அரசியல்வாதிகள் தான் எஜமானர்களாக ஆகி விடுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *